வீட்டை காலி செய்ய வேண்டும் என்று மத்திய வீட்டு வசதித்துறை கூறியபின் தான் தங்கியிருந்த வீட்டிற்கு கூடிவரும் பா.ஜனதா எம்பியான அனில் பலூனியை தேனீர் விருந்துக்கு அழைத்துள்ளார் பிரியங்கா காந்தி. சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர்க்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்ககளிக்கப்பட்டு சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசு சார்பாக வீடு வழங்குவதற்கு சட்டத்தில் எதும் […]
Tag: அரசியல்
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்த உண்மையை பேசுவதே தேசபக்தி. நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே ஓர் இந்தியனாகிய நமது தலையாய பணி. நமது மண்ணை சீனா ஆக்கிரமித்தது தெளிவாக தெரிகிறது. இது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்களை பார்த்த பின்னும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசிய பின்னும் நமது […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொலி வாயிலாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைத்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம். 2. கொரோனா காலத்தில் வற்றிப்போன வாழ்வாதாரத்தை , மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி வழங்க வேண்டும் என அ.தி.மு.க. அரசை இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 3. உயிர்த் தியாகம் செய்த கொரோனா […]
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் போது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யும் நடவடிக்கையை வரும் 24-ம் தேதி வரை ஒத்திவைக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்க்கும் வகையில் சட்டப்பேரவை சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று […]
அரசை கவிழ்க்க எதற்காக செப்டம்பர் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே பாஜக மீது சாடி இருக்கிறார். மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தன்னுடைய 60-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-” மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் நேர்மறையாக இருக்கின்றன. மூன்று கட்சிகளின் அனுபவத்தோடு இந்த அரசு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. எனது தலைமையிலான அரசாங்கத்தினுடைய எதிர்காலமானது எதிர்க்கட்சிகளின் […]
நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாராந்திர வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இன்று நடைபெற்ற 67வது மங்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இரண்டு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். ஒன்று இன்று கார்கில் நினைவு தினம் கொண்டாடப்படுவது. இதையடுத்து அந்தப் போரில் உயிர் நீத்த தியாகிகள் மற்றும் வீரர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு நமது […]
தேவைப்பட்டால் பிரதமர் இல்லத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவாகியுள்ள நிலையில், துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டார். பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடிய […]
சட்டசபையை கூட்ட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் அசோக் கெலாட்க்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மனக்கசப்பால் மோதல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டது மட்டுமில்லாமல், சபாநாயகர் பைலட் உட்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் கட்சிக்கு விரோதமாக செயலாற்றியதாக நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகரின் நோட்டீஸை எதிர்க்கும் விதத்தில் சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். […]
விழுப்புரம் அருகே அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அரசியல் மாற்றம் என்பது காலங்களுக்கு ஏற்ப அடிக்கடி மாறுபட்டுக் கொண்டே இருக்கும். காமராஜர் வரை காங்கிரஸ் ஆட்சி, காமராஜருக்குப் பின் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி, அதற்குப் பின், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பின் இரண்டு கட்சிகள் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்தன. தற்போது இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கும் அடுத்த நிலையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த […]
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று போராட்டம் நடத்திய நிலையில் அரசியலமைப்புபடியே செயல்படுவேன் என்று கவர்னர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று, சட்டசபையை நிறுவ வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் செயல்பட்டனர். சட்டசபை கூட்டத்தை நிறுவுவதற்கான தேதியை தெரிவிக்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என்றும், மதிப்புக்குரிய கவர்னர் அவர்களே சட்டசபையை காப்பாற்றுங்கள் என கோஷமிட்டவாறே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏ.க்களிடம் கவர்னர் கல்ராஜ் […]
தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அவர்தான் முதலமைச்சர் என்று நடிகர் எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் கற்பிக்கும் பயிற்சி வகுப்புகளை தனியார் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் கே.பிள்ளை , நடிகர் எஸ்வி சேகர் மற்றும் காணொளி காட்சி மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் […]
கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் விடுபட்ட குடியிருப்புகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை 75 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் தாமோதரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் முதலமைச்சர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்ருக்கு மத சாயம் பூசக்கூடாது. எம்.ஜி.ஆர் சிலை மீது மதச் சாயம் பூசி அவர்கள் […]
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று நடிகர் எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் கற்பிக்கும் பயிற்சி வகுப்புகளை தனியார் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் கே.பிள்ளை , நடிகர் எஸ்வி சேகர் மற்றும் காணொளி காட்சி மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி […]
புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் புதுச்சேரி முதலமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில் இன்று ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல் அமைச்சர் நாராயணசாமி மிகவும் ஆவேசமான கருத்துக்களை வெளிப்படுத்தினார். குறிப்பாக திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்து இருப்பேன். புதுச்சேரி அரசை முடக்கும் சதி நடந்தது […]
கொ ரோனா பற்றியும் இந்திய பொருளாதாரம் பற்றியும் நான் தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். ஆனால் யாரும் கேட்பதாக இல்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சீனாவின் லடாக் எல்லை பகுதி பிரச்சினையில் மத்திய அரசினுடைய அணுகுமுறையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தொடர்ந்து குற்றம்சட்டி வருகிறார். இது பற்றி அவர் ஏற்கனவே 2 வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி மீது அவர் கூறிய விமர்சனங்களுக்கு பாரதீய ஜனதா கட்சி சார்ந்த தலைவர்கள் […]
டெல்லியில் இன்று காலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. பல்வேறு மாநில தேர்தல் அலுவலர்கள் கருத்தை கேட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் குடியாத்தம், திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நடத்த வாய்ப்பு இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு […]
கொரோனா பேரிடரால் ஒட்டுமொத்த நாடுகளில் பொருளாதாரம் முற்றிலும் சிதைத்துள்ளது. இதில் இந்தியாவும் தப்பவில்லை, தமிழகமும் தப்பவில்லை. கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே அதிகம் நோய் தொற்று கொண்ட மாநிலமாக இரண்டாவது இடத்திலிருக்கும் தமிழகம் கொரோனா ஊரடங்கு காலத்தால் சிதைந்துபோன பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று முதலீடுகளை கவர்ந்து வந்த ஒப்பந்தங்களை அனுமதி அளித்து வருகின்றது. […]
போலி இ- மெயில் புகாரில் யூடியூப் சேனலை சேர்ந்த மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீசா வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் என்ற பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தனியார் தொலைக்காட்சி இ- மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை […]
தமிழகத்தில் விடுபட்ட மரணங்கள் என்று நேற்று தமிழக அரசு அறிவித்தது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கொரோணா பரவலைத் தடுக்கும் அக்கறை இவர்களுக்கு இல்லை. கொரோனா பரவல் இல்லையென்று மறைந்தால் போதும், கொரோனாவால் மரணம் அடைந்தவர்களை காப்பாற்றும் அக்கறை கிடையவே கிடையாது. ஆனால் மரணத்தை மறைத்தால் போதும். இப்படி நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்காங்க. மே மாதம் 28ஆம் தேதி இறந்த ஒருவரின் மரணம் ஜூன் 7ஆம் தேதி அரசின் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்ட ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சச்சின் பைலட் உள்ளிட்ட ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்குமாறும் சபாநாயகருக்கு மாநில ஐ-கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வர இருக்கின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் மேல்முறையீடு செய்தார். சபாநாயகரை கட்டுப்படுத்துவது நீதிமன்றத்தின் பணி […]
தமிழகத்தில் காலியாக உள்ள இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இதனை வெளியிட்டுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மூன்று சட்டமன்ற தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. திருவெற்றியூர், குடியாத்தம் மற்றும் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி விட்டது என்ற அறிவிப்பு வெளியாகி 6 மாத காலத்திற்குள்ளாக தேர்தல் ஆணைய விதிப்படி இடைத் தேர்தலை நடத்த வேண்டும். […]
தமிழகத்தில் இன்னும் ஒன்பது, பத்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் காய்களை நகர்த்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் கடந்த சில மாதங்களாகவே தேர்தலுக்கான பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு திரை பிரபலங்களை தனது கட்சியில் இணைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகரும், தயாரிப்பாளருமான பிரமீட் நடராஜன் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். […]
குறைவாகவே சம்பளம் வாங்கி வரும் தான் கொரோனா காலத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள், தற்போது ‘ஆன்லைன்’ தளத்திலேயே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘டேனி’ படமானது வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ‘ஜீ5 ‘ என்ற தளத்தில் வெளிவர இருக்கின்றது. அதைப்பற்றி வரலட்சுமி சரத்குமார் அவர்கள் தனது கருத்துக்களை கூறியுள்ளார். தற்போது நடித்த டேனி படத்தில் கொலையை விசாரணை […]
பசுவின் கோமியத்தை குடிப்பதால் கொரோனாவை எதிர்த்துப் போராடும் தன்மை கிடைக்கும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கூறியுள்ளார். மேற்கு வங்கம் மாநில பாஜக தொண்டர்கள் இடையே துர்காபூரில் காணொளிக் காட்சி வழியாக பேசிய பாஜக தலைவர்,”நான் பசுவை பற்றி பேசினால் சிலருக்கு பிடிக்காது. கழுதைகளுக்கு பசுவின் அருமை தெரிய வாய்ப்பில்லை. இது இந்தியா பசுவை தெய்வமாக வழிபட்ட கடவுள் கிருஷ்ணரின் பிறப்பிடம். நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் பசுவின் கோமியத்தை குடிக்க வேண்டும். மது […]
ஒன்றரை வருடமாக சச்சின் பைலட் தன்னிடம் பேசவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் முதலமைச்சர் அசோக் கெலாட்டிருக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் அம்மாநில அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அசோக், “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எங்களுக்கு இடையே எந்த உரையாடலும் இல்லை. ஒரு முதலமைச்சருடன் பேசாத, அவரது ஆலோசனை எடுக்காத, அவருடன் எந்த ஒரு உரையாடலையும் வைத்திருக்காத ஒரு அமைச்சரை […]
தமிழ் கடவுள் முருகனை வழிபடும் கந்த சஷ்டி கவசத்தை சர்ச்சையாக விமர்சனம் செய்ததாக புகார் எழுந்ததையடுத்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலின் தொகுப்பாளர் சுரேந்திரன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பூதாகரமாக எழுந்துள்ளது. பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள், விவாதங்கள் அனல் பறக்கின்றந்தன. இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அமைச்சர் ராஜேந்திர […]
கந்தசஷ்டி கவசம் தொடர்பாக ஆபாசமாக வீடியோ வெளியிட்ட சுரேந்திரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பதிவு செய்த கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திரன் நேற்று அவர் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று அவரை விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தார்கள். இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவரின் பின்னணி குறித்தும், […]
கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. இயற்கையைத் தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து […]
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்ற குழப்பத்தின் காரணமாக துணை முதல்வர் அசோக் கெலாட் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயன்று வருவதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் அரசியல் விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, பாஜக ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தின் மூலம் ராஜஸ்தானில் […]
ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இரண்டாவது முறையாக ஜெய்ப்பூர் இருக்கக்கூடிய தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் துணை முதல்வராக இருக்கக்கூடிய சச்சின் பைலட் மற்றும் அவர்களுடைய ஆதரவு எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தை இரண்டாவது முறையாக புறக்கணித்தனர். இந்த கூட்டத்தில் […]
தமிழகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், குடியாத்தம் சட்டர்மன்ற தொகுதி காலியாக உள்ளன.மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு தேதி முடிவு செய்யவில்லை என்றாலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலை ஏற்ப்பட்டுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகிய இருவருக்குமான அதிகார போட்டி முற்றியுள்ளது. துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். டெல்லியில் முகாமிட்டு இருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 3 பேர் ஜெய்ப்பூருக்கு திரும்பிச் சென்று விட்டதாக தகவல் வந்திருக்கிறது. ஆனால் […]
திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் கள்ளத்துப்பாக்கி வைத்து கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது… 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது, நெறி தவறி நடக்க கூடாது என்று கையெழுத்து வாங்கி பிரச்சாரம் செய்தார்கள், இதனை திமுகவினர் பேப்பரில் கூட போட்டார்கள். ஆனால் இப்போது கட்ட பஞ்சாயத்தை எல்லாம் மீறி துப்பாக்கி துப்பாக்கி சூடுக்கு சென்று உள்ளார்களா ? என்ற கேள்வி எழுப்பிய போது, எந்த ஒரு கட்சியும் […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக என்று சொன்னாலே ஒரு வன்முறைக் கலாச்சாரம், ஊழல்வாதிகள். இந்த இரண்டுமே திமுகவுக்கு அடையாளம். வன்முறை, ஊழல் இந்த ரெண்டு விஷயமும் திமுகவின் அடிப்படை கொள்கை. இது அவுங்க ரத்தத்திலேயே ஊறுனது.ஆரம்ப காலத்தில் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து எல்லாமே திமுக ஆட்சிக் காலத்தில்தான் செய்யப்பட்டது. நில அபகரிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு 2006 – 11 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட போது அம்மா அவர்கள் […]
கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாடுமுழுவதும் சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், அதனை தக்க வைக்க முடியாமல் பாஜகவிடம் இழக்கிறது. அதிகமான தொகுதி வென்றாலும், குறைவான தொகுதி வென்ற பாஜகவிடம் பறிகொடுத்து ஆட்சியை பிடிக்க முடியாத அளவிற்கு செல்கிறது. மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து துவண்டு போன காங்கிரஸ்சுக்கு 2018 […]
நான் உரிமம் பெற்று இரண்டு துப்பாக்கி வைத்துள்ளேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில், தமிழக முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் நான் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டேன். இன்று முழு ஊரடங்கை மக்கள் முழுவதுமாக பின்பற்றியுள்ளனர். இதற்கு மக்களின் ஒத்துழைப்பே காரணமாகும். சென்னையில் 200க்கு மேற்பட்ட சோதனைச்சாவடியில் போலீசார் ஊரடங்கை கண்காணித்தனர். கொரோனா பரவுதலை […]
ஸ்டாலின் குளறுபடியில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் போன்றோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”வீரன் அழகுமுத்துக்கோன் புகழையும் வரலாறையும் நினைவில் கொண்டு , 1991-96 ஆட்சியில் ஜெயலலிதா அவரின் சிலையை நிறுவியுள்ளார். பாளையக்காரர்கள் யாரும் ஆங்கிலேயருக்குக் கப்பம் கட்டக்கூடாது என கோரிய மாமன்னன் அழகு முத்துகோன். ஆங்கிலேயரிடம் […]
கொரோனா, டிக்டாக் இந்த இரண்டு விஷயங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அளவில் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கக்கூடிய விஷயங்களில் டிப்டாக் தடையும், கொரோனாவும் இடம்பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அதுகுறித்த எண்ணங்களும், பேச்சுக்களும் மக்களிடையே அதிகரித்து உள்ளன. அதே சமயத்தில் இத்தனை நாட்களாக மக்களின் சிறந்த பொழுதுபோக்காக பலருக்கு மிகச் சிறந்த நடிப்புத் திறனை காட்டும் தலமாக டிக் டாக் செயலி விளங்கி […]
மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தி வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை ஜலசக்தி மிஷன் என்று அடிப்படை விவரம் கூட தெரியாமல் அறிக்கை விடுத்துள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கைகள், அரசியல் உள்நோக்கத்தில் தினம் ஒரு அறிக்கை என்றால் அது மு க ஸ்டாலின் தான் என்று உலகமே நகைக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திலும் ஸ்டாலின் அறிக்கை […]
கடந்த சில வருடங்களாக யூடியூப் மூலம் தமிழக இளைஞர்கள், மாணவர்களுக்கு அரசியல் வகுப்பு, அரசியல் அறிவு, சமூகப் பார்வை, பொருளாதாரப் பார்வை என பல தரவுகளை விளக்கி பலரிடமும் பாராட்டப் பெற்றவர் இணைய ஆசிரியர் மாரிதாஸ். இவர் யூடியூப் மூலமாக உலகலாவிய கருத்துக்களை தமிழக மாணவர்களுக்கு தெரிவித்து வருகிறார். இதனால் இவருக்கு என்று ஒரு தனி கூட்டமே உண்டு. இவர் எப்போது வீடியோ பதிவிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் வகையில் பலரின் மனதில் இடம் பிடித்துள்ளார் மாரிதாஸ். […]
அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாவார் என்ற தகவல் சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் சிறையில் இருந்து விடுதலையாகும் பட்சத்தில் தமிழக அரசில் பல்வேறு மாற்றம் ஏற்படும் என்றும், அவர் மீண்டும் கட்சியில் இடம் பெறுவார் என்றும், ஆட்சியை வழி நடத்துவார் என்றும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த வகையில் இது குறித்த கேள்வி இன்று அமைச்சர் […]
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சில பாடங்களை நீக்கியது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விளக்கம் அளித்துள்ளார். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சில பாடங்களை நீக்கியது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், ட்விட்டர் பக்கத்தில் விளக்கத்தை அளித்து இருக்கிறார். அதில், சிபிஎஸ்சி பாடப்பிரிவில் முக்கியமான பாடங்கள், குறிப்பாக இறையாண்மை உள்ளிட்ட முக்கியமான சில பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும், தயவுசெய்து குழந்தைகளின் கல்வி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் […]
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு உச்சந்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றது. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுகவின் சக்கரபாணி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இதில் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சபாநாயகர் முடிவில் […]
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியும், திமுக தலைமையிலான கூட்டணியும் எலியும், பூனையுமாக தேர்தலை சந்தித்தன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றதையடுத்து, தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக திமுக கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணி கட்சியோ அல்லது திமுகவோ அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சொன்னாள் அதிமுக கண்டு கொள்ளாமல் இருந்தது. […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.தொகுதியின் #மக்கள்பிரதிநிதி(MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு என்று பதிவிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.தொகுதியின் #மக்கள்பிரதிநிதி(MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு..@CMOTamilNadu @Vijayabaskarofl — Thol. […]
மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கிவைத்தார். பிகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெறவுள்ளதையடுத்து அதற்கான முதற்கட்ட பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தற்போது ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பணியில் களம் இறங்கியுள்ளார். இதன் முதல்கட்டமாக காணொலி மூலம் பீகார் மாநிலத்தின் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு ராகுல் பேசினார். அதில் அவர் தேர்தல் பரப்புரையில் முழு மூச்சாக இறங்க போவதாக கூறியுள்ளார்.மேலும் ராகுல் […]
சாத்தான்குளம் காவல் சித்ரவதை மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாதென விசிக சார்பில் வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுமென்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 காவல் உதவி ஆய்வாளர், 2 காவல் அதிகாரிகள் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. […]
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் செய்துள்ள ட்விட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை மகன் சித்தரவதை மரணம் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் சம்மந்தபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகனேஷ் சிபிசிஐடி போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டுகின்றது. அதே போல மற்றொரு எஸ்.ஐயை சிபிசிஐடி போலீசார் தேடி சென்ற போது தலைமறைவாகி விட்டதாகவும், அவரின் செல் […]
சாத்தான்குளம் சம்பவத்தில் நடிகர் ரஜினிகாந்த முக.ஸ்டாலினுடன் இணைந்துள்ளது அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் அங்குள்ள காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, போலீஸ் அதிகாரிகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து அவர்கள் மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழகம் முழுதும் பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரித்து அறிக்கை அளிக்கும் படி […]
தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் மரண விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. இந்திய அளவில் இதற்கான கண்டனக்குரல் எழுந்து வருகின்றன. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து வருகிறது. இதனை சிபிஐ விசாரணைக்கு கொடுக்க தமிழக அரசும் முடிவு செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் அடுத்தடுத்து […]