தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 24-ம் தேதி துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது ரூபாய் 6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. இந்தப் பயணம் அரபு நாடுகளுடன் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணமாகவே தமிழக முதல்வர் துபாய்க்கு சென்றார் என அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் தமிழக முதல்வரின் துபாய் பயணத்தை பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சிகள் விமர்சித்தது. இந்நிலையில் […]
Tag: அரசியல்
வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு கொடுக்கும் பரிசு சொத்துவரி உயர்வு என்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த அம்மா மினி கிளினிக், குடிநீர் திட்டம், இலவச லேப்டாப் திட்டம் தொடருமா என்ற கேள்விஎழுந்துள்ளது. சென்ற 2018 அதிமுக ஆட்சியில் சொத்துவரி 50 % ஆக உயர்த்தப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் இது வரி உயர்வா, சொத்து அபகரிப்பா […]
பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வை நடத்த கூடாது என ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 பல்கலைகழகங்களில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என யு.ஜி.சி அறிவித்துள்ளது. இந்த தேர்வின் மூலமாகவே மாணவர்களுக்கான இளங்கலை பட்டப் படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும். கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியின் கீழ் மத்திய பல்கலைக் கழக பொது நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த தேர்வை 14 பல்கலைக் கழகங்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டது. இதை மற்ற பல்கலைக் கழகங்கள் […]
உத்தரபிரதேசத்தில் கடந்த 5 வருடங்களாக ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. அப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் தடுக்க ரோமியோஎதிர்ப்புப்படை உருவாக்கப்பட்டது. இப்படையைச் சேர்ந்தவர்கள் பொதுஇடங்களில் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆகியுள்ளார். புதிய அரசு பொறுப்பு ஏற்ற 100 நாட் களில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான செயல் திட்டத்தை அரசு வகுத்துள்ளது. […]
உதயநிதி ஸ்டாலினின் பேச்சால் கட்சித் தொண்டர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். சென்னை மாநகராட்சியில் உள்ள மயிலாப்பூரில் சர்வதேச கழிப்பறை விழா-2022 நடைபெற்று வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தி.மு.க கட்சியின் இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இவர் தீர்வுக்காண களம் என்ற தலைப்பில் வீடியோ பதிவினை வெளியிட்டு உள்ளார். இவர் மயிலாப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கக்கூஸ் […]
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி அரசின் 8 ஆண்டுகளில் எரிபொருள் வரியாக மத்திய அரசு 26,51,919 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் மத்திய அரசு சராசரியாக 1,00,000 ரூபாய் எரிபொருள் வரியாக வசூலித்துள்ளது. ஒரு சராசரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் விலைவாசி உயர்வால் […]
தனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, திருவொற்றியூரில் அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த […]
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு தந்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள்இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அமர்வு, வன்னியருக்கான 10.5% உள்இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பளித்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பாமகவினரிடையே தமிழக முதலமைச்சர் தம்பி மு.க ஸ்டாலினால் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ஒரே […]
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகமானது வழங்கியிருக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதனிடையில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளார்கள். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அந்த கட்சியில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். மேலும் உள்ளாட்சித்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றியை தேடித் தந்துள்ளார். அத்துடன் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வலுவாக காலூன்ற வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். […]
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையல் , “வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை” உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அவசரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக முடிவு எடுத்த – அ.தி.மு.க. ஆட்சிக்குத் தலைமை வகித்த இன்றைய எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி, அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறியதால்தான் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது” என்று அபாண்டப் பழி சுமத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த சட்டம் […]
சாத்தூர் மாரியம்மன் கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 27 ஆயிரத்து 236.600 கிராம் தங்க நகைகளை ஸ்டேட் வங்கி சாத்தூர் கிளையில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற.அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள கோயில்களை மூன்று மண்டலங்களாக பிரித்து இந்த கோயில்களிலிருந்து கிடைக்கும் தங்க நகைகளை சாமிக்கு பயன்படாத பட்சத்தில் அவற்றை மும்பையில் உள்ள மத்திய தங்கநகைகள் உருக்கும் […]
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு இரண்டு மினி பேருந்துகளை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “கோயில் சொத்துக்களை அபகரித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 2,450 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. பாஜக தலைவர் முடிந்தால் என்னை கைது செய்யப் பாருங்கள் என்று சவால் விடுத்து இருக்கிறார். ஒரு படத்தில் வடிவேலு நானும் […]
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் ப்ரியா, சென்னை மாநகராட்சியில் உள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை களைந்து தீர்வு காணும் விதமாக மண்டலம் 4 மற்றும் 5 […]
புதுவையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் பேட்டியளித்தபோது, 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த 127 தினங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் மக்கள் தலையில் சுமையை ஏற்றி வைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துவிட்டனர். ஆகவே மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசை தூக்கி எறிய போராட்டம் நடைபெறுகிறது. பக்கத்தில் உள்ள நாடுகள் போல் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழ்நிலைக்கு கொண்டு செல்கின்றனர். […]
ஊழல் முறைகேடு புகார்களுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றப்பட்டு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் இந்த பதவி மாற்றம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது ஒரு பெண் பெண் நிருபர் ஊழல் புகாருக்கு ஆளான போக்குவரத்து துறை ஆணையர் நடராஜன் வெறும் இல் பதவி மாற்றம் செய்யப்பட்டது சரியான செயல்தானா என கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு […]
நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவர் தமிழக பாஜகவின் கலாச்சாரப் பிரிவு தலைவியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவரை பாஜகவில் இருந்து நீக்கப் போவதாக சில வதந்திகள் பரவி வந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக காயத்ரி ரகுராம் இரண்டு ட்வீட்டுகள் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்னை பாஜக ஒருபோதும் விரட்டியடிக்காது. பாஜக பெண்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு கட்சி. இந்த பாரத தாய் பூமியில் பெண்களுக்கு மதிப்பு கூடிய ஒரே கட்சி […]
உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உதயநிதி ஸ்டாலின் வலம் வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்கிறார். இவர் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் அறிமுகமானார். இவருடைய முதல் படம் அமோக வெற்றி பெற்றது. இவர் நடித்த மனிதன் […]
சென்னை வளசரவாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் மாணவர் திக் ஷிக், உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது, தனியார் பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக கடந்த இரண்டு […]
தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் கசிந்து கட்சிக்குள் அதிர்வுகள் ஆரம்பமாகிவிட்டது. அதன்படி மாநில கலைப்பிரிவு தலைவர் பதவியிலிருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்படுகிறார். ex எம்.பி சசிகலா புஷ்பா பெண்கள் பிரிவு த் தலைவராக நியமிக்கப்படலாம். பால் கனகராஜ், விபி துரைசாமி, கேபி ராமலிங்கம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோருக்கு முக்கியமான பொறுப்புகள் வழங்கப்படும். பிற கட்சியினரை வளைப்பது தான் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கிய அசைன்மென்ட் என்று கூறுகின்றனர். இந்நிலையில் “என்னை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக பாஜக […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தற்போது மீண்டும் தமிழகம் திரும்ப உள்ள முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்பதே அரசின் நோக்கம். துபாய் பயணத்தை பற்றி ஒரு சிலர் பேசி அரசியலுக்காக தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். துபாயின் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஸ்டாலின், பின் அங்கு தமிழ் அரங்கை திறந்து வைத்தார். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பை ஏற்று அவரது ஸ்டூடியோவுக்கு சென்ற ஸ்டாலின், EXPO நிகழ்ச்சியை பார்வையிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் செய்தியாளர்களை […]
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அண்ணாமலையிடம் ரூபாய் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செய்தியாளரிடம் பேசிய அக்காட்சி எம்பி ஆர்.எஸ் பாரதி 24 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்புக் கோராவிடில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும். சொந்த பணத்தை முதலீடு செய்ய ஸ்டாலின் துபாய் சென்றதாக அண்ணாமலை கூறியது பச்சைப் பொய். சட்ட நடவடிக்கைகளை தொடங்கினால் அண்ணாமலை தாங்க மாட்டார் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இதற்கு […]
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை எதிராக நாளை காலை விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தினமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விருதுநகரிலே 24ஆம் தேதி காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், மாநில அரசு அரசியல் காரணங்களுக்காக நம் காவல்துறையை செயல்பட விடாமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்த இருக்கிறது. 22 வயது நம் சகோதரியின் […]
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு முதல்வர் மு க ஸ்டாலின் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்கள் விவாதத்தில் எம்.எல்.ஏ அசோக்குமார் பேசியபோது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல அறிவிப்புகள், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை எனவும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதாக அறிவித்தும் அதை பட்ஜெட்டில் சேர்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளதாவது “மக்கள் […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பத்து மாத காலமாக வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாக உயர்ந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ள விலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மரத்தின் விலை மட்டும் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. குழாய்களின் விலை 20 சதவீதம், மின் சாதனங்களின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளதால் சிக்கனமான […]
சசிகலா மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கடந்த 4-ஆம் தேதி நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலையில்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக திருச்செந்தூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள விடுதியில் தங்கி இருந்த சசிகலா அங்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்தார். இது ஆன்மீக சுற்றுப்பயணம் என்றாலும் அரசியல் ரீதியாக தனது ஆதரவு திரட்டவே அவர் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து புரிதல் இல்லாமல் விமர்சனம் செய்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை எண்ணூர் அனல் மின் நிலையம் விரிவாக்கம் குறித்து சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலைக்கு அனல்மின் நிலையம் விரிவாக்க திட்டம் குறித்து புரிதல் இல்லை. அதனால் அவருக்கு அவப்பெயர் […]
மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அறநிலையத்துறையின் காலம் பொற்காலமாக மாறியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். சென்னை வடபழனி முருகன் கோவிலில் இலவச திருமண திட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகளுக்கான திருமணம் இன்று நடைபெற்றது . இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார் . அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கோவில்களில் திருமணம் நடத்துவதாகவும், முதல்வர் மு. க ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, […]
மேகலாயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்,ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன் விவசாயிகளிடம் மட்டும் மோதி பார்க்காதீர்கள். அவர்கள் நீங்கள் நினைப்பதை விட மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதைப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள், எதையும் எடுத்துக் கொள்வார்கள். போராட்டத்தின் மூலம் பெற முடியாததை விவசாயிகளால் வன்முறை மூலம் பெற முடியும் என்பதை மத்திய அரசு ஒருபோதும் […]
பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி வைப்பதிலிருந்து சிபிஎம் பின்வாங்காது என்று மார்க்சிஸ்ட் கேரள மாநிலக் குழு தெரிவித்து உள்ளது. கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு கூட்டம் நடந்தது. இதில் மத்தியில் காங்கிரஸுடனான கூட்டணியில் கட்சிக்கு தெளிவு தேவை என்று சிபிஎம் மாநிலக் குழு தெரிவித்தது. ஏப்ரல் 23-வது கட்சி மாநாட்டில் முன்வைக்கப்படும் வரைவு அரசியல் தீர்மானம், சிபிஎம் காங்கிரஸுடன் இணையக்கூடாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. எனினும் பிளவுபடாத பாஜக எதிர்ப்பு முன்னணி […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணபலம், படைபலம், அதிகாரபலம் வெற்றி பெற்றிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]
சசிகலாவை மறுபடியும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதரவும், எதிர்ப்பும் அக்கட்சியின் இடையே வலுத்து வருகிறது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எப்படியாவது அதிமுகவில் சேர்த்துவிட வேண்டும் என்று துடித்து வருகின்றனர். இன்னொருபக்கம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்ட அதிமுக-வினர் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி சசிகலாவை மீண்டும் அக்கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். அதனைத் […]
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வர காரணம் அதிமுக இரண்டாக பிளவுபட்டது தான் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களே பேசத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக-அமமுக ஒன்றிணைக்கும் வரை அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என தொண்டர்கள் தெரிவித்தனர். எனவே உடனடியாக அமமுகவை அதிமுகவுடன் இணைக்க […]
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வு கால பலன்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் போக்குவரத்து பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்த திமுக ஆட்சி அமைத்து 10 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களையும், அகவிலைப் […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணையை ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் நேற்று (மார்ச்.7) மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்கள் சந்தித்து பேசியபோது, உண்மையாகவே உடல் நலக்குறைவு காரணமாகத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்தார். இதனிடையில் ஜெயலலிதாவின் மரணம் அரசியலாக்கப்பட்டு உள்ளது. எந்த முடிவாகினும் ஜெயலலிதாவே எடுத்து இருப்பார். தேவையின்றி எங்கள் சித்தி மீது பழிபோட்டு எதோ பண்ணிப் பார்த்தார்கள், […]
மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து மார்ச் 14-ஆம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சமூகநீதி பேசுபவர்களை வாக் வாங்குவதற்காக ஜாதி பிரிவை தூண்டி பிரிவினை ஏற்படுத்த நினைக்கின்றீர்கள் என குற்றம்சாட்டி அவர், உடல் நலக்குறைவால் தான் ஜெயலலிதா உயிரிழந்தார் என்பது தான் உண்மை. ஜெயலலிதா மரணம் அரசியல் ஆக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பாஜக கட்சி ரீதியிலான 8 மாவட்ட தலைவர்களை நீக்கி அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இருபதாவது, கட்சிமாவட்டங்களில் கீழ்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும் வகையில் திருநெல்வேலி, நாகை, சென்னை மேற்கு, வடசென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது. இதையடுத்து புதிய […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளித்து உள்ளனர். இவ்விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் போன்றோர் பெரியகுளம் அருகேயுள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து 3 மணி […]
அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கு தேனி நிர்வாகிகள் ஓபிஎஸ்சிடம் மனு ஒன்றை அளித்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஈபிஎஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றாத நிலையில், தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்திருந்தது. நேற்று (மார்ச்.2) ஓ.பி.எஸ்.. தலைமையில் நடந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் இணைப்பு தொடர்பாக பேசியுள்ளனர். மேலும் சசிகலாவை அதிமுக-வில் இணைக்க வேண்டுமென தேனியில் அதிமுக […]
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வர காரணம் அதிமுக இரண்டாக பிளவுபட்டது தான் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களே பேசத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக-அமமுக ஒன்றிணைக்கும் வரை அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என தொண்டர்கள் தெரிவித்தனர். எனவே உடனடியாக அமமுகவை அதிமுகவுடன் இணைக்க […]
திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 19ம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தலின் போது திமுக நிர்வாகி நரேஷ்குமாரை தாக்கி அரை நிர்வாணமாக்கிய வழக்கில் ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
அதிமுகவானது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வர காரணம் அதிமுக இரண்டாக பிளவுபட்டது தான் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களே பேசத் தொடங்கிவிட்டனர். ஜெயலலிதாவின் நிழலாக இருந்து அரசியல் செய்த சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று பேசத்தொடங்கிவிட்டனர். அதை ஓபிஎஸ் ஏற்பார் என்றும் கடந்த சில தினங்களாக பேசப்பட்டது. இந்நிலையில் தான் அதிமுகவில் திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது. தேனி மாவட்டம் கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆலோசனை […]
நடிகர் அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று “வலிமை” படத்தை வெளியிட்டதை தொடர்ந்து நடிகர் அஜித் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருக்கிறார் என்று ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் கூறியது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அஜித்தின் நிலைபாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூபாய் […]
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர், தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் தி.மு.க.வினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் பலரும் முதல்வருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, […]
டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை பிரதமர் நரேந்திர மோடி திடீரென சந்தித்து பேசியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கூறினார். உக்ரைனுக்கு […]
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை “நான் முதல்வன்” முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நான் முதலில் திட்டத்தின் கருப்பொருள் “உலகை வெல்லும் தமிழகம்” என்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிய துடிக்கும் இளைஞர்கள் தங்கள் அறிவை வளர்க்கும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின், நமக்கு எங்கு வேலை கிடைக்க போகிறது என்னும் […]
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுக சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அந்தவகையில் அமைச்சர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட 2500 அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு […]
“நான் பிறந்த போது குலக்கல்வியை எதிர்த்து போராடினோம், இன்று நீட்டை எதிர்த்து போராடுகிறோம்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். “கல்லூரி படித்த போது நாடகம், திருமணம் செய்தது, திருமணமான 5 மாதத்தில் சிறை சென்றது என எல்லா திருப்பங்களையும் 23 வயதிற்குள் பார்த்தவன் நான். அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என என்னிடம் கேட்டார்கள். நான் அரசியலில் தான் இருந்திருப்பேன். அரசியல் என்பது எனது ரத்தத்தில் கலந்தது” என்று அவர் பேசியுள்ளார்.