உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தேர்தல் ஆணையத்தின் பயம் முழுவதும் அரசு இயந்திரத்தில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். […]
Tag: அரசியல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குமாறு பலமுறை அறிக்கை வாயிலாகவும், நாடாளுமன்ற அவைகளிலும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அப்போது மத்திய அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. பின்னர் திமுக உயர் நீதிமன்றத்தை நாடியது. அதன் பிறகு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய பாஜக அரசு அதனை மதிக்கவில்லை. இதனால் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் பிறகே 27 % இட […]
சென்னை சென்ட்ரல் கிழக்கு பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், “காலம் காலமாக காங்கிரஸ் கட்சி ரீல் விட்டு கொண்டிருக்கிறது. பஞ்சாபில் என்ன நடந்தது ? என்பது அனைவருக்குமே தெரியும்” என்று பேசினார். அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சாபில் பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு பிரச்சனை பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன் ? என்று […]
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட பல ஆண்டுகளாக கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ‘விரைவில் மேகதாது குடிநீர் திட்டத்தை தொடங்க வேண்டும்’ என்று கூறி பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி பாதயாத்திரையை தொடங்கியதால் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் காங்கிரஸ் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் மறுபக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் செய்தியாளர்கள் […]
ஆளும் கட்சியில் இருக்கும் ஒரு அமைச்சர் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் கருத்துக் கணிப்பில் காங்கிரஸிற்கு தான் மூன்றாம் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, மம்தா பானர்ஜி சுற்றுப்பயணம் சென்று கோவாவில் தன் கட்சியை நிலை நிறுத்த தீவிரமாக போராடி வருகிறார். இவரின் வருகையால் காங்கிரஸின் முன்னாள் முதலமைச்சர் லுய்ஸின்ஹோ பலெய்ரோ, போன்ற முக்கிய தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸில் சேர்ந்தது, காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. எனினும், மூன்று மாதங்களில் […]
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வலது கையாக இயங்கிவந்த எஸ்.பி. வேலுமணி தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் நிற்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில், ஓ பன்னீர்செல்வம் தான் துணை முதலமைச்சராக இருந்தார். எனினும், எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்த நிலையில் கட்சி மற்றும் ஆட்சியில் எஸ்.பி வேலுமணி தான் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறார். சமீபத்தில், […]
பா.ம.க இளைஞர் அணியின் தலைவரான அன்புமணி, கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு முடிவு கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பா.ம.க இளைஞர் அணியின் தலைவரான அன்புமணி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், திருச்சியில் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளிலிருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டிருக்கும் 10 கலை கல்லூரிகளை சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. அதனை எதிர்த்து திருவரங்கம் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை முடிவுக்கு […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் அறிவுரையை ஏற்றதற்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக மளிகை பொருட்கள், கரும்பு மற்றும் வேட்டி சட்டை, போன்றவற்றை மக்களுக்கு கொடுத்து வருகிறது. அதில், பொங்கல் பொருட்கள் குறைவாக உள்ளது எனவும் அதற்கு பை கொடுப்பதில்லை என்றும் மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் பை தைப்பதற்கு தாமதமாகிறது என்று முதலமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். இந்நிலையில், அ.தி.மு.க. வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, […]
பெரியார் சிலை தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருவதை, திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி கடுமையாக எதிர்த்திருக்கிறார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் இருக்கும் பெரியார் சிலை மீது மர்மநபர்கள் காவி பொடியை தூவி, செருப்பு மாலை அணிவித்திருக்கிறார்கள். இவ்வாறு பெரியார் சிலை சேதப்படுத்துவது தொடர்ந்து நடக்கிறது. இது பற்றி திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், கோவை மாவட்டம், வெள்ளலூரில் தந்தை பெரியாரின் சிலைக்கு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்ந்து நடக்கிறது. குற்றவாளிகள் மீது […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, பஞ்சாபில் நடந்த நிகழ்ச்விற்கு பொன்.ஆர் அவர்கள் சொன்ன மாதிரி காங்கிரஸ் சார்பாக எங்களுக்கு மன்னிப்பு வேணும், ஓபன் பிளாட்பார்ம்ல மன்னிப்பு வேண்டும். ஏனென்றால் ராகுல் காந்தி அவர்கள் இன்னும் இத பத்தி எதுவுமே பேசுன மாதிரி என் கண்ணுக்கு படவில்லை, அவர் இன்னும் ஹாலிடே மூடில் இருந்து வெளியில் வரல. இந்தியால எது நடந்தாலும் அவர் ஹாலிடே மூட்ல தான் இருப்பாரு. அவரு எப்போ ஆசை படுகிறாரோ, அப்போ தான் அவர் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, விவசாயிங்க இவ்வளவு நாட்களாக டெல்லியில் உட்கார்ந்திருந்தாங்க, ஒரு 20 நிமிஷமா காத்திருக்கிறது பிரச்சனையே இல்ல, அவங்களோட மனநிலை எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும், ஒரு பிரதமர் எந்த கட்சியை சார்ந்தவர் என்று நாம் பார்க்க மாட்டோம். நம் நாட்டினுடைய பிரதமர் என்றால் இதுவரைக்கும்…. அது காங்கிரஸ் பிரதமராக இருக்கட்டும், பாஜகவுடைய பிரதமராக இருக்கட்டும் வேற யாரு வேணாலும் இருக்கட்டும், ஒரு பிரதமராக பார்க்கும்போது கட்சிக்கு அப்பாற்பட்டு நாம் பிரதமரை […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், 2006-ல் தமிழகத்தில் அனைத்து ப்ரொபஷனல் காலேஜுக்கும் நுழைவு தேர்வை ஸ்கிரப் பண்ணினதுக்கு அப்புறம், 2007 இலிருந்து 2017 வரை…. நீட் தேர்வு இங்கு அமல்படுத்துவது வரை ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளி மாணவர்கள் 30 லிருந்து 40 பேருக்கு தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது. 1 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பாக தமிழகத்தை ஆட்சி செய்த அண்ணா திராவிட […]
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திருவரங்கம் கல்லூரி உட்பட சுமார் 41 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை மற்றும் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் திருவரங்கம் உள்ளிட்ட 10 கலை கல்லூரிகளில் கடந்த 4 மாதங்களாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல்கலைக்கழகமோ, அரசோ அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இல்லை. அதற்கு மாறாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பூ, மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களுக்கு பஞ்சாப்பில் நடந்த நிகழ்வை பார்க்கும் பொழுது, இது நிச்சயமாக காங்கிரஸ் சார்பாக செய்த ஒரு சதி என நமக்கு தெரிகிறது. ஒரு மாநில முதலமைச்சர் பிரதமர் எந்த வழியாக வருகிறார் ? எப்படி வருகிறார் ? எந்த வழியாக போகப்போகிறார் ? போலீஸ்காரர்களுக்கு அதை பத்தி தெரியாது, எனக்கும் அதுபற்றி தெரியாது என அவர் சொல்லும்போது, இது அபத்தமான பொய் தான் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிராக நீட் இருப்பதாக தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள், 2006-ல் தமிழகத்தில் அனைத்து ப்ரொபஷனல் காலேஜுக்கும் நுழைவு தேர்வை ஸ்கிரப் பண்ணினதுக்கு அப்புறம், 2007 இலிருந்து 2017 வரை…. நீட் தேர்வு இங்கு அமல்படுத்துவது வரை ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளி மாணவர்கள் 30 லிருந்து 40 பேருக்கு தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது. 1 சதவீதத்திற்கும் […]
பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறையை கண்டித்து பேசிய கராத்தே தியாகராஜன், பிரதமருக்கு நடந்த விவகாரம் குறித்து தமிழகத்தில் இருக்கிற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை, எல்லோரும் கேட்டார்கள் என்ன பண்ணுவது என்று ? போலீஸ் வந்து இரண்டு பிரிவாக இருக்கு, உளவுத்துறை ஒரு குரூப்பாக இருக்கு, சட்டம் ஒழுங்கு ஒரு குரூப்பாக இருக்கு. உளவுத்துறை ஒத்துழைக்கிறார்கள், சட்டம் ஒழுங்கு இன்னும் பழைய மாதிரி நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் முதல்வர் ஸ்டாலின் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு, நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் பிரதமர் கிட்ட பேசுகிறார். பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றார். பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு இழப்பு ஏற்பட்டிருக்கிறது, பிரதமர் உயிருக்கு ஆபத்து வரும் அளவிற்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறதென்றால், ஏன் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கண்டன அறிவிப்பு கொடுக்கவில்லை, ஏன் இதைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை ? ஏன் அவர் கேள்வி எழுப்பவில்லை ? முதல்வர் நவீன் பட்நாயகில் இருந்து எல்லா […]
செய்தியளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில அரசு நிதியிலிருந்து மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகள், அம்மாநில மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறித்து விட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிராக என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பு சகோதர்களே மருத்துவ கல்லூரி அனுமதி கொடுத்து ஒன்றை உருவாக்க வேண்டுமென்றால் அரசு மருத்துவக்கல்லூரி என்றால் அதற்கு வடகிழக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாங்கள் ஆட்சிக்கு வந்து நகைக்கடன் தள்ளுபடி செய்ய, சம்மந்தப்பட்டதுறையின் உள்ளே வந்து பாக்கும்போது தான் தெரியுது ? நகைக்கடன் தள்ளுபடி செய்யல என நீங்க இவ்வளவு தூரத்திற்கு சொல்றீங்க, ஆனா வந்து பார்த்தால் இப்படி முறைகேடு பண்ணி வச்சிருக்கீங்களே… இதுக்கு நகைக்கடன் தள்ளுபடி கொடுக்க முடியுமா? நகை கடன்களை தள்ளுபடி செய்கிறோம் என்று சொல்றோம், உள்ள வந்து பாத்தா நீங்கள் தானே கூட்டுறவு சங்க தேர்தல் நடத்திட்டு […]
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, பாஜக, நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து விமர்சித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற திமுக அரசு, தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்கு தருவதற்கு அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால் பாஜக சார்பாக வானதி சீனிவாசன் […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக ஆட்சியில் நடந்த கொடநாடு கொலையை பார்த்தால் தெரியும். இதை தான் நான் ஏற்கனவே சொன்னேனே. சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது, போலீஸ் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கின்ற டிஜிபியை பற்றி குறை சொல்லக்கூடியவர்கள், தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கை பற்றி பேசக்கூடியவர்கள், குற்ற புலனாய்வு குறித்து எல்லாம் அக்கறையோடு பேசக்கூடியவர்கள், இந்த ஆட்சி மீது குற்றம் சொல்பவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக என்னென்ன செய்கிறார்கள் என்பது தெரியும். இந்த ஆட்சியை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி நகை கடன்களை கொடுக்கவில்லை என்று சொல்கிறார், நாங்கள் கேட்கிறோம் நீங்கள் உங்கள் ஆட்சி காலத்தில் பொறுப்பில் இருந்தபோது யாருக்கெல்லாம் நகை கடன் கொடுத்தீர்கள் ? என்று கணக்கெடுத்து பார்த்தால் திருவண்ணமலையில் ஒரே ஒருவர் மட்டும் 62 பேரில் பெயரில் 1 1/2 கோடி ரூபாய்க்கும் மேல் 5 பவுன் அளவில் வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த மோசடிகளுக்கு, ஊழல்களுக்கு யார் துணை போய் […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், கொரோனா, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் எழுப்பும் கேள்வியினை எவ்வாறு எதிர்கொள்வது ? என்பது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதற்கு முன்னதாக திமுக சட்டமன்ற கொறடா கோவி.செழியன் இந்த கூட்டத்தில் யாராவது ஏதாவது […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி அம்மா மினி கிளினிக்கை பற்றி சொல்லி இருக்கிறார். இந்த ஆட்சி நிச்சயமாக அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கான ஆட்சி இல்லை. அம்மா கிளினிக் என்று ஆரம்பித்துவிட்டு அங்கே டாக்டரையும் போடல, நர்ஸையும் போடல, பேருக்காக வைத்திருந்த கட்டிடத்திற்கு வாடகையும் கொடுக்கவில்லை. ஆக பேருக்காக டாக்டரும் இல்லாமல், நர்சும் இல்லாத ஒரு இடத்திற்கு கிளினிக் என்று பெயர் வைத்த காரணத்தால் தான், உள்ளபடியாக இருக்கிற மருத்துவ கட்டமைப்புகளை நாம் சிறப்பாக செய்ய […]
செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமிழக அரசு “கோவிலில் அறங்காவலர் இல்லாமல் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. அதேபோல் எந்த கோவிலும் பணத்துடன் இருந்து விடக்கூடாது” என்பதில் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது என்று கூறியுள்ளார். அதேபோல் தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் 6,414 கோவில்களில் இந்து சமய அறநிலையத் துறையினரால் 1,415 கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை […]
மழையிலும், சகதியிலும், வெள்ளத்தில் நீங்கள் என் வர வேண்டும் ? அங்கே இருந்துகொண்டு சொன்னால் போதாதா ? என முதல்வர் ஸ்டாலினிடம் பெண்கள் கூறினார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நான் ஒரு படி மேலே போய்கூட சொல்லுவேன், மழை வெள்ளத்திலே தமிழக முதல்வர் ஸ்டாலினை முழங்காலுக்கு மேலே தண்ணீரில் வருகின்றபோது, பார்க்கக் கூடிய இடங்களில் எல்லாம் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இந்த மழையிலும், இந்த […]
உத்திரபிரதேசத்தில் உள்ள உன்னாவோ என்ற நகரில் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா மேடையில் அமர்ந்து பேச்சாளர்களின் பேச்சை கவனித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கையில் கம்பு ஊன்றியபடி தட்டுத்தடுமாறி நடந்து வந்த வயதான விவசாயி ஒருவர் எம்எல்ஏவின் அருகில் வந்து அவருடைய கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்துள்ளார். இந்நிலையில் அந்த எம்எல்ஏக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த கட்சியினர் மேடையிலிருந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கொடுக்க வில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். இன்றைக்கு நிவாரணங்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது, நிவாரணங்களை கொடுப்பதற்கான சரியான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நிவாரண இழப்பீடுகளை வாங்குவதற்கானஅரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றதையெல்லாம் சரியான முறையில் எடுத்து அந்த கணக்கீடுகளின்படி வழங்க இருக்கிறோம். அதிமுக கூட்டணியிலே இருக்கக்கூடிய மத்திய பிஜேபி அரசை வலியுறுத்தி தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பிடம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, துப்பாக்கி கலாச்சாரம் வந்து விட்டது என்று சொல்கிறார். துப்பாக்கி கலாச்சாரம் யாரிடத்திலே வந்தது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது அப்பாவி மக்களை எங்கேயாவது சுட்டுக் கொன்றிருக்கோமா…. ஆனால் இதே ஸ்டெர்லைட் பிரச்சினை வரும் போது அப்பாவி மக்கள் 13 பேரை நிறுத்தி வைத்து ஒவ்வொருவராக குறிபார்த்து சுட்டுக்கொன்ற ஆட்சி, துப்பாக்கி கலாச்சாரத்தை தூக்கி […]
பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணம் குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை கேட்டு டுவிட் பதிவு செய்துள்ளார். அதாவது பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் பயணம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. (1) ஹெலிகாப்டரில் செல்ல வேண்டிய பிரதமரின் பஞ்சாப் பயணம், கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டவுடனே […]
பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சென்னி பாஜக சதி செய்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது பிரதமர் மோடி முதலில் பஞ்சாப்பிற்கு ஹெலிகாப்டரில் வருவதாக தான் திட்டம் இருந்தது. பின்னர் திடீரென சாலை பயணத்திற்கு மாறியுள்ளார். இந்த நிலையில் பிரதமர் செல்லவிருந்த சாலையில் சிலர் மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த பாதை வழியாக பிரதமர் வருவது தெரியாது. அது பிரதமரின் பாதுகாப்பாளர்களுக்கு கூட தெரியும். அதோடு மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் பிரதமருக்கு […]
கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. மேலும் இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வார்கள் என்ற சட்ட விதிகள் கொண்டுவரப்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த அதிமுக தேர்தலில் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் […]
ஓ.பன்னீர்செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலும், ப.ரவீந்திரநாத் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியிலும் போட்டியிட்டனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தபோது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், ஆண்டு வருமானம், விவசாய நிலங்கள், கல்வித்தகுதி, கடன் உள்ளிட்டவை குறித்த விவரங்களை தவறாக தெரிவித்துள்ளனர் என்று திமுக நிர்வாகி மிலானி என்பவர் மனு ஒன்றை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் […]
செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுனர் அவர்களுடைய உரையில் அரசாங்கத்தினுடைய கொள்கைத் திட்டங்கள், இந்த அரசு மிகக் குறைந்த காலத்தில் எவ்வளவு அற்புதமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது என்பதற்கான தொகுப்பாக அரசினுடைய திட்டங்களை எல்லாம் முன்மாதிரியாக எடுத்துச்சொல்லி சிறப்பான உரையாக அமைத்துள்ளது. குறிப்பாக நம்முடைய மாநிலத்தினுடைய கல்வி வளர்ச்சியை மேலும் உறுதி செய்யக்கூடிய வகையில் ஐந்தாண்டு காலத்தில் மாநில கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்ற கூடிய கல்வி நிறுவனங்களை மிக சிறந்த அளவிலே உருவாக்குவதற்கான […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாணவர்களின் கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதியாக உள்ளது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து நீட் விவகாரம் தொடர்பில் கோரிக்கை விடுத்தார். அதேபோல் தமிழக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்யமாறு வலியுறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவரோ ஐந்து நிமிடம் கூட சந்திக்க நேரம் ஒதுக்காததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த […]
செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு, பட்டியல் வகுப்பாளருக்கு எதிரான வெறுப்பு என வெறுப்பின் அடிப்படையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற பாஜக, மாநிலங்களின் உரிமையை பறிப்பதிலும் குறியாக இருக்கிறது. அதனுடைய விளைவாகத்தான் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசினுடைய உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக நேரம் கேட்டும், அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இது இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்குவது […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு வழங்கிய அதிமுக உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அம்மா உணவகங்கள் கவனிக்கப்படவில்லை என்றும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டோம் என்று பட்டியலை படித்தார். இது போன்ற பட்டியலை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உங்களிடம் பேசியபோது, ஏதோ இந்த ஆட்சி வந்து ஆறு மாதத்திற்கு உள்ளாக போதைப்பொருட்களுடைய நடமாட்டம் கூடி விட்டதாகவும், குட்கா போன்ற போதை பொருட்கள் எல்லாம் நடமாட்டத்திலே அதிகமாகி விட்டதாகவும் கூறியிருக்கிறார். நீங்கள் எண்ணி பார்த்தீர்கள் என்று சொன்னால் குட்கா என்ற போதைப் பொருட்கள் இருப்பதையே இந்த தமிழ்நாடு மக்களுக்கு பிரபலபடுத்தப்பட்ட ஆட்சி இருக்கிறது என்று சொன்னால் அந்த ஆட்சி திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் […]
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்த போது விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பி செல்லும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பிரதமர் வெறும் 15 நிமிடம் காரில் காத்திருந்ததை தேசிய அளவில் பெரிதாக பேசி வருகிறார்கள். ஆனால் டெல்லியில் விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக பனியிலும், […]
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அம்மா உணவகங்கள் கவனிக்கப்படவில்லை என்றும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டோம் என்று பட்டியலை படித்தார். இது போன்ற பட்டியலை படிக்க வேண்டும் என்றால் என்னிடம் எக்கச்சக்கமாக உள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஓமந்தூரார் […]
செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், சடங்குத்தனமாக சமூக நிதி திட்டங்களை, கொள்கைகளை தமிழக அரசு பின்பற்றாது. உயிரோட்டமாக அதை நடைமுறைபடுத்தும் என்ற நம்பிக்கையோடு, வருகின்ற ஜனவரி 30ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் உடைய நினைவு நாளிலே சமபந்தி போஜனம் நடைபெறுவது என்பது ஒரு சடங்கு தனமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இத்தகைய நிகழ்ச்சிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு நாளாவது ஆதிதிராவிடர் நல விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி என அரசு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் உரையில் அரசின் உடைய கொள்கை திட்டங்களாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக அதை ஏற்றுக் கொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளது. அரசின் அறிவிப்புகளை எல்லாம் ஆறு மாத காலத்திலே செய்திருக்கக்கூடிய செயல் திட்டங்களை கேட்டுக் கொண்டு உட்கார்ந்து இருந்தால் சரிப்பட்டு வராது. நாம் அரசியல் செய்யமுடியாத நிலை தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பட படபடப்பில் எதிர்க்கட்சியினுடைய தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் […]
கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் “வந்த பிறகு எதிர்த்து நின்று திரும்பி போக வைப்பது ஒரு விதம்! வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொரு விதம்! தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச் செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும்! என்று டுவிட் போட்டுள்ளார். இந்த டுவிட் பதிவால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்ற போது திடீரென விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அவருடைய பயணத்தை தொடர முடியாமல் பாதியிலேயே திரும்ப […]
செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பது என்பது சில மாநிலங்களில் மாநில அரசின் உரிமையாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர் அந்த உரிமையை தக்க வைத்திருக்கின்ற சூழல் இருக்கின்றது. இந்த உரிமையை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் பாஜக தன்னுடைய அரசியலை உயர்கல்வி நிறுவனங்களில் திணிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே துணைவேந்தர் பணி நியமனங்களையும், சுதந்தரமாக்க மாநில அரசே தீர்மானிக்கக்கூடிய ஒரு சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட வேண்டும் என்ற […]
நேற்று முன்தினம் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூரில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் சிலர் வழிமறித்ததால் பிரதமர் மோடியின் பயணத்தில் தடை ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் அரசு தான் பிரதமரின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாகியுள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இந்த நிகழ்வால் கொந்தளித்த பாஜகவினர் கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மதுரை திருப்பரங்குன்றத்தில் […]
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் என்று கூறியிருந்தார் என்பதை சுட்டிக்காட்டி கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் “கல்வியை” வர்த்தகமாக்கிய நிலையில் ஊழலின் இருப்பிடமாக தான் பல்கலைக்கழகங்கள் இருந்து வருகிறது என்று பரபரப்பாக பேசியுள்ளார். மேலும் திமுக அரசு நாளைய தலைமுறையை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை ஊழல் மயமாக்க துடித்து கொண்டிருக்கிறது என்ற பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். ஆனால் திமுகவின் இந்த முயற்சியை நீதிமன்றமும், மக்கள் சக்தியும் […]
நெல்லை டவுண் காவல்துறையினர் கடந்த 2016-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா வாக்காளர்களை வாக்களிக்க பணம் வாங்குமாறு தூண்டினார் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பிரேமலதா இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு ஒன்றை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் வாங்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் பேசியதாக கூறி காவல்துறையினர் அரசியல் உள்நோக்கத்துடன் […]
சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தொடர்ந்து கூறி வருவதாக அதிமுக தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சசிகலா மீது புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த மனுவில் இந்திய தண்டனைச் சட்டம் 34, 420 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சசிகலா […]
இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “அம்மா கிளினிக் திட்டத்தால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. எனவே அம்மா கிளினிக் விரைவில் மூடப்படும்” என்ற அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். இதனால் கொந்தளித்த ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அம்மா கிளினிக் மற்றும் அம்மா உணவகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசு அம்மா இரு […]