விஜய் மக்கள் இயக்க நிர்வாகி யாரும் தப்பு செய்தால் விஜய் நடவடிக்கை எடுப்பார் என உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க பிரதிநிதிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மக்கள் உங்களை நம்பி ஓட்டு போட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சின்ன விஷயம் சொன்னாலும் நீங்கள் அதை உடனடியாக செய்யவேண்டும் என்பதுதான் தளபதி விஜய்யின் உத்தரவு. […]
Tag: அரசியல்
கடந்த 10ஆண்டு ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எந்த குறையும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்க கூடியது மக்களுடைய மனநிலையைப் பொருத்தது. ஏற்கனவே நான் கூறி இருக்கின்றேன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் எந்த நோக்கத்திற்காக ஆரம்பித்தார். தொண்டர்கள் இயக்கமாக தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். தொண்டர்கள் இயக்கமாக இன்றைக்கு வளர்ந்துள்ளது. இன்றைக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியதாக கூடி பிஜிஆர் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் பத்து நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படி தவறினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பதில் அளித்து பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் சில ஆடுகள் மட்டும்தான் இருக்கிறது என்று […]
மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தினர் செய்து கொடுக்க வேண்டும் என நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பல இடங்களில் வெற்றிபெற்று பிரதான அரசியல் கட்சிகளுக்கு சவாலை உண்டாக்கியது. தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் அறிவுரைகளை வழங்கியதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் இயக்கம் களமிறங்கும் என தெரிகின்றது. இது தொடர்பாக […]
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடோ பழிவாங்கும் எண்ணத்தோடோ நடத்துவது இல்லை என்றும் தனது வீட்டில் கூட ஏற்கனவே சிபிஐ, சிபிசிஐடி சோதனை நடைபெற்றதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எப்பொழுது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுகிறதோ, அப்பொழுதுதான் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துகின்றனர். என்னுடைய வீட்டில் கூட பலமுறை சோதனை செய்து இருக்கிறார்கள். சிபிஐ, சிபிசிஐடி ரெய்டு செய்துள்ளார்கள். அதில் என்ன இருக்கிறது. […]
கணக்கில் வராத பணம் வராத பணம் என்று எதுவுமில்லை என்று எல்லாருக்கும் தன்னிடம் கணக்கு உள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள ஒரு வீடு உட்பட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அவர் மீது வழக்கு […]
நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலங்களை நத்தம் புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தி தமிழக அரசு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் அடுத்த பெத்தேல் நகர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 2800 வீடுகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி மக்களை சந்தித்த விடுதலைச் […]
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்குவது தொடர்பான டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் புதிய வழித்தடத்தில் பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்க ஆவின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இனிப்பு வழங்குவதில் எந்தவிதமான தவறும் கிடையாது. […]
தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தான் கருத்தியல் ரீதியான அரசியல் நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் பேசுவது அனைத்துமே பாஜகவை எதிர்த்து தான். அவர்கள் பேசுவது எல்லாமே எங்களை எதிர்த்து தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் இருந்து அவருடைய கருத்துக்களை எடுத்து வைக்கிறார்கள். இந்தியா சார்ந்த எந்த கருத்துக்கள் வந்தாலும் கூட பேச வேண்டியது நாங்கள் தான். எங்களுடைய ஆணித்தரமான உண்மைகளை […]
கடந்த 10 ஆண்டுகாலம் நிதித்துறை அமைச்சராக இருந்து அரசு கஜானாவை சுரண்டியவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மக்களுக்காக தொண்டு செய்கின்ற இயக்கத்தை அண்ணாமலை போன்றவர்கள் விமர்சித்துப் பேசுவதற்கு பதில் சொல்வது என்பது கூட சரியாக இருக்காது என்பது என்னுடைய கணிப்பு. ஏனென்று சொன்னால் இந்த இயக்கம் எதற்காக துவங்கப்பட்டது என்பதை கூட நம்முடைய சகோதர அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்க்கட்சி அதைக் கூட சொல்ல ஜனநாயகத்தில் உரிமை இல்லை […]
90ஸ் கிட்ஸ் என்பதால் பேசி விட்டு சும்மா போக மாட்டேன் யார் என்று காட்டுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 90-ஸ் கிட்ஸ் என்பதால் நான் பேசிவிட்டு சும்மா போகமாட்டேன். ஒரு இளைஞனாக என்ன செய்ய வேண்டும் என்று காட்டுகிறேன். கேப்டனையும், இந்த கட்சியும் கைவிட்டு விடக் கூடாது. யாராக இருந்தாலும், எந்த கருப்பு ஆடு கட்சியில் இருந்தாலும் சரி, வெளியிலிருந்து பேசினாலும் […]
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாகக் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்ற காவல் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நிலையில், ஆர்யன் கான் தரப்பில் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆரியன் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஆர்யன் […]
மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக வைகோ மகன் துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்த அரசியல் கட்சியை சேர்ந்ந்தவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், துரை வைகோ முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ, 10 ஆண்டுகளாக தேக்க நிலையில் இருந்த தமிழ்நாடு தற்போது வளரத் தொடங்கியுள்ளது. வலதுசாரி சித்தாந்தத்துக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியலை தான் முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
சசிகலா தென்மாவட்டங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டதையடுத்து இன்று தன்னுடைய இல்லத்திலிருந்து பயணத்தை தொடங்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் பயன்படுத்திய காரில் அதிமுக கொடியோடு இன்று தஞ்சாவூர் செல்லும் சசிகலா டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனையடுத்து 28ஆம் தேதி மதுரை சென்று முத்துராமலிங்க தேவர் மற்றும் மருதுசகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி அதிமுக ஆதரவாளர்களை சந்திக்கிறார். அதனைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 29 ஆம் தேதி […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 120க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பங்கேற்பது குறித்து கூடிய விரைவில் விஜய் அறிவிக்க உள்ளார். வாக்களித்தவர்கள் கேட்டால் […]
நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும் என்று கூறினார். இது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் வருகையையொட்டி மதுரையில் அடிக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பேனர்களில் எடப்பாடி பழனிச்சாமியின் படம் இடம்பெறாதது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ் உடன் செல்லூர் ராஜூ, […]
செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இடம் ஸ்மார்ட் திட்டத்தில் ஆயிரம் கோடி வேஸ்ட் என்று அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அவர், திமுக அரசு மிகவும் அவசரப்படுகிறது. கடந்த பத்து வருட கால ஆட்சியில் அம்மாவின் அரசு சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து செயல்படுத்தி வந்தது. தமிழகத்தை அமைதி பூங்காவாக, தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தந்துள்ளது என பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அதிமுக அரசு […]
சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் இன்று காலை புறப்பட்டார், உடன் பரப்புரை வாகனமும் செல்கிறது. முதற்கட்டமாக தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்று சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சசிகலா, பசும்பொன் தேவர் குரு பூஜையில் பங்கேற்கின்றனர். நாளை டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்ப்பில் பங்கேற்கிறார். சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 25 இடங்களில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சசிகலா சந்திக்கிறார். அதிமுக கொடி […]
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்களுடைய விருப்பம் என்றும், சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். யார் எந்த பதவியில் இருந்தாலும் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று கூறினார். அண்மையில் “சூரியனை பார்த்து ஏதாவது” என்று சசிகலாவை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் […]
மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அம்மா உணவகத்தில் சப்பாத்தி நிறுத்தப்பட்டது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நான்கு நாட்களுக்கு முன்னதாக சப்பாத்தி நிறுத்தியது குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தேன். மீண்டும் இந்தத் திட்டத்தை நிற்காமல் திமுக அரசு தொடர வேண்டும். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அத்துமீறிய செயல்பாட்டின் காரணமாக அதிமுகவின் வெற்றி மறைக்கப்பட்டு திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சட்டபூர்வமான […]
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாஜக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவை பாஜக மட்டுமல்ல அதிமுகவும் விமர்சனம் செய்து வருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட அண்மையில் திமுக அரசை கண்டித்து அறிக்கை கொடுத்திருந்தார். தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டுவருகிறது. யார் எதிர்க்கட்சி என்று அதிமுக மற்றும் பாஜக இடையே போட்டி கிடையாது. நாங்கள் ஒன்றாகத்தான் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டு வந்தது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் சேகர் பாபு பாஜகவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் கூறியிருந்தார். இதற்கு பாஜக அண்ணாமலை, தொட்டு பார்க்கட்டும். 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். மோடி டெல்லியில் உள்ளார். தொடுவார்கள் என்று தான் காத்திருக்கிறோம். தொட்டுப் பார்கட்டும். வட்டியும், முதலுமாக அவர்களுக்கு திருப்பிக் கொடுப்போம் என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு […]
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்த தேவரின் 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தை தேவர் குடும்பத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வில் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுமா? என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும். அதிமுக புரட்சித்தலைவர் ஆரம்பித்த […]
சாட்டை திருமுருகன் பல அரசியல் தலைவர்களை பற்றி இழிவாக பேசிய வழக்கில் உள்ளே சென்ற நிலையில் தற்போது ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து தக்கலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைவர்கள் குறித்து சாட்டை துரைமுருகன் ஆவேசமாக பேசி அவதூறு பரப்பினார். இதனால் திமுக தொண்டர்கள் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் […]
ஜெயலலிதாவிற்கு தான் எழுதிக் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் வரவில்லை என்றால் வியாபார ரதியாக சசிகலா ஜெயலலிதாவை பயன்படுத்தியது கொண்டதாக அர்த்தம் என்று முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முனுசாமி, சசிகலா அம்மையார் அவர்கள் இந்த இயக்கத்தில் பற்றாக இருப்பார் என்று சொன்னால் இந்த அம்மையாரை, ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேற்றிய பின்பு மீண்டும் வீட்டுக்கு அழைத்த போது அவர்கள் என்ன கடிதம் கொடுத்து எழுதினார்கள் என்றால், நானோ அல்லது என்னுடைய குடும்பமோ […]
சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியது ஓ.பன்னீர்செல்வம் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா அவரை சார்ந்தவர்களுக்கு தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஓபிஎஸ் கூறினார். சசிகலா அவரை சார்ந்தவர்களை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஓபிஎஸ் பெட்டியை முழுமையாக பார்த்துவிட்டு நான் விளக்கம் அளிக்கிறேன். சசிகலாவுக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபடும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில் தீரன் தொழிற்சங்க பேரவையை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திறந்துவைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் ஐடி ரெய்டு எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, பழிவாங்கும் நடவடிக்கையோ இல்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் அதிமுகவை அழித்துவிட்டு எதிர்க் கட்சியாக பாஜக செயல்பட நினைக்கிறார். இது அண்ணாமலையை […]
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சசிகலா குடும்பத்துடன் உறவு வைக்க கூடாது என்று ஓபிஎஸ் கூறி இருந்தார். அவருடைய கூற்றின் படி சசிகலா குடும்பத்துடன் யாரும் உறவு வைத்திருக்கக்கூடாது என்ற கூற்றின் அடிப்படையில் தான் அணிகள் இணைந்தன. சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு என்பதை ஓபிஎஸ்க்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அம்மாதான் என்னை அமைச்சர் ஆக்கினார். சசிகலா என்னை அமைச்சர் ஆக்கவில்லை. தவறான […]
100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2000 ஆம் ஆண்டு முதல் கடும் சிரமங்களை சந்தித்து வளர்ந்த தேமுதிகவை விட்டு கயவர்கள் பேச்சை கேட்டு சிலர் வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது. ஆசை வார்த்தை கூறி மோசம் செய்வோரை நம்பி தேமுதிகவை விட்டுச் செல்வது ஒட்டுமொத்த கட்சிக்கும் செய்யும் துரோகம் என்று கூறியுள்ள விஜயகாந்த், ஆசை வார்த்தைக்கு மயங்கியவர்களை பலவீனமானவர்கள் என விமர்சித்துள்ளார். தன் […]
திமுக ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாஜக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். தர்மபுரியில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் மற்றும் நூல் அறிமுக விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணியிடம் திமுக மீதான அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கட்சியை பலமாக வைத்துக்கொள்ள எதையாவது பேசும் அண்ணாமலையை கண்டு பரிதாபப்படுகிறேன். பாஜக நான்கு இடங்களில் காலூன்றி வரவில்லை […]
கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக மேற்கொண்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் ஒழிப்புத்துறை போலீசார் தமிழகம் முழுவதும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ததில் கணக்கில் வராத 25 லட்சம் பணமும், சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து […]
நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர், காஷ்மீரில் உள்ள மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி நீக்கப்பட்டுள்ளது. மக்களே இனி யாரும் உங்களுக்கு அநீதி இழைக்க முடியாது என்பதை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். காஷ்மீரின் அமைதிக்கு இடையூறு செய்பவர்களை வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம். புதிதாக தொழிற்சாலைகளை நாங்கள் அறிமுகம் செய்தபோது இங்கு முதலீடு செய்ய யார் வருவார்கள்? […]
டிடிவி தினகரனின் மகனின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி 27.10.2021 தஞ்சை மாவட்டம் பூண்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தனது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொள்ளுமாறு தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “இதய தெய்வம் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களான கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் வணக்கம். திருவண்ணாமலையில் நடைபெற்ற எனது அன்பு மகள் திருமணத்தைத் தொடர்ந்து வரும் 27.10.2021 புதன்கிழமை காலை 11 மணியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி […]
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தரகாண்ட் முன்னாள் ஆளுநரும் பாஜகவின் தேசிய துணைத் தலைவருமான பேபி ராணி மவுரியா பெண்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, பெண்கள் மாலை 5 மணிக்கு மேல் தனியாக காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டாம் குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினரை அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினர். இவருடைய இந்த பேச்சு பாஜக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்தநிலையில் பேபி ராணியின் கருத்துக்கு […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடையே வார்த்தைபோர் மூண்டு வருகிறது. மின்சாரத்துறையில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஆதாரத்தை காட்டுவதாகவும் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். ஆனால் அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தக்க பதிலடி கொடுத்து வருகிறார். மேலும் அதெல்லாம் அதிமுக ஆட்சியில் நடந்தது என்று செந்தில்பாலாஜி அண்ணாமலை வாயை அடைத்தார். அது பொய் குற்றச்சாட்டு என்பதால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கூறினார். ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று அண்ணாமலை […]
நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். கிட்டத்தட்ட பெட்ரோல் டீசல் விலை ஆனது […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிங்கராஜ் என்பவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டராக உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை அவதூறாக பேசியதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். உடனே இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரை கீழே இறக்கி வரவழைத்து விசாரணை […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்வதற்காக மதுரை வந்து விமானம் மூலம் புறப்பட திட்டமிட்டிருந்தார். இதனையடுத்து அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலுக்கு அதிமுக தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பது குறித்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என நாங்கள் முன்பே கூறியிருந்தோம் அது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது என்று கூறியுள்ளார். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் […]
2022ஆம் ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளில் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் காங்கிரஸ் கட்சியினரும் தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்று […]
தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து, முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.எஸ் மணியன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது ஒண்ணா, ரெண்டா, மூணா தொடர்ந்து சோதனை பண்ணி கொண்டே தான் இருக்கிறார்கள். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி தவிர வேறு எதுவும் […]
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாகக் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்ற காவல் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நிலையில், ஆர்யன் கான் தரப்பில் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆரியன் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஆர்யன் […]
நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மற்றும் […]
2017ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் சசிகலா தரப்பில் கோரப்பட்டு இருந்தது. சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை 4வது கூடுதல் […]
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழர் இறையாண்மை நாளாக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழக அரசு கொண்டாட வேண்டுமென்றும் தமிழகத்திற்கு தனிக் கொடி அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நவம்பர் 1ம் தேதி மொழி […]
கோவையில் இஸ்கான் கோவிலில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வங்காள தேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்படுகிறது. தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு தான் தமிழக மின்சார வாரியம் உள்ளது. ஆனால் தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக அல்ல மின்சாரத் துறை அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காகத்தான் எனவும் கூறினார். இதே போல தான் இந்தியாவில் நிலக்கரி […]
கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். கோவாவில் சுயேச்சை எம்எல்ஏ பிரசாத் கோயங்காரும், மம்தாவுக்கு தன்னுடைய ஆதரவை அளித்துள்ளார். 40 தொகுதிகள் கொண்ட கோவாவில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக தற்போது ஆட்சியை நடத்தி வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வந்து திரிணாமுல் காங்கிரஸ் […]
மின்சாரத் துறையில் ஊழல் நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்து வருகிறார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்து வந்தாலும் இதற்கு பதிலளிக்க முடியாது என்று சொன்னாலும் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே வருகிறார். இதனால் அண்ணாமலைக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, மின் விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். ஏற்கனவே அமைச்சர் […]
எதிர்கட்சித்தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், மாநில கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இளங்கோவனுக்குச் சொந்தமான் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் 20 கிலோ தங்க நகைகள், 2 சொகுசு கார்கள், சொகுசு பேருந்துகள், ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இளங்கோவன் 70 கோடி ரூபாய் […]
நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் […]