தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் அழிவை நோக்கி செல்கிறதா? என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றும் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. இதில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்கு பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்று வருகின்றன. இந்த நிலையில் திமுக அரசு […]
Tag: அரசியல்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் வார்த்தைப்போர் மூண்டு வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய இருப்பை காட்டுவதற்காக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அடுக்குவதாகவும், அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், எல்லாவற்றிற்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். பெரியார் விளக்கத்தை சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். உண்மையாகவே நீங்க நல்ல மனிதராக இருந்தால், […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். இதில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி முன்னிலை படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். 20 லட்சம் அரசு வேலைகள், மின் கட்டணம் ரத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு ஆகியவை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். […]
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றும் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. இதில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்கு பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்று வருகின்றன. இந்த நிலையில் திமுக அரசு அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணம் இல்லை என்று அறிவித்திருந்தது. ஆனால் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர […]
தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புளியங்கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் தன்னுடைய மகள் ஸ்ரீலேகா அன்பழகன்(22) என்பவரை போட்டியிட செய்தார். இதன்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலேகா வெற்றி பெற்றார். இதற்கு அடுத்தபடியாக சுயேச்சையாக போட்டியிட்ட வேலுதாய் என்பவர் 1103 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் மானூர் யூனியன் சேர்மனாக ஸ்ரீலேகா […]
அரசியல் களத்தில் அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பாஜக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் திருத்தேர் திருவிழாவை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக மீது ஆதாரமில்லாமல் குறை கூறினால் அதற்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று குறிப்பிட்டார். இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த பல்வேறு தவறுகளுக்கு இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை […]
மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை பராமரிப்பு தொடர்பான அறிவிப்புக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலானா அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது கோரிக்கையை ஏற்று மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவச் சிலையை தமிழக அரசு சார்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை மாண்புமிகு உள்துறை அமைச்சர் மூலம் தெரிவித்த […]
சமீபத்தில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர், மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் மாஜிக்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனால் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக உள்ள இளங்கோவனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று காலை 6 மணி முதலே அதிரடியாக சோதனையில் இறங்கினர். இந்த […]
தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைந்தததையடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர் மண்டலம் வார்டு 82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம் வார்டு 192 அமைந்துள்ள வண்ணான் குளம் என்ற […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்தி வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இதனை அடுத்து இன்று இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக இருந்தவர் இளங்கோவன். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர், அதிமுக சட்டப்பேரவை செயலர் […]
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் போட்டியிட்ட தாராபுரம் பகுதியில் அவரை எதிர்த்து திமுக சார்பாக கயல்விழி செல்வராஜ் களமிறக்கப்பட்டார். இதனையடுத்து இவர் ஆயிரத்து 383 வாக்குகள் வித்தியாசத்தில் எல். முருகனை தோற்கடித்தார். இதனால் அவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர் பதவி வழங்கி கௌரவித்தார். அந்தவகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்தி வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இதனை அடுத்து நேற்று இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள், சொகுசு கார்கள், சொகுசு பேருந்துகள், தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து திமுக அரசு அரசியல் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்கள் தன்னுடைய வீட்டு வேலைக்காரர்களாக கயல்விழி ஏன் பணியமர்த்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருக்கும் அண்ணாமலை, காற்றில் பறந்தது சமூகநீதி.! மக்கள் வரிப்பணத்தில் அநீதி.! என்று விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கயல்விழி, ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்கள் […]
மின்சார விநியோகத்தில் தனியார் நிறுவனத்திற்கு சிறப்பு சலுகை வழங்குவதாக திமுக அரசை குற்றம் சாட்டிய அண்ணாமலைக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாது என்றும் அண்ணாமலை மண்டையில் சரக்கு ஒன்றும் இல்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதுமட்டுமின்றி இன்னும் 24 மணி நேரத்தில் இதற்கான ஆதாரத்தை காண்பிக்கவில்லை என்றால் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மணல் திருடும் […]
சமீபத்தில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர், மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் மாஜிக்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனால் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக உள்ள இளங்கோவனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று காலை 6 மணி முதலே அதிரடியாக சோதனையில் இறங்கினர். கடந்த […]
ஆயுர்வேத சிகிச்சை என்றாலே அனைவரும் முன்பெல்லாம் கேரளாவிற்கு தான் சென்று வருவார்கள். ஆனால் தற்போது தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள பிரபல ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பன்னீர்செல்வம் ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து முதலில் அவருக்கு உணவு கட்டுப்பாடு சொல்லப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி சென்ற அவருக்கு 19ஆம் தேதி முதல் சிகிச்சை தொடங்கி இருப்பதாகவும் ஒரு வாரத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி […]
தேமுதிக நிறுவனத்தின் தலைவர் விஜயகாந்தின் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பூவராக சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். இதனையடுத்து தேமுதிக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதனையடுத்து செய்தியாளர்களை […]
மின்துறையில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எங்கு வேண்டுமானாலும் வரத் தயாராக இருக்கின்றேன். கூடுதலாக 24 மணி நேரத்திற்குள் அண்ணாமலைக்கு ஆதாரங்களை வெளியிட நேரம் கொடுக்கப்பட்டுள்ளது, தவறினால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தனது இருப்பைக் காட்ட இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறார். மேலும் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அவர் தொடரும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இந்த நிலையில் […]
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன் சம்பத், தமிழகத்தில் 38,000 கோவில்களின் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கு எப்போதும் ஒரு ஜாதி தடையாக இல்லை. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 356 இடங்களில் பாஜக குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக வரும் மாநகராட்சி, நகராட்சி ,சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமையும். மின்வாரிய துறையில் திமுக அரசு ஏற்படுத்தி இருந்த […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இதனால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில் சமையல் எரிபொருள் விலையும் அதிகரித்து […]
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு பாட்டாளி மக்கள் தொண்டர்களும் கவரிமான் தான். அவர்கள் அனைவரும் சத்திரியர்கள். அவர்களுக்கு கொள்கை தான் முக்கியம். அவர்களுக்கு விலையாக கோடி பணத்தை கொட்டினாலும் கூட அதை இடது கையால் வீசி எறிந்து விடுவார்கள். அவர்களுக்கு அவ்வாறு வழங்கப்படும் பணத்தை விட தங்களுடைய இறப்புக்குப் பிறகு தங்கள் மீது போர்த்தப்படும்பாமக கொடி தான் தங்களுக்கு பெரிது என்று நினைக்கக் கூடியவர்கள் பாட்டாளிகள். பாட்டாளிகளை மயக்கும் வார்த்தைகளால் கவர்ந்து விடலாம் என்று […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமீப காலமாகவே ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து கண்டனம் தெரிவிக்கும் விதமாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று தமிழகம் முழுவதும் அதிமுக பொன்விழா ஆண்டு நடைபெற்றது. உற்சாகமாக நடைபெற்ற இந்த விழாக்களைக் கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக விடிந்தவுடன் காவல்துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத்தாண்டவம் […]
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களான எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு சென்றவர்கள் எல்லோரும் திரும்பவும் தங்களது சொந்த மதத்துக்கு திரும்ப வேண்டுமென்று சமீபத்தில் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு வழக்கம்போல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், விமர்சனத்துக்கும் ஆளானது. சீமானின் இந்த கருத்தையடுத்து #சங்கி_சீமான் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. இந்த நிலையில் சீமான் இப்படி மத அரசியல் செய்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து, கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் […]
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சில்வார்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்தனர். இருப்பினும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தான் போராட்டம் நடைபெற்றது. ஒரு சமயத்தில் சாலைகளில் நாம் இருவர் நமக்கு இருவர் நமக்கு ஒருவர் என எழுதப்பட்டிருந்தது. தற்போது பார்த்தால் அனைத்து இடங்களிலும் குழந்தை வேண்டுமா சோதனை குழாய் குழந்தை என பெயர் பலகைகள் […]
அதிமுகவின் படுதோல்வி குறித்து அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 80% வெற்றி பெறும் என்று நான் முன்பே கூறினேன். அது தற்போது நடந்து விட்டது. அதிமுகவின் தோல்வியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மாபெரும் இயக்கமாக இருந்த அதிமுக தற்போது தோல்வியையே சந்தித்து வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மீதான அதிருப்தி தான் அதிமுக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது […]
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் நேரில் சந்தித்து நன்றி கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேசிய அளவில் உள்ள எஸ்சி, எஸ்டி ஆணையம் போல மாநில அளவிலும் அமைப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர். சசிகலா அம்மா நினைவிடம் செல்வது, தீவிர அரசியலில் ஈடுபடுவது என்பது அவருடைய தனிப்பட்ட விவகாரம். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சனம் […]
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் பாஜக சார்பாக டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யபட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜ அவர்களை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சில்வார்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்தனர். இருப்பினும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தான் போராட்டம் […]
தமிழகம் முழுவதும் நேற்று அதிமுக பொன்விழா ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டு புலி வேடம் போடும் எடப்பாடியிடமிருந்து அதிமுகவை மீட்போம். உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. திமுக தற்போது நல்லாட்சி கொடுத்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக […]
விஜய் மக்கள் இயக்கம் அதிமுக கூட்டணியுடன் இணைய வாய்ப்புள்ளதால் விமர்சிக்கவில்லை என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் வீறுகொண்டு எழுந்து பீனிக்ஸ் பறவையைப் போல ஆட்சியை பிடிக்கும். கடந்த 2011ம் வருடம் நடைபெற்ற நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் 10 மாநகராட்சியில் அதிமுக வென்றது. அப்போது திமுக அழிந்து விடும் என்று நாங்கள் கூறவில்லை. எனவே அதிமுக அதிக தொகுதிகளை வென்று மீண்டும் […]
அதிமுகவின் 50வது பொன்விழா ஆண்டு நேற்று தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து சசிகலா எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு சென்று அங்கு அதிமுக கொடியை ஏற்றினார். பின்னர் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அதிமுக கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டு தான் தற்போது அதிமுகவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த கல்வெட்டில் “கழக பொதுச் செயலாளர் சசிகலா” என்று பொறிக்கப்பட்டிருந்தது தான் சர்ச்சைக்கு காரணம். இதனையடுத்து எடப்பாடி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக […]
அதிமுக 50 வது ஆண்டு பொன்விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்ட்டது. இதனையொட்டி சசிகலா எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு சென்று அதிமுக கொடியுடன் காரில் சென்று அங்கு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக பொன்விழா கல்வெட்டையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை ராமாவரம் தோட்டத்தில் நடைபெற்ற திமுக […]
சசிகலா வருகை கூட்ட நெரிசலில் 20பேரிடம் 5 செல்போன், ரூபாய் 96,000 பணம் கொள்ளை போயுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் வந்த சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவரின் பங்களிப்பு இல்லாமல் அதிமுக, அமமுக தேர்தலில் களம் இறங்கி படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து அரசியலுக்கு நான் வருவேன், அதிமுகவை மீட்டு எடுப்பேன் என்று சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ […]
அதிமுக 50 வது ஆண்டு பொன்விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அதிமுக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்ட்டது. இதனையொட்டி சசிகலா எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு சென்று அதிமுக கொடியுடன் காரில் சென்று அங்கு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக பொன்விழா கல்வெட்டையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை ராமாவரம் தோட்டத்தில் நடைபெற்ற […]
தமிழகம் முழுவதும் இன்று அதிமுக பொன்விழா ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சசிகலா சென்னை டி.நகர் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அதிமுக கொடியுடன் உள்ள காரில் சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அதிமுக கொடியை ஏற்றி அதிமுக பொன்விழா கல்வெட்டை திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் […]
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசுக்கள் பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்தவகையில் பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் உற்பத்தி செய்யாத மற்றும் தரம் தாழ்ந்த காளைகளின் விதைகளை நீக்குவதற்கு அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங்க் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதற்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் மட்டுமல்லாமல் ஆளும் பாஜகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். […]
ஆயிரம் விளக்கு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா அம்மா நினைவிடத்திற்கு சென்றது அரசியல் நிகழ்வாக நான் பார்க்கவில்லை. ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் பார்க்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் என்று முதல்வர் முக ஸ்டாலின் சொல்லுகிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உதயநிதி அவர்களே 5 மாதத்தில் இவ்வளவு சேவைகளை நாங்கள் மக்களுக்காக செய்திருக்கிறோம் என்று சொல்லி ஏன் களத்தில் இறங்கி வாக்கு கேட்க […]
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் பாமகவின் செயல்பாடுகள், கூட்டணி குறித்த நிலைப்பாடு ஆகியவற்றிற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவு நமக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. நாம் பலமான கட்சியாக இருந்தாலும் நம்முடைய பலம் எல்லாம் எங்கே போய்விட்டது. எனது 40 வருட கால உழைப்புக்கு தற்போது மரியாதை கிடைக்காமல் போய் விட்டதே என்று கவலை தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், யாரும் ஆதாயத்துக்காக கட்சியில் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் திமுக அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றியடைந்தது. இந்த உள்ளாட்சித்தேர்தலில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன. அந்தவகையில் கோவை குருடம்பாளையம் ஒன்றியத்தில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால் பிரபலமானார். பலரும் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாக்கி வந்தனர். இதனையடுத்து தற்போது முத்து என்பவர் அடித்துள்ள நோட்டீஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் 9வது வார்டில் 6 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். […]
தமிழக பாஜக நிர்வாகியான கல்யாணராமன் சித்தாந்த கருத்துகளை பேசி பலமுறை சர்ச்சைகளில் சிக்கக் கூடியவர். திமுக தலைவர்கள் பற்றி கடுமையாக விமர்சித்தும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறார். சிலமுறை அவரது வரம்பு மீறிய செயல்பாடுகளுக்கும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரைப் பற்றி இணையதளத்தில் அவதூறாக கருத்து பரப்பியதையடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் போதிய ஆதாரங்களை சேகரித்து 10 […]
பல அரசியல் தலைவர்களை பற்றி இழிவாக பேசிய துரைமுருகன் வழக்கில் உள்ளே சென்ற நிலையில் ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைவர்கள் குறித்து சாட்டை துரைமுருகன் ஆவேசமாக பேசி அவதூறு பரப்பினார். இதனால் திமுக தொண்டர்கள் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்வாறு நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும் […]
ராமச்சந்திர ஆதித்தனார் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் என்று முதல்வர் ஐயா அவர்கள் சொல்லுகிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உதயநிதி அவர்களே 5 மாதத்தில் இவ்வளவு சேவைகளை நாங்கள் மக்களுக்காக செய்திருக்கிறோம் என்று சொல்லி ஏன் களத்தில் இறங்கி வாக்கு கேட்க வில்லை? அதற்கு […]
தமிழக அரசால் சென்னையில் புதிதாக கட்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் உள்ள கோயம்பேடு உயர்மட்ட சாலை மேம்பாலத்தை திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னையில்கட்டப்பட்ட மேம்பால பணிகள் அனைத்தும் 93.50 கோடி மதிப்பீட்டில் 2015 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் அனைத்துமே 2018ல் முடித்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் ஆட்சியில் 2018 வரை எதுவுமே […]
பல்வேறு தடைகளுக்கு பிறகு சசிகலா இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொண்டர்களுடன் புடைசூழ வந்த சசிகலா ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் சிந்தி தன்னுடைய அஞ்சலியை செலுத்தினார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அதிமுக கொடியை ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் சமாதி, அண்ணா சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான் தாமதமாக வந்தது ஏன் என்று உங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். அம்மாவுடன் […]
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடலில் எல்லை என்பதே கிடையாது. இதுபோன்ற கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர்கள் காற்றின் வேகத்தில் தான் சொல்வார்கள். இது போன்று கைது நடவடிக்கைகளை சித்திரவதைகளையும் முற்றிலும் நிறுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் […]
சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று அடிக்கடி அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து ஏற்கனவே கூறியிருந்தபடி, இன்று அம்மா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவால் அதிமுகவில் எந்த விதமான பிளவையும் ஏற்படுத்த முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைதான் அம்மா என்று மக்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் நானும் அம்மா தான் என்று சசிகலா சொல்லி வந்தால், அதை மற்றவர்கள் பார்த்து கேலியாக சிரிக்கின்ற […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த ஒரு சில மாதங்களில் மின்வெட்டு பிரச்சினை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது. இதற்கு கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாததால் மின்வெட்டு தொடர்ந்து நடைபெறுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதனையடுத்து தமிழகம் முழுவதுமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று நடைபெற்றது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மின் வயர் அறுந்து விழுந்து உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே விவசாய நிலத்தில் மின்சார […]
தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் தலைவர் கி.வீரலட்சுமி தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்று சொல்லிவரும் சீமானிடம் 2016 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலின்போது தமிழர்கள் தமிழர்களே ஆள வேண்டும் என்று பாராளுமன்றம் முன்பு தீக்குளிக்க சீமான் தயாராக இருக்கிறாரா? என்று சவால்விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக வாட்ஸ் அப்பில் சிலர் ஆபாச படங்களை அனுப்பி வருகிறார்கள். அந்த ஆபாச படங்களை […]
திமுக வளர்ந்ததே கல்லூரிகளில் தான் என்பதனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமான கல்லூரிகளை திறப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியபோது, ஒருவருக்கு கல்வி என்பது அவருக்கு மட்டுமல்லாமல், அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும், நாட்டுக்கும் பயன்படுவதாக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான கல்வியாக இருக்க முடியும். கல்வியுடன் சேர்த்து சமூக அக்கறையையும் உடனடியாக அதனோடு புகட்ட […]
தெற்கு கோவாவிலுள்ள தர்மேந்திரா கிராமத்தில் தடவியல் அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடைபெற்றது. அதுமட்டுமின்றி இந்தியாவினுடைய எல்லைகளை யாரும் சீர்குலைக்க வேண்டாம் என்ற ஒரு செய்தியையும் அனுப்பி இருந்தோம். எல்லையில் அத்துமீறல் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தது ஒரு காலம் இருந்தது. ஆனால் இப்போது நாம் பதிலளிக்க வேண்டிய நேரம் இது. அடுத்த வருடம் […]