பண்ருட்டி அருகே உள்ள முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைத்தொடர்ந்து அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் டிஆர்பி ரமேஷ் உள்பட 5 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கடலூர் திமுக எம்பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த நிலையில் எம்பி ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டியில், என் மீதான புகாரானது ஆதாரமற்றது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே […]
Tag: அரசியல்
செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற ஒரு மாபெரும் இயக்கம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டு காலத்திற்கு மேலாக உலகம் உள்ளவரை தலைக்கும், ஓங்கும், வளரும் என்கின்ற அந்த கருத்தை எம்ஜிஆர் அவர்கள் அன்றைக்கு கழகத்தைத் தோற்றுவித்தபோது சொன்ன கருத்துக்கள் . அவருடைய கருத்துக்கள் எந்த அளவிற்கு ஒரு தொலைநோக்குப் பார்வையோடு கழகம் 50 வது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த வேளையில் […]
பொதுமக்கள் அதிமுக தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரத்தம் ஓடுகின்ற ஒரு தொண்டர், புரட்சித்தலைவி அம்மாவின் ரத்தம் ஓடுகின்ற ஒரு தொண்டன் சாகும்வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தான் இருப்பார். எங்கேயும் போகமாட்டார், சிறையில் இருந்து வந்தவர்கள் அப்போது ஏன் போகவில்லை அம்மாவுடைய நினைவிடத்திற்கு. அப்போது போகவில்லை. ஆனால் இப்போது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக போகிறார். எல்லா […]
தமிழக எல்லையோர மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக தெரிவித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் தலைமையில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று வாக்குறுதியின்படி தற்போது வரை 6 லட்சத்து ஐம்பதாயிரம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக […]
அமைச்சர் செந்தில் பாலாஜி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “தமிழகத்திற்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி நாளொன்றுக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் தற்போது கையிலிருக்கும் நிலக்கரியினை மாநிலங்களின் தேவைக்கேற்ப மத்திய அரசானது பகிர்ந்து கொடுத்து வருகிறது. மேலும் 60 ஆயிரம் டன் நிலக்கரியினை தினமும் எடுத்து வருகிறோம். மின் உற்பத்தியானது தமிழ்நாட்டில் 43 சதவீதத்திலிருந்து 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியானது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. விவசாயத்திற்கு தேவையான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மின்வெட்டானது நிலக்கரி […]
முதலமைச்சர் குடும்பத்திற்க்காக ஞாயிறு கிழமை கோவிலை திறக்காங்க என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிறைய பத்திரிகைகளில் நியூஸ் வந்திருக்கு உண்மையா ? பொய்யா என்று தெரியாது. நம்ம திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு கோவிலுக்கு திமுகவினுடைய முக்கியமான தலைவர் போன ஞாயிறுகிழமை சென்று வணங்கி வந்திருக்கின்றார். ஞாயிற்றுக்கிழமை கோவில் கண்டிப்பா பூட்டி இருக்க வேண்டும். கோவிலுக்கு வெளியே பிரச்சினை இருக்கு, வீடியோ எல்லாம் வந்து இருக்கு. […]
எடப்பாடி பழனிசாமி பார்த்தால் மக்கள் ஓட்டு போட வாக்களிக்க தயாராக இல்லை என புகழேந்தி குற்றம் சாட்டினார். சசிகலா கையை நீட்டி முதலமைச்சர் எடப்பாடி என கூறியதால் தானே காலில் விழுந்தார் எடப்பாடி பழனிச்சாமி. காலில் விழுந்து ஆட்சியை வாங்கி முதலமைச்சர் ஆனவர். என்ன அவங்களுடன் மனக்கசப்பு ?உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளே சென்றார்கள், வெளியே வந்து விட்டார்கள். அதனால் நான் ஆதரிக்கப் போவதில்லை, நியாயத்தை பேசுகிறேன்.முதலில் மு க ஸ்டாலின் முதலமைச்சர் ஏன் தேர்தல் பிரச்சாரத்திற்கு போகவில்லை […]
அரசியலுக்கு சீமான் குழந்தை என கொளத்தூர் மணி கிண்டலத்துத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, கன்னியாகுமரி மாவட்டத்தையும் தன்னோடு இணைத்துக் கொண்ட நவம்பர் 1ஆம் நாளினை தாயக தமிழ்நாடு நாளாக விழாவாக, கலை நிகழ்ச்சிகளோடு முன்னெடுக்க முடிவு செய்து இருக்கிறோம். எங்களுடைய பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் தலைமை குழு உறுப்பினராக இருக்கக் கூடிய தோழர் குடந்தை அரசன் மீது கூட நேற்று காவல் துறையினர் பெரும் எண்ணிக்கையில் அவர் வீட்டிற்குள் நுழைந்து அவரை தேடுவதும், தம்பியை அழைத்துச் செல்வதுமான […]
சீமானை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் கலவரத்தை தூண்டும் விதமாக நாம் தமிழர் இயக்கம் என்று ஒரு கட்சி இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து திருநெல்வேலியில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன், திருநெல்வேலியில் இருந்து 1000 காங்கிரஸ் தொண்டர்கள் அவர் வீட்டை முற்றுகையிடுவோம். தமிழகம் மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி அனைத்து […]
அமைச்சர் சேகர் பாபு குழம்பி போயுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு வெளியிட்டுள்ள பயின்ட்ல கோவிலை திறக்க ஆர்டர் மிக தெளிவாக இருக்கிறது. அவர் வேண்டும் என்றால் இந்த பாயிண்டை விவாதிக்கலாம், சாவல் விடலாம் கட்சியில் இருந்து நாங்க யாரையாவது அனுப்பி விடுறோம். அவர்கிட்ட உட்கார்ந்து அவர் பேசட்டும். அவர்களுடைய கடவுள் இல்லை என்ற கொள்கையை புகுத்துவதற்காக இந்த டிராமா செய்வதை திராவிட முன்னேற்றக் […]
ஓ.பி.எஸ் சசிகலாவோடு பேச வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவில் தலைமை மாறினால் எல்லாம் சரியாகப் போய்விடும். 100% தொண்டர்கள் புரட்சி இந்த கட்சியில் ஏற்படப்போகிறது. எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து விரட்டி அடிகின்ற காட்சி விரைவிலே தமிழ்நாடு பார்க்கும். புதிய தலைமை வரும், ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தலைமை அஇஅதிமுகவிற்கு வந்திருக்கிறது. இதை ஓபிஎஸ் அண்ணன் முடிவு பண்ணி, அவர் சின்னமாவோடு பேசி அழைத்து வந்து புதிதாக எதாவது செய்தால்தான் இந்தக் […]
எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து விரட்டி அடிகின்ற காட்சி விரைவிலே தமிழ்நாடு பார்க்கும் என சொல்லி புகழேந்தி பரபரப்பை கிளப்பியுள்ளார். மோடியின் கைப்பாவையாக தான் அதிமுக ஆட்சி இருந்தது என்று சொல்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி, இப்ப கூட அதுதான் நடக்கிறது. வாக்குப்பதிவு போய்க்கொண்டிருக்கிறது இந்த நேரத்தில் எதற்கு ஓட்டு போட வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. ஆனால் என்னுடைய கருத்து என்னவென்று கேட்டீர்கள் என்றால், என்ன தெளிவு இந்த […]
மக்களிடம் பொய் சொல்வதை மட்டுமே ஒரு பிழைப்பாக அமைச்சர் வைத்திருக்கின்றார் என அண்ணாமலை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சில கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். மத்திய அரசை காரணம் காட்டி அதன் காரணமாக நாங்கள் கோவிலை திறக்கவில்லை மத்திய அரசிடம் இருந்து அனுமதி வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். மத்திய அரசு அனுமதியை நான் படிக்கின்றேன். என்ன ஆர்டரை வைத்து அவர் பேசிக்கொண்டிருக்கிறாரோ அதை ஆர்டரில் மத்திய அரசு […]
மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து அங்கிருந்து தொடர்ந்து கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி வரும் சம்பவங்கள் நீடித்து வருவதாக நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து தக்கலை வட்டாச்சியர் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். அப்போது பேசிய நாம் தமிழர் கட்சி இளைஞர் நிர்வாகி, “கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சீமான் வந்தால் […]
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பாஜக தனித்து போட்டியிட முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் குமரிமாவட்டத்தில் உள்ள மலைகளில் கல்குவாரி என்கிற பெயரில் மலை மணல் எம் சாண்ட் நொறுக்கி கேரளாவிற்கு எடுத்து செல்கிறார்கள். மக்களுக்கு அல்ல அதானி கட்டும் துறைமுகத்திற்கு செல்கிறது. கல் குவாரியை தனியாருக்கு கொடுக்கிற உரிமை அரசுக்குத்தான் உள்ளது. அரசுக்கு தெரியாமல் யாராலும் செய்ய முடியாது. தொடர்ந்து போராடித்தான் தடுக்க முடியும். வேறு வழியில்லை. நாங்கள் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து கடைகள், தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் சில மாதங்களாக அனைத்தும் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கோயில்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் […]
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு என்னதான் அதிமுக இரும்புக்கோட்டை என்று மூத்த தலைவர்கள் கூறினாலும் கட்சி முன்பு போல இல்லை என்று அதிமுகவின் கடைக்கோடி தொண்டர்களுக்கும் கூட தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் அதிமுக வலுவிழந்து இருப்பதை ஒரு போது பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று சசிகலா தினம் தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு வருகிறார். மேலும் தான் மீண்டும் கட்சியை சரி செய்வேன் என்றும், எம்ஜிஆர் இறந்த பிறகு கட்சி எப்படி இருந்ததோ அதேபோல தற்போது ஜெயலலிதா மறைவிற்கு பிறகு […]
மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து அங்கிருந்து தொடர்ந்து கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி வரும் சம்பவங்கள் நீடித்து வருவதாக நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து தக்கலை வட்டாச்சியர் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். அப்போது பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி இளைஞர் நிர்வாகி 2014ஆம் வருடம் ஆத்தூரில் […]
அதிமுக ஆட்சியில் இ- சேவை மையங்கள் சரியான பராமரிக்காததால் காரணத்தினால் குளறுபடிகள் ஏற்பட்டு வருவதாகவும், அதை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் திருநங்கைகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக மக்களை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார் . தொடர்ந்து பேசிய அவர், உண்மையிலேயே அதிமுக ஆட்சியில் இ சேவை மையங்களில் உள்ள கம்ப்யூட்டர்களை பராமரிக்கவில்லை கடந்த […]
உண்மையான திராவிட இயக்கம் அதிமுக மட்டுமே என்றும், 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தந்தை பெரியார் அவர்கள், அண்ணா அவர்கள் கண்ட கனவை நிறைவேற்றியது என்றால் அண்ணா திமுக ஒன்று தான். உண்மையான திராவிட இயக்கம் என்றால் அண்ணா திராவிட இயக்கம் தான். அது திமுக அல்ல. 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. […]
சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று தொண்டர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான உண்மையான பாசம் வைத்து இருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்முடைய ஒரே நோக்கம் புரட்சித்தலைவி அம்மா சொல்லிச் சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறு யாரை பற்றியும் கவலை படக்கூடாது. எம்ஜிஆர் மீது பாசம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே கட்சியை விட்டு போக மாட்டார்கள். தொண்டர்களின் […]
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எப்படியாவது வெற்றியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பு காட்டி வந்த நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகளும், குழப்பங்களும் ஏற்பட்டு வரும் நிலையில் சசிகலா தான் மீண்டும் கட்சியை சரி செய்வேன் என்றும், எம்ஜிஆர் இறந்த பிறகு கட்சி எப்படி இருந்ததோ அதேபோல தற்போது ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி இருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் […]
மத்திய அரசிடம் ரூ 800 கோடி வாங்கியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுபராமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், ஒன்றிய அரசின் சார்பில் நானும், சுகாதாரத்துரையின் செயலாளரும் கொரோனா ரெகவரி பேக்கேஜ் என்கின்ற வகையில் 800 கோடி ரூபாயை ஒன்றிய அரசிடமிருந்து கேட்டுப் பெற்று வந்திருக்கிறோம். மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து இந்த ஆண்டுக்கு கொரோனா ரெக்கவர் பேக்கேஜ் என்கின்ற வகையில் ஒரு 800 கோடி. இதையெல்லாம் எப்போது இந்த நிதிநிலை […]
ஓபிஎஸ் கண்டித்து அறிக்கை வெளியிட்டது எங்களுக்கு மிகப்பெரிய அளவிலான வருத்தமாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்திக்கையில், ஊடகத்திலிருந்து வருகிற ஒரிரு செய்திகளை மட்டுமே நம்பி ஒரு முன்னாள் துணை முதலமைச்சரே… 10 ஆண்டுகாலம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தவரே இதற்காக ஒரு அறிக்கை விடுவது எந்த வகையில் நியாயம் என்றும் தெரியவில்லை. அவரும் கூறியிருக்கிறார்… நிதிச்சுமையின் காரணமாகத்தான் பிலிம் நெகடிவ் எடுப்பதில்லை என்கின்ற வகையில் புகார் கூறியிருக்கிறார். அதோடு […]
அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது . அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும்.தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டனை நம்பியே அதிமுக உள்ளதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ கூறியுள்ளார்.சசிகலா நிச்சயமாக அதிமுகவுக்கும் வருவேன் என கூறிய நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூயின் இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் எந்த அலை வந்தாலும் அதை தமிழகம் சந்திக்கும் வகையில் தமிழக அரசு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எதிர்காலத்தில் எந்த அலை வந்தாலும் அதை தமிழகம் சந்திக்கும் வகையிலான ஆக்சிஜன் ஆலைகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது. உலகம் முழுக்க டெலி ரேடியாலஜி பிரபலம் ஆகி, எங்கேயும் யாரும் கையில் கொண்டு செல்வதே இல்லை. இந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்த பிறகும் கூட […]
அமைச்சர் சேகர்பாபு முட்டாள் என்று நினைத்திருக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சினிமா தியேட்டர் ஏ.சி ஹால். எந்த கோவில் ஏசி இருக்கு. கோவில் திறந்தவெளி. ஒரு ஏசி ஹாலுக்குள்… சினிமா தியேட்டருக்கு மக்களை உட்கார அனுமதிக்கிறார்கள். கொரோனா பரவும் என்றால் மூடிய ஏசி ஹாலில் தான் வேகமாக பரவும். சேப்பாக்கத்தினுடைய எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அவருடைய சமூக வலைதள அக்கவுண்டில் இந்த […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் எதுவுமே தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், இல்லாத செவிலியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு நாங்கள் ஏன் 144 கோடி ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் தலைப்புகளையாவது படித்து தெரிந்து கொண்டு நிதிநிலை அறிக்கை சம்மந்தமான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டிருக்கலாம். அதிமுக […]
செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அவசியம் இருக்காது. ஜனநாயக முறைப்படி தான் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதை தெரிந்து கொண்டுதான் அமைச்சர் சாகும் வரை உண்ணாவிரதம் என்று கூறியிருக்கிறார். சாகும் வரை உண்ணாவிரதம் […]
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் திமுக நிர்வாகிகள் உட்பட வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக வலியுறுத்தியுள்ளது. வாக்கு சாவடி மையங்களுக்குள்ளாக அந்த மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அல்லது பக்கத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட தற்போது பதவியில் இருக்க கூடிய நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களோ, உள்ளாட்சி பிரதிநிதிகளும் கூட்டுறவு அமைப்பில் இருக்கக்கூடிய பிரதிநிதிகளோ வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள்ளாக அனுமதிக்கபடக்கூடாது. கட்டாயமாக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களும் கோவில்கள் திறக்கப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆளும் கட்சிக்கும், பாஜகவிற்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்தவகையில் கோவிலை திறக்குமாறு பாஜக சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, அடுத்த பத்து நாட்களில் கோவிலை திறக்காவிட்டால் திமுக அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் […]
கடவுள் இல்லை என்கின்ற நம்பிக்கையை திமுக நம்மை நம் மீது திணிக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தன்னிச்சையாக முடிவெடுப்போம் என்று சொன்னார்கள். கோவிலை முடியதற்கு இப்போது இவர்கள் காரணம் காட்டுவது மத்திய அரசினுடைய சுற்றறிக்கையை வைத்து காரணம் காட்டுகிறீரர்கள். அதுவும் பொய் என்று நமக்கு தெரியும். ஏனென்றால் தேவைப்படும் பொழுது மத்திய அரசு சுற்றிக்கையை […]
fir போட்ட கொலை செய்தவர்கள், கொள்ளையர்களை கைது செய்தால் திருப்தியாக இருக்கும் என புகழேந்தி ஸ்டாலிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தியிடம் திமுக ஆட்சியை எப்படி பாக்குறீங்க என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த அவர், மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்று பேரறிஞ்சர் அண்ணா சொல்வார்கள். குறை இருந்தால் குறையை சொல்லலாம், நிறை இருந்தால் நிறையை சொல்லாம். அதிமுக ஜெயித்து ஆட்சிக்கு வந்திருந்தால் எடப்பாடி பாக்கெட்டிலும், தங்கமணி, […]
கடலூர் முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி கொல்லப்பட்ட கொலை வழக்கில் கடலூர் எம்பி ரமேஷை கைது செய்ய சிறிதும் தாமதிக்க கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் எம்பி டி ஆர் வி ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளி கோவிந்தராசு என்பவர் கொடூரமான முறையில் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உதவி உதவியாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான […]
திமுக லாஜிக் இல்லாமல் கோவிலை மூடி இருக்கின்றார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அரசு எந்த ஒரு லாஜிக்கான காரணமில்லாமல் கோவிலை மூடி இருக்கின்றார்கள். நாங்கள் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்த போது சொல்லியதை தான் இப்போது சொல்கிறோம். ஒரு எதிர்க்கட்சியாக ஆளுகின்ற அரசு செய்கின்ற நல்ல மக்கள் பணிக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுப்பது பாரதிய ஜனதா கட்சியினுடைய நோக்கம். நல்ல விஷயங்களுக்கு ஒத்துழைப்பு […]
அதிமுக தலைமையில் உள்ள எடப்பாடி பழனிசாமி மாறாவிட்டால் அதிமுக அழிந்து விடும் என புகழேந்தி விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, இன்றைய தினம் தந்தை பெரியார் நாளை சமூக நீதி நாளாகவும் நாவலருக்கு சிலையும் இப்படி பல நல்ல செய்திகளை இந்த அரசிடம் பார்க்க முடிகிறது. திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா, கலைஞர் என்றெல்லாம் உச்சரிக்க முடிகிறது. ஆகவே அந்த வியூகம் அப்படியே […]
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது. 2022ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் ? என சி-வோட்டர் நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. சி-வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பின்படி உத்தர […]
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது. 2022ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் ? என சி-வோட்டர் நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. சி-வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பின்படி உத்தர […]
“அரசியலுக்கு வந்து என் வாழ்க்கையை அழிச்சிகிட்டேன்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எங்கள் ஊரில் அமைதியாக தேர்தல் நடக்கிறது. இப்போதுமே இப்படி தான். எங்கள் கிராமமே ஒன்றாக இருக்கிறது. இந்த தடவை என்ன மகிழ்ச்சி என்றால் ? யார் யார் யாருக்கு ஓட்டு போடுகிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனா எங்க ஊரு ஒன்றாக இருக்கின்றது. ஒற்றுமையாக இருக்கின்றது. எந்த காலத்திலும் இல்லாத ஒரு ஒற்றுமையை […]
2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடைய சொத்துக்களை முடக்க கூடிய நடவடிக்கைகள் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் கூட பினாமி சட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சசிகலாவின் பையனூர் பங்களா சொத்தை வரி வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் இதுவரை 2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கம் செய்தவருமான துறை அதிகாரிகள், தற்போது கொடநாடு எஸ்டேட் மற்றும் கர்சன் […]
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததாக கூறி இந்த வழக்கானது மூன்றாவது நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து ராஜேந்திரபாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து கடைகள், தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் சில மாதங்களாக அனைத்தும் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கோயில்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் […]
எச்.ராஜா, சீமான் அரசியலில் சாபக்கேடு என ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் ஜெயக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார். சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜெயக்குமார், சீமான் இப்படி கொச்சையாக பேசுவது நாட்டினுடைய ஜனநாயகத்திற்கு ஆபத்து, அவர் நடைமுறை நாகரிக அரசியலை ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியை சந்தித்து மனு கொடுத்திருக்கின்றோம். மதிப்பிற்குரிய சைலேந்திரபாபு அவர்கள் எங்களிடத்தில் 15 நிமிடத்திற்கும் மேலாக விசாரித்து, நாங்கள் […]
நாம் தமிழர் கட்சியின் சீமான் கொட்டத்தை அடக்க வேண்டும் என மல்லை சத்யா விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசிய மல்லை சத்யா, வன்முறையால் எதையும் சாதித்துவிட முடியாது எனவே உன்னுடைய கொட்டத்தை அடக்குவதற்கு இங்கே அனைவரும் நாங்கள் ஒன்று திரண்டுள்ளோம். இனியும் தொடருமேயானால் அதை சந்திப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்ற சவாலை முன்வைத்து அதற்கு ஆண்மையும், வலிமையையும் இருக்குமேயானால் நாளையும் தேதியும் குறியுங்கள் சந்திப்பதற்கு நாங்கள் வருகிறோம். இடத்தை நீங்கள் […]
என் மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிள்ளார். தென்காசி மாவட்டம் கலிங்கம்பட்டியில் ஊரக ஊராட்சி மன்ற தேர்தலில் வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவே வெற்றிபெறும் என்று கூறினார். மேலும், உத்தரபிரதேச விவசாயிகள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தது பேசிய அவர், எனக்கு என் மகன் அரசியலுக்கு வருவது விருப்பம் இல்லை. காரணம் நான் 56 […]
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காங்கிரஸ் கட்சியினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்து கொண்டிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலின் பிரச்சாரத்தின் போது ஒரு அரசியல் கட்சியை சார்ந்த சீமான் என்பவர் காங்கிரஸ் பேரியக்கத்தை பற்றியும், காங்கிரஸினுடைய தலைவர்களை பற்றியும் மிக அவதூறான […]
பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என மல்லை சத்யா தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுகவின் மல்லை சத்யா,அண்ணன் பொழிலன் அவர்கள் எப்படிப்பட்ட தியாக மறவர் என்பதை நாடு அறியும். அவருடைய தந்தையார் செய்திருக்கின்ற சாதனைகளை வரலாறு மறக்காது. அப்பேற்பட்ட தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்கள் இங்கே இந்த களத்தில் நின்று கொண்டிருக்கிறார். அவரையும் அச்சுறுத்த நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் அண்ணன் பொழிலன் […]
சீமான் செய்யும் ரவுடி அரசியல் என திருமுருகன் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, தஞ்சை டெல்டா முழுவதும் மீத்தேன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை களத்தில் நின்ற மூத்த தமிழ் தேசிய தோழர். எந்த ஊரில் எல்லாம் மீத்தேன் திட்டம் எல்லாம் வரப்போகிறது என்று சொல்கிறார்களோ அந்த ஊர்களுக்கு எல்லாம் சென்று மக்களுக்கு அதனுடைய ஆபத்துக்களைச் சொல்லி அங்கே போராட்டத்தை கட்டமைத்து அதற்கு பல்வேறு வழக்குகளை வாங்கி சிறைக்கு சென்று, இன்றும் அந்த அரசு […]
முதுகெலும்பு இல்லாத ஒரு மனிதன் உன்னை எதிர்ப்பதற்கு நாங்கள் கூடி இருக்கிறோம் என சீமானை மல்லை சத்யா தாறுமாறாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மல்லை சத்யா, திராவிட முன்னேற்ற கழகம் தோற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று சொன்ன சீமான் அவர்களே… திராவிட முன்னேற்ற கழகம் தோற்றால் சிங்களன் மகிழ்ச்சி அடைவான், பிஜேபி மகிழ்ச்சி அடையும், சீமான் மகிழ்ச்சி அடைகிறான் என்று சொன்னால் இந்த மூன்று பேரும் யார் ? […]
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் ,உத்தரபிரதேசம் வன்முறை சம்பவத்தில் பிரதமர் ஈவிரக்கமற்றவராக இருக்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்ககூடிய விளையாட்டு வீரர்களுக்கு முட்டியில் காயம் ஏற்பட்டால் கூட அதற்காக […]