முன்னாள் அமைச்சர்களான ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர் பி உதயகுமார், மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி வெற்றி பெற திமுகவினர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மதுரையில் உள்ள 16வது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள 97 வாக்குச்சாவடிகளில் […]
Tag: அரசியல்
நாம் தமிழர் கட்சி ஜனநாயக ரீதியான தர்கங்களை அரசியலை முன்னெடுப்பற்கு நீங்கள் வாருங்கள், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என மதிமுகவின் மல்லை சத்யா விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மல்லை சத்யா, எல்லோருக்கும் இரண்டு கைகள்தான். உனக்கு மட்டும் 100 கை இருப்பதை போல, நாங்கள் கை இல்லாமல் இருப்பதை போல பேசுவது. இந்த பிரச்சனைக்கு உள்ளே நாங்க போக விரும்பலை. ஒரு ஜனநாயக ரீதியான தர்கங்களை அரசியலை முன்னெடுப்பற்கு […]
கோவை தெற்கு பகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் என்ன நடந்தாலும் அதனை அரசியலாக மாற்ற ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறவில்லையா? வேளாண் சட்டங்களை திரும்ப பெற விவசாயிகள் நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ள நிலையில் நீதிமன்றத்தையும், பாராளுமன்றத்தையும் விவசாயிகள் மதிக்கவில்லை. பாஜக ஆட்சியில் உள்ள யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்சி நிச்சயம் அவர்களை ஒருபோதும் பாதுகாக்காது. […]
பிஜேபியின் கைக்கூலி சீமான் என மதிமுக மல்லை சத்யா விமர்சித்துள்ளார். பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும், நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முன்னணி நிர்வாகி மல்லை சத்யா பேசும் போது, பாராளுமன்றத்தில் பேசுகின்ற போது சொன்னார், பக்கத்து வீட்டில் கூடி குலாவி கொண்டிருப்பதை எட்டிப் பார்ப்பது தவறு. மாறாக அந்தப் பெண் துன்புறுத்தப்படுவதும், கொலைவெறி தாக்குதல் நடத்துகின்ற போது அவள் கதறுகின்ற […]
தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கோவிலை திறக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதுமாக பாஜக சார்பாக 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, பாரிமுனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கோவில்களில் திறக்க தமிழக அரசு அனுமதி மறுப்பதால் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கொரோனாவை காரணம் காட்டி நம்முடைய உரிமை மறுக்கப்படும் போது இதைத் தவிர வேறு வழியில்லை. பள்ளிகளை திறக்க அரசு முடிவு […]
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் போலியான ஓட்டுரிமை அளித்து, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக திமுக வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில் பேசிய திமுக வழக்கறிஞர், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் போலியாக ஓட்டுரிமை அளிக்கப்பட்டதாக கூறினார். இரண்டு மாவட்டங்களிலும் நேற்று முதல் கட்டமாக வாக்களிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஒன்பதாம் நாளன்று […]
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், திருவாரூர் எம்பியுமான ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், இன்றைய உள்ளாட்சித் தேர்தலில் இங்கே இருக்கின்ற காங்கிரஸ் காரர்கள் எல்லாம் ராஜீவ்காந்திக்கு பிறந்தவர்களா? இவர்கள் எல்லாம் ராஜீவ்காந்தியின் பிள்ளைகள் போல நடந்து கொள்கிறார்கள் என்று சீமான் பேசியுள்ளார். எங்கள் மீது அவதூறான வார்த்தையும் பயன்படுத்தி பேசி இருக்கிறார் சீமான். அவர் மீது […]
சீமானின் வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் பயங்கரவாத பாதைக்கு செல்ல நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு 1991-ல் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதாக அறிக்கையில் கூறியுள்ளார். இந்தியாவை பொருத்தவரை விடுதலைப்புலிகள் அமைப்புக்கான தடை 5 ஆண்டுக்கு ஒருமுறை நீடித்து வருவதாக குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக நாம் தமிழர் இயக்கம் பகிங்கிரமாக செயல்பட்டு வருவதாக அழகிரி குற்றம்சாட்டினார். அமைதி பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் […]
22 விழுக்காடு வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் உத்தரவுப்படி 17 விழுக்காடு மட்டுமே தமிழக நெல்கொள்முதல் நுகர்பொருள் வாணிபத்தல் கொள்முதல் செய்யப்படுவதாக கூறியுள்ளார். ஆனால் டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக ஈரப்பதம் 20 விழுக்காட்டுக்கும் மேல் உள்ளதால், கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நெல் கொள்முதலை துவக்கியுள்ள நுகர்பொருள் […]
நாங்கள் சொல்வது அறிவியல் பூர்வமாக இருக்கும் என பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நாம எப்பவுமே மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடிய கட்சி கிடையாது. அதாவது கொரோனா ஆரம்பிக்கப்பட்ட போது…. இந்த ஆட்சி வந்தபோது, இரண்டாம் அலை கொரோனா இருந்த போது…. அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். நம்ம கட்சியிலிருந்து போயிருந்தார்கள். அனைத்து கட்சி கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. எல்லாமே டேட்டாவை […]
பாஜக கூட 4இடங்களில் வெற்றிபெற்று விட்டது, நாங்கள் ஒன்றிலும் கூட ஜெயிக்கவில்லை என சீமான் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சீமான், இவ்வளவு வலிமையான படையை உருவாக்கியது ஒற்றை மனிதனின் உழைப்பு. பிரபாகரன் என்கின்ற ஒரு பெரும் தலைவருடைய பிள்ளை சீமான் என்கின்ற ஒருதன்னுடைய உழைப்பு. 10 ஆண்டுகளாக வீதிவீதியாக கத்தி, கதறி ஒரு பெரிய படையை திரட்டி வைத்திருக்கிறேன். அதிகபட்சமாக இந்த ஐந்தாண்டு தான், இல்லன்னா தப்பி தப்பி போனாலும் பத்து ஆண்டுகள்தான், அதுக்கப்புறம் எங்களை […]
வேளாண் துறைக்கு பட்ஜெட் போடுவதை விட பட்ஜெட் மூலமாக என்ன சாதிக்க வரீங்க ? என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக சொன்ன கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கை பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னது, அதுபோல தங்க நகை யாரெல்லாம் கடன் வாங்குகிறார்களே… அவர்களுக்கு தீர்வு கொடுப்பேன் என்று சொன்னது, அது எதுவுமே செய்யவில்லை. இப்போது முதலமைச்சர் சொல்கிறார் நாங்கள் இதை […]
செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்த கேள்வி கேட்கப்பட்ட போது, பெட்ரோல் விலை கட்டுக்குள் கண்டிப்பாக கொண்டுவரப்படும். கொண்டுவர வேண்டும் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அரசு எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதை ஜிஎஸ்டி கொண்டு வரவேண்டும் என்பது நம்முடைய நிலைப்பாடு. நான் இன்றைக்கு அதை சொல்லவில்லை, நிறைய பேர் சொல்லுறாங்க அரசியல் அண்ணாமலை பண்ணுறாரு என்று… 2016 இல் இருந்து நம்முடைய பெட்ரோலியத்துறை அமைச்சர் […]
உங்கள மாதிரி கூல கும்பிடு போட்டு கைகட்டி நிற்க மாட்டேன் என சீமான் அதிரடியாக பேசியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் பிச்ரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மோடி பூச்சாண்டி இல்லன்னா இதுவும் நடந்திருக்காது. மோடி வந்துருவாரு, மோடி வந்துருவாரு, சீமானுக்கு ஓட்டு போடதே நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாதே மோடி வந்துடுவார் என சொன்னாங்க. பிஜேபி கூட 4 இடத்தில் வந்துருச்சு, நாங்கள் ஒரு இடத்தில் கூட வரவில்லை. அதை பற்றி […]
நான் எந்த இனத்தில் பிறந்தேனோ என்னால் முடிந்ததை செய்துவிட்டேன் என சீமான் தேர்தல் பரப்புரையில் கூறினார். ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான், நானும் தற்குறி தறுதலையாக தான் திரிந்திருப்பேன் பிரபாகரனை பார்க்கவில்லை என்றால். திமுகவில் தான் இருப்பேன், ஒருவேளை அமைச்சராக கூட இருந்திருக்கலாம், எம்பி, எம்எல்ஏ வாக கூட இருந்திருக்கலாம் பிரபாகரனை சந்திக்க வில்லை என்றால். இப்படி வெயில் முச்சந்தியில் நின்று கத்த வைத்தவர் பிரபாகரன் தான். இந்த பெருமகனார் தான். […]
நாம் தமிழர் கட்சி ஆர்.எஸ்.எஸ் உடைய தொங்கு சதையாக இன்றைக்கு எல்லோரையும் அச்சுறுத்துகிறது என வன்னியரசு விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக கட்சியின் முன்னணி நிர்வாகி வன்னியரசு, இங்கு இருக்கின்ற அமைப்புகள் ஒட்டுமொத்தமாக பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார அமைப்புகள் என தேசிய இனங்களுடைய அடையாளத்தை அழித்து ஒழிக்க முயற்சி செய்வதற்கு எதிராக… நம்முடைய இனத்தை பாதுகாப்பதற்கு போராடிக் கொண்டிருக்கிறோம். நாம் தமிழர் கட்சி பாரதீய ஜனதா […]
விவசாய சட்டத்தில் பாதிப்பு என ஒரு பாயிண்ட் கூட சொல்லல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, விவசாய சட்டத்தில் சரியான காரணத்தை சொல்லி இதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்று சொன்னால் அதை மாற்றுவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை. இத்தனை கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்த பின்பும் கூட யாரும் கூட குறிப்பாக ஒரு பாயிண்ட் கூட சொல்லவில்லை. அரசை விட்டுறலாம்… […]
தேர்தல் தில்லுமுல்லு என திமுக அரசின் மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணையம் ஒரு சார்புத் தன்மை எடுக்கின்ற நிலையில் இருக்கும் போது உயர் நீதிமன்றத்தை அணுகி, ஒரு தெளிவான உத்தரவை பெற்றோம். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட வேண்டும். வாக்குப்பதிவை முழுமையான அந்த கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை, அதேபோன்று பூத் சிலிப் கொடுப்பது இதுபோன்ற […]
பிரபாகரனுடன் ஒரு போட்டோ வச்சுக்கிட்டு பண்ணுற அலப்பறை தாங்க முடியல என மல்லை சத்யா விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுகவின் மல்லை சத்யா,மேதக தலைவர் பிரபாகரனுடன் ஒரு நிமிடம், ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை வைத்து அவர் பண்ற அலப்பறை தாங்க முடியல. இங்கே இருக்கின்ற அனைவருமே மாவீரன் தலைவர் பிரபாகரனுடன் களமாடியவர்கள். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அன்பு தலைவர் வைகோ அவர்கள் […]
நாம் தமிழர் கட்சியும் பாஜகவின் தமிழக கிளை என விசிக கட்சியின் நிர்வாகி வன்னியரசு விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக கட்சியின் வன்னியரசு, தமிழ் தேசியம் குறித்து தான் இங்கு பேசுறவங்க எல்லாருமே பேசுகிறோம். இன்றைக்கு தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என் ரவி என்பவர் இருக்கிறார். அவர் தமிழகத்திற்கு வந்த போதே விடுதலை சிறுத்தைகள் நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். ஏனென்றால் அவர் நாகாலாந்திலே நாகர்களுக்கு என தனி நாடு கேட்டு கொண்டிருப்பதால்.. […]
கூடங்குளம் அணுமின் நிலையம் வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் இது புதிது கிடையாது, சும்மா எதிர்க்கிறார்கள். அதாவது ஜிஎஸ்டி என்றால் என்னவென்று தெரியாமல் ஒரு எம்பி ஐந்து வருடம் ஜிஎஸ்டியை எதிர்த்து கொண்டிருக்கிறார். அது ஏன் எதிர்க்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.இப்போ அவர் பேசிய பிறகுதான் நமக்கு தெரியுது… இந்த எம்.பிக்கு ஜிஎஸ்டி பற்றியே தெரியவில்லை என்று. அதே போல […]
திமுக ஜனநாயக விரோத செயலை செய்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தற்போது முதல்கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முதற்கட்ட தேர்தலில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் நிரப்புவதற்கும் 9 மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் ஒரு ஜனநாயக விரோத செயலை திமுக அரசு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் முழுமையாக திமுக அரசின் ஜனநாயக விரோத செயலை […]
நாம் தமிழர் கட்சியின் அராஜகப் போக்கை துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என மதிமுகவின் மல்லை சத்யா தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து பெரியாரிய கூட்டு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுகவின் மல்லை சத்யா, ஒரு சுற்றுச்சூழல் போராளியை தமிழ் தேசிய சிந்தனையாளனை வன்முறை நோக்கத்தோடு கொலைவெறி தாக்குதல் நடத்துவோம் முற்றாக அழித்து ஒழிப்போம் என்று அச்சுறுத்துகின்றன. இந்த அராஜகப் போக்கை துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை […]
சீமான் & நாம் தமிழர் கட்சி – சல்லி பயலுக என விசிக வன்னியரசு ஆவேசமாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு, தமிழ் தேசியம் குறித்து நடத்திய கருத்தரங்கில் தோழர் பொழிலன் அவர்களும், தோழர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களும் பேசினார்கள். தமிழ் தேசியம் எதுவென்று அவர் விளக்கி இருக்கிறார்கள் ? அவ்வளவுதான். இதற்காக அவர் வீட்டிற்குள் சென்று, அவர் குடும்பத்தோடு இருக்கும்போது அவரை அச்சுறுத்தி […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் முக […]
சசிகலா விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று தொண்டர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான உண்மையான பாசம் வைத்து இருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்முடைய ஒரே நோக்கம் புரட்சித்தலைவி அம்மா சொல்லிச் சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறு யாரை பற்றியும் கவலை படக்கூடாது. எம்ஜிஆர் மீது பாசம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே கட்சியை விட்டு போக மாட்டார்கள். தொண்டர்களின் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் திமுகவினர் செயல்பாடுகளை எதிர்த்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் கழிவறையை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அண்ணாமலை இந்த செயலுக்கு பாராட்டுக்கள் வந்தாலும், வழக்கம்போல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அண்ணாமலை […]
தமிழகத்தில் கோவில்களை வெள்ளி ,சனி, ஞாயிறு ஆகிய மூன்று கிழமைகளில் திறக்கக்கோரி பாஜகவினர் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி முன்னாள் எம்பி ராமலிங்கம் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் துரைசாமி, இந்து மத கலாச்சாரத்தை சீரழிக்கும் செயலை ஒருபோதும் பாஜக அனுமதிக்காது. இதனை கண்டித்து பாஜக இன்று […]
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதால் சீமானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கின்ற வகையிலும் செயல்படும் சீமானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து […]
பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா இந்துக்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து தொடர்ந்து அவதூறு வழக்குகளில் சிக்கி வருகிறார். கடந்த 2018 ஆம் வருடம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி சார்பிலான கூட்டத்தில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு […]
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இதனால் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் தொடரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் மக்கள் கூடுவது தவிர்ப்பதற்காக வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் அனைத்து […]
தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கழிவறையை துடைப்பம் கொண்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுத்தம் செய்யும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை […]
தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும். அரசானது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும் கோவிலில் கூட்டமானது வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில் திறந்து இருந்தால் மட்டுமே சீராக அமையும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். எனவே கோயில்களில் வார இறுதி நாட்களில் அனுமதிக்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இல்லாத கொரோனாவை காரணம் காட்டி கோயில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகவும், திரையரங்குகளை […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே முடிவுகளானது வெள்ளைத்தாளில் கொடுக்கப்பட்டு வருகின்றன என்றும், நிதி பற்றாக்குறையால் தான் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு தருவதாகும் குற்றம் சாட்டினார். மேலேயும் இப்படி தரப்படும் முடிவுகள் தெளிவாக இல்லாததால் வேறு மருத்துவமனை சென்று தங்களது நோய் குறித்து இரண்டாவது கலந்தாலோசிக்க முடியாத நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதுஎன்றும், இவ்வாறு இருக்கையில் மருத்துவர்களுக்கு படச்சுருளின் முடிவுகளானது வாட்ஸ்அப் மூலமாக பகிரபடுவதாக தகவல் வெளிவந்துள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை […]
பாஜகவைச் சேர்ந்த ஆஷிஸ் தாஸ் திரிபுரா மாநிலத்தின் சூர்மா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் தொடர்ந்து முதலமைச்சர் பிப்ளாப்தேப் குறித்த விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு மேற்கு வங்கத்துக்கு வந்த அவர் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோயிலுக்கு சென்று தனக்கு மொட்டை அடித்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆசிஷ் தாஸ், தான் பாஜகவில் இருந்து தான் விலகுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் கூறினார் […]
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்டார். அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்துவுக்கு பதவி வழங்கப்பட்டதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்ட நிலையில் அமரீந்தர் சிங்க் ராஜினாமா செய்தது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங்க் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். […]
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று முதற்கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினர் குறுக்குவழியில் வாக்களித்து வருவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பூத் ஏஜெண்டுகளை மிரட்டி, அவர்களை வெளியே அனுப்பி, திமுகவினர் உள்ளே சென்று குறுக்கு வழியில் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். அந்த வேலை தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நியாயமான, அமைதியான ஒரு சுதந்திரமான நேர்மையான இந்தத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு […]
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூருக்குச் செல்ல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடந்த ஞாயிறு அன்று லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் காண ராகுல்காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ வந்தடைந்தார். அப்போது அவரை வெளியே வரவிடாமல் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினரும் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த ராகுல் காந்தி எந்த சட்டத்தின் கீழ் என்னை […]
மதுவிலக்கை தேசியக் கொள்கையாக ஏற்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மதுவிலக்கை தேசியக் கொள்கையாக ஏற்க வேண்டும், இந்திய அளவில் மதுவிலக்கை தீவிரமாக நடைமுறைப்படுத்த இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசும் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு. தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. கல்வி வணிக மயமாகி வருகிறது மற்றும் மாநில அரசுகளுக்கான உரிமைகள் பறிக்கப்படும் […]
அனாவசியமாக பழைய புண்ணை எல்லாம் கிளற வேண்டாம் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா அறிவுறுத்தியுள்ளார். செய்தியர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஷாருக்கான் மகன் கைதாகியிருகின்றார். எதனாலே ? போதை மருந்து வைத்திருந்தார். அந்த இளைஞன் கெட்டதற்கு காரணம் இந்த போதை மாபியா தானே. அதை ஒரு மையப் பொருளாக வைத்து ஒரு படம் வந்தது. அந்த படத்தில் இன்னும் இரண்டு மூன்று முக்கியமான விஷயம் சொல்லி இருக்காங்க. மத மாற்றம், மதமாற்றம் ஏமாற்றம். […]
உள்ளாட்சி தேர்தலில் புதுச்சேரி மக்கள் சரியான விடை அளிப்பார்கள் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததற்கும் இன்றைக்கும் வேறுபாடு ரொம்ப பாக்க முடியுது. நிறைய மக்கள் சொல்கிறார்கள் 5 மாதம் தான் ஆகிறது தேர்தல் முடிந்து ஆனால் காங்கிரஸ் பதவியில் இருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று நினைக்கின்ற அளவிற்கு இன்றைக்கு பாண்டிச்சேரி மக்கள் ஒரு துயரத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக […]
12கோவில்களுக்கு முன்பு பாஜக அறிவித்துள்ள போராட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் எச்,ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் தமிழகத்தில் தரிசனத்துக்கு கோவில்களை திறக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் 12கோவில்களின் முன்பு 7ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்த்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வீடியோ வெளியிட்ட எச்.ராஜா மஹாபாரதத்தை எடுத்துக்காட்டாக சொல்லி அனைவரையும் அழைத்தார். அவர் பேசியது வருமாறு: மஹாபாரதத்தில் 18அத்தியாயம் கண்ணன் கீதை சொல்லுறான் ? […]
உள்ளாட்சி தேர்தலில் பல பிரச்சனைகள் உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விமர்சித்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் மபொசியின் 26ஆவது மறைந்த தினத்தில் அவருக்கு தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன், இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசு டில்லி தலைநகரத்தில் இருக்கின்ற உச்சநீதிமன்றத்தினுடைய கிளை தமிழகத்தினுடைய தலைநகரம் சென்னையில் விரைவில் அமைய இருக்கிறது என்ற மிகச் சிறந்த அறிவிப்பை அறிவித்து இருக்கிறார்கள். இது […]
தரிசனத்திற்கு ஆலையங்களை திறக்க வேண்டும் என பாஜக நடத்தும் போராட்டத்திற்கு அனைவரையும் அழைத்து எச்.ராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3நாட்களுக்கு இந்து கோயில்களை திறந்து, பக்தர்களை தரிசனம் பெற அனுமதிக்கவேண்டும் என பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வருகின்ற 7.10.2021 அன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் […]
மோடி சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த, சாதாரண மனுஷன் என காயத்ரி ரகுராம் பிரச்சாரத்தில் பேசினார் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த காயத்ரி ரகுராம், தயவு செய்து இந்த திருட்டு கும்பலை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள். உங்களுக்கு திட்டங்கள் கண்டிப்பா வந்து சேர வேண்டும் என்றால் எங்களின் வேட்பாளர் மகாலிங்கம் அவர்களுக்கு தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதே போல மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சியில் என்ன கொடுத்தார்கள் ? […]
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை மிரட்டி மாநிலங்களவை எம்.பி பதவியை பாஜக பறித்துள்ளது என ஜோதிமணி எம்.பி விமர்சனம் செய்துள்ளார். பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சேர்ந்த காங்கிரஸ் மாநில தலைவர் இங்கே இருக்கிற மூத்த தலைவர்கள் சேர்த்து கூட்டணி முடிவெடுப்பார்கள். எங்களை பொறுத்தவரையில் கட்சியை உள்ளாட்சி தேர்தலில் களத்தில் தயார் நிலையில் வைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். பாண்டிச்சேரியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி தான் இன்றைக்கும் முதன்மையான கட்சி. கடைசி கிராமம் வரைக்கும்… பாண்டிச்சேரி முழுவதும் தொண்டர்கள் இருக்கின்ற கட்சி. […]
மோடி நமக்கு 6000 ரூபாய் பேங்க்ல போடுறார்… ஸ்டாலின் ஒண்ணுமே பண்ணல என பாஜகவின் காயத்திரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜகவின் காயத்திரி ரகுராம், ஸ்டாலின் அவர்கள் அவர் குடும்பத்திற்காக மட்டும்தான் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றார். அவர் குடும்பத்துக்கு மட்டுமே தான் யோசிக்கிறாரே… இங்கு இருக்கின்ற கிராம மக்கள் உங்களுடைய குடும்பத்திற்கு எந்த நல்லதும் செய்தது கிடையாது எதிர்க்கட்சிகள். உங்களுக்கெல்லாம் என்ன நடந்திருக்கு ? […]
கோவிலின் நிலம் ஒரு தூசி அளவு கூட வெளியே போகாது என்று சொன்னால் அதை நாங்கள் பாராட்டுகிறோம் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கைது நடவடிக்கையே அங்கு போன குரூப்பில் போதைப் பொருட்கள் பயன் படுத்துகிறார்கள் என்பதை வைத்து வந்திருக்கிறது. இதில் எங்கே மூடி மறைப்பதற்கு இருக்கு. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே அப்பப்போ சம்மந்தப்பட்ட துறை அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நாமே […]
பிரியங்கா காந்தியின் செலெக்டிவ் தைரியம் ராஜஸ்தான் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கக்கூடிய நிலமாக இருக்கட்டும், நகையாக இருக்கட்டும் இந்த மாதிரி எது கொடுத்தாலும் அது பக்தியின் காரணமாக இறைவனுக்கு கொடுப்பது, அந்த இறைவனுக்கு கொடுப்பது என்பது மக்களுடைய நலனுக்காக செய்யக்கூடிய காரியம் தான். அதனால் பக்தர்களுடைய […]
சாதனை என்றால் என்ன என பாஜக சட்டமன்ற வானதி சீனிவாசன் திமுகவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழக அரசு தான் பதவியேற்ற குறைவான மாதங்களுக்குள்ளாக நாங்கள் மிகப்பெரிய சாதனையை செய்து விட்டோம் என தமிழகத்தினுடைய முதல்வரும், அமைச்சர்களும் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாளிதழ்களில் தமிழகத்தினுடைய மின்சாரப் பற்றாக்குறை என்பது அபாயகரமான அளவிற்கு வந்து விடுமோ என்கின்ற தகவல்கள் எல்லாம் வருகின்றது. ஒருபுறம் விவசாயிகளுக்காக நீண்ட காலமாக காத்திருப்பில் இருக்கின்ற […]