அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், தமிழகத்தில் திமுகவினர், அரசு அதிகாரிகளை தாக்கியதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சென்னை அடையாரில் இருக்கும் மாநகராட்சி அலுவலகத்தில், நாங்கள் சொல்லக்கூடிய நபர்களை தான் களப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டினார்கள். தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களில், டோக்கன் விநியோகிப்பதில், நியாயவிலை கடைகளில் என்று அனைத்திலும் திமுகவினரின் ஆதிக்கம் தான் ஓங்கி […]
Tag: அரசு அதிகாரிகள்
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது, பொங்கல் பரிசு தொகுப்பில் புகார்கள் எழ காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது, தரமான பொருள்கள் மட்டுமே மக்களுக்கு […]
முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதியின்றி அரசு நிலங்களில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண்ணை எடுத்துள்ளதாக தேனி மாவட்டம், உப்பார்பட்டி பகுதியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் முன்னாள் துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்துக்கு தன்னுடைய உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவருடைய உறவினர்கள் உடந்தையாக இருந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மணல் எடுத்த பிறகு அந்த அரசு நிலங்களை தனியார் சொத்துக்களாக மாற்றியுள்ளதாகவும் உடனடியாக இது குறித்து […]
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான பணி மூப்பு முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்ததால் திறமையுள்ளவர்கள் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்று பணிக்கு வருபவர்களுக்கு உயர் பதவிகளே கிடைப்பதில்லை என்று புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அரசு கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பணிமூப்பு, பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டை வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதிகளில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட விதிகளை எதிர்த்து அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த பல தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு […]
பெரும்பாலான நலத்திட்டங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் வருடம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-வில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சாகேப்கஞ்ச், மர்வான், அவுராய் ப்ளாக்கில் தகுதியற்ற நபர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. இதில் கடந்த 2018-ஆம் ஆண்டு பாட்னா மாவட்டம் ப்ளாக் மற்றும் 2019-ல் மதுபானி மாவட்டம் மாதேபூர் ப்ளாகிலும் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால் பெரும்பாலான இடங்களில் கன மழை வெளுத்து வாங்கியது.அதிலும் குறிப்பாக சென்னையில் காணுமிடமெல்லாம் மழைநீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தத் தொடர் கனமழை எனது அடுத்த நான்கு நாட்களுக்கு தொடரும் என்று வானிலை […]
நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான செல்வந்தர்கள் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர். அவர்களும், காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அவை நிலுவையில் இருந்து வருகின்றன. இதில் சில வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிக வரித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் காலதாமதம் ஆகிறது. ஆனால் அதிகாரிகளுக்கு மாதத்தின் கடைசி நாளில் அரசு சரியாக ஊதியம் […]