தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கல்வி இயக்குனர் கடிதம் மூலம் அரசிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வரும் கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் Ist ஷிப்டில் பாடம் எடுக்க, 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படுவதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் 20 […]
Tag: அரசு அறிவிப்பு
கடந்த சில மாதங்களாக இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக மக்கள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற உடன் செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இலங்கையில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஊதியமின்றி பணியாற்ற அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதாக […]
தமிழகம், கேரளா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம், கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா […]
தமிழகத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் தங்களின் சுய விபரக் குறிப்புடன் https://awards.tn.gov.in என்ற இணையத்தளத்தில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவதற்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவி தொகை முழுவதையும் ரொக்கமாக அப்படியே வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுவரை பாதி ரொக்கம்,பாதி சேமிப்பு பத்திரம் என வழங்கப்பட்டு வந்த நிலையில் பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த […]
தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிப் தினமாக கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் இனி நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசே மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது மக்களை குளிர்விக்கும் வகையில் புதிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளுக்கு தமிழக அரசு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகள், விவசாய பொருட்களை சந்தைப்படுத்தவும், குக்கிராமத்தில் இருந்து பள்ளி, மருத்துவமனை சென்றடையவும் சாலை வசதி அமைக்கப்படுகின்றன. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தக்காளி விலை 100 ரூபாய் கடந்த விற்பனை செய்யப்படுவதால் குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் வெளிச்சந்தையில் தக்காளி விலை கட்டுக்குள் வரும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பண்ணைப் பசுமை கடைகளில் நாளை முதல் குறைந்த விலையில் அதாவது 50 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை தக்காளி விற்பனை […]
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில் நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மொத்த பணியிடம்: 42 சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.75,900 விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று முதல் ஜூன் 17-ஆம் தேதிக்குள் தகுதி: 10, 12 மற்றும் பட்டப்படிப்பு. தேர்வு கட்டணம்: ரூ.100 SC/ST, BC, MBC என அனைத்து பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.
நாடு முழுவதும் ஒரு சில மாநிலங்களில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த மாதம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. பட்டது என் நிலையில் தெலுங்கானா அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து பிராண்டு மதுபானங்களின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. குவாட்டர் பாட்டிலின் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து வகை பீர்களும் குறைந்தபட்சம் பத்து ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளன. மதுபானங்களின் புதிய விலை […]
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்போது வரை விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது. இதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்பிக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் தற்போது வரை 9 பேர் […]
இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அதன் காரணமாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது […]
குடும்ப அட்டைகளுக்கு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஏழை எளிய மக்கள் வேலை இல்லா திண்டாட்டத்தினால் மிகவும் சிரமப்பட்டனர். இதன் காரணமாக ஏழை, எளிய மக்களுக்காக அரசு இலவச குடும்ப அட்டைகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் இலவச குடும்ப அட்டைகளை தகுதி இல்லாத நபர்கள் பயன்படுத்துவதாக தற்போது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் தகுதி இல்லாத நபர்கள் தாமாக முன்வந்து குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் குடும்ப அட்டைகளை […]
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு கூட திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பணம் வழங்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ரூபாய் 3000 முதல் 7,500 வரை பண உதவி வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக இலங்கையின் வர்த்தகத் துறை மந்திரி ஷெஹான் சேமசிங்க […]
இனி அனைத்து எம்எல்ஏக்களும் ஒரே பென்ஷன் தொகையை வழங்குவதற்கான புதிய திட்டத்திற்கு பஞ்சாப் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி முன்னாள் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் இனி ஒரே பென்சன் தொகை தான். இதன்மூலமாக அரசியலுக்கு நிறைய பணம் மிச்சமாகும். இதற்கு முன்பு வரை முன்னால் எம்எல்ஏக்களுக்கு பென்ஷன் வழங்கும் போது அவர்கள் எத்தனை முறை எம்எல்ஏவாக பொறுப்பு வகித்தார்கள் என்பதை கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்ப பென்சன் தொகை வழங்கப்பட்டது. தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி […]
தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களாக துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒவ்வொரு துறை சார்ந்த கேள்விகளுக்கும் அந்தந்தத் துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் என்று சட்டப்பேரவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பதிவுபெற்ற பரம்பரை மருத்துவர்களின் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்படும் என பேரவையில் அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நடப்பாண்டு 25 […]
இந்தியாவில் தனி நபரின் அடையாளமாக ரேஷன் கார்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கு அன்றாட தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் அனைத்து அரசு நலத் திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டு வைத்திருப்பது அவசியம். தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரே நாடு […]
தமிழகத்தில் அரசு பணியில் சேர விரும்பும் நபர்கள் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது அவசியம். கடந்த காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்வார்கள். ஆனால் தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் அந்தந்த பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிப்பு செய்வது அவசியம். அதன்மூலமாக அரசு பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தற்போது […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக நலிவடைந்த மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டை மூலம் அரசு பல்வேறு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் ஒரு சில ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் எடை குறைவாகவும்,கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் எடை குறைவாக இருந்தால் […]
இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் போட்டித் தேர்வுக்கான (TNPSC, SSC, IBPS, RRB, Etc) பயிற்சி சென்னையில் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஜூலை 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பாக போட்டித்தேர்வுகள் பயிற்சி மையத்தால் கட்டணமில்லா பயிற்சி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி […]
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதற்கு பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதன் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்பட உள்ளது. கோவா மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பு பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு பொருட்கள் வழங்கப்படும் என்றும் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி […]
டெல்லியில் 18 வயது முதல் 59 வயதுடையவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தலைநகரில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 வயது முதல் 59 வயதுடையவர்கள் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதற்காக கோவின் இணையத்தளத்தின் தேவையான மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளதாகவும் இணையதளம் […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அரசு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனாவிற்கு பிறகு தற்போது தமிழக அரசு காலியாக உள்ள பணியிடங்களை தேர்வு மூலமாக ஆட்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது. இந்த வகையில் அரசு துறைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10,000 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்செர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை என எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 8173 இடங்களும், […]
தமிழகத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு படிப்புக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. பழங்குடியின மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்காக தமிழக அரசு சிறப்பு உதவித் தொகை வழங்குகின்றது. இது உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை எனப்படும் மாணி அடிப்படையிலான திட்டமாகும். இதனை பெறுவதற்கு மாணவ மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றி முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள […]
தமிழகத்தில் விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் 10 குதிரை திறன் வரையிலான பம்பு செட்டுகள் அமைத்து தருவதற்கு எந்த ஒரு பதிவு கட்டணமும், டெபாசிட்டும் செய்ய வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் பொய்யான இணையத்தளங்கள் மூலம் வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் […]
சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் உதவித் தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சிறுபான்மை சமூகத்தின் குழந்தைகளின் பள்ளி படிப்பை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு என்று பிரத்யேகமாக அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இந்த உதவித்தொகையை பெறலாம். மேலும் இந்த உதவித்தொகை பெற்றோர்களின் வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் என்பதை மிக முக்கியமான ஆவணம். இது பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் திடீர் மறைவின் போது ஒரு சொத்து அல்லது சொத்தின் உரிமைக்கான பொருத்தமான வாரிசை தீர்மானம் செய்கிறது. சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் என்றும் அழைக்கப்படுகின்றது. சொத்து பதிவின்போது வாங்குபவர் வாங்கப்படும் சொத்தின் உரிமையை கண்டறிய சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை கேட்பார். எனவே வாரிசுச் சான்றிதழ் என்பது மிகவும் அவசியம். இது அனைத்திற்கும் பயன்படுகிறது. எனவே தமிழகத்தில் சட்டப்பூர்வ வாரிசு […]
மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள், வாரிய ஊழியர்கள், தன்னாட்சி அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிட்ட பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 7 ஆம் சம்பள கமிஷன் அடிப்படையில் இனி பென்ஷன் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி பென்ஷன் வாங்குவோருக்கு வழங்கப்படும் படித்தொகை உயரும். ராஜஸ்தான் மாநில அரசின் இந்த அறிவிப்பால் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பென்ஷனர்கள் பயனடைவார்கள். இந்தத் திருத்தப்பட்ட புதிய பென்சன் ஏப்ரல் […]
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பதற்கு ஏப்ரல் 17ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாள் அன்று இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானிய கோரிக்கை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இதில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில், 11,12 ஆம் வகுப்பில் computer science பிரிவில் பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் ரூ.200 தனி கட்டணம் ரத்து செய்து கட்டணங்களுக்கான செலவை அரசே ஏற்கும் என அமைச்சர் மகேஸ் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 4.8 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவில் கல்வி வழங்கிடும் வகையில் 9.83 […]
தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு சேவை கட்டண சீட்டுகள் இன்று முதல் மின்னணு முறையில் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. அந்தந்த கோவில் பெயரிலேயே ரசீதுகள் வழங்கப்பட வேண்டும். கட்டணத்தை இணைய வழியில் செலுத்துவதை திறம்பட கண்காணிக்க வேண்டும். இணையவழி பதிவை கோவில்கள் ஊக்குவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு பலகையை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் ஆங்காங்கே வைக்க வேண்டும் என அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் திருக்கோவில்களில் கையால் எழுதும் பிரஸிடு […]
தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நலவாரியத்தில் பதிவு செய்து, சொந்தமாக வீடு இல்லாமல் வீட்டுமனை வைத்திருந்தால் அவர்கள் சுயமாக வீடு கட்டிக்கொள்ள 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தகுதிகள் என்னவென்றால், முதலில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்து குறைந்தது மூன்று ஆண்டுகள் […]
தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு சேவை கட்டண சீட்டுகள் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மின்னணு முறையில் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. அந்தந்த கோவில் பெயரிலேயே ரசீதுகள் வழங்கப்பட வேண்டும். கட்டணத்தை இணைய வழியில் செலுத்துவதை திறம்பட கண்காணிக்க வேண்டும். இணையவழி பதிவை கோவில்கள் ஊக்குவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு பலகையை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் ஆங்காங்கே வைக்க வேண்டும் என அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் திருக்கோவில்களில் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதை மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கோவில்களில் புதிய நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருக்கோவில்களில் தினசரி நடைபெறும் சேவை கட்டண சீட்டுகளை மின்னணு முறையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் திருக்கோவில்களில் கையால் எழுதும் ரசீது முறை நீக்கப்பட்டு, அனைத்து கட்டண சீட்டுகளும் […]
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தனி தாலுகாவாக செயல்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் முத்துப்பேட்டை தனி தாலுகாவாக மாற்றப்படும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால் அது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து கேள்வி எழுப்பினார். இதையடுத்து சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை […]
தமிழகம் முழுவதும் மின் பயன்பாட்டை கணக்கு எடுத்ததும் உடனடியாக கட்டணத்தை தெரிவிக்க மொபைல் செயலியை மின் வாரியம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதன் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதால் விரைவில் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் கணக்கீட்டாளர் மின் பயன்பாட்டை கணக்கெடுத்து செயலியில் பதிவிட்டால் உடனே அதற்கான கட்டணம் கணக்கிடப்பட்டு மின்வாரிய சர்வர் மற்றும் நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். எனவே இனி எளிதாக மின் கட்டணத்தை மக்களே வீட்டில் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 40 துறைகளின் அலுவலகங்களை இ-அலுவலகம் முறைக்கு மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதல்கட்டமாக முதலமைச்சர் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வருவாய் உள்ளிட்ட எட்டு துறைகளின் அலுவலகங்கள் இ-அலுவலகம் முறைக்கு மாற்றப்படுகிறது. இனி Digital Tamilnadu என்ற முறையில் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கப்படும் பணியில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இ-அலுவலகம் என்றால் எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்பதாகும். அலுவலர்கள் எங்கிருந்தாலும் பணியாற்றும் வகையில் அரசு அமைப்புகள் […]
குவைத் நாட்டில் விஜய்யின் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடித்த திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக ஷான் டாம் சாக்கோவும் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழில் தயாராகியுள்ள பீஸ்ட் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், இந்தி, […]
தமிழகத்திலுள்ள ஏழை எளிய மக்களுக்கும், பெண்களுக்கும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்குவிக்கவும் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி அவ்சார் என்ற திட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில் சுய உதவிக் குழுவினர் காண விற்பனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கிராமப்புற சமுதாயத்திற்கு அதிகாரம் அளிக்கும் இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக சுய உதவி குழுக்கள் உள்ளன. பெண்கள் மற்றும் […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து மார்ச் 31-ஆம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதாகவும் கட்டுப்பாடுகள் தொடர்பாக இனி புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாது என்றும் மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இனி கொரோனா பாதிப்பு அதிகரிப்பது தெரிந்தால் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த […]
இன்று (மார்ச் 22) கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறுகின்ற குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 7ஆம் தேதி அன்று திருவிழாவானது பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களாக […]
நாளை (மார்ச் 22)ஆம் தேதி அன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறுகின்ற குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 7ஆம் தேதி அன்று திருவிழாவானது பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடங்கும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே 1 முதல் 12ம் வகுப்பு வரை […]
தமிழக அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த அவர்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 பேருக்கு வழங்கி தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் கல்வி, பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் பயிற்சி உள்ளிட்ட பலவற்றுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அவ்வகையில் முக்கிய வாக்குறுதியாக கருதப்படும் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அளவிலான நகைகளை வைத்து நகை கடன் வாங்கியவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தார். அந்த நகை கடன் குறித்து அனைத்து […]
நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்ததிலிருந்து இதுவரை 52,000 இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக வழங்கி வருகிறது.மேலும் ஆண்டுக்கு 40,000 விவசாய இணைப்புகள் வழங்க அரசு அனுமதிக்கிறது. அதில் 70 சதவீதம் வரை இணைப்பு வழங்கி மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கின்றது. தற்போது சட்டசபை தேர்தல் […]
தமிழகத்தில் கிராமக் கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில், பணிபுரியும் கிராம கோயில் பூசாரிகள் பாதுகாப்புக்காகவும் மற்றும் அவர்களின் நலனுக்காகவும் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நலவாரிய அமைப்பில் உறுப்பினராக இணைவதற்கு விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அந்தந்த மாவட்டத்திற்கான இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று இரவு முதல் சுமார் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்த பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. […]