தமிழகத்தில் பல மாவட்டங்களில், கேபிள் டிவி சரியாக தெரியவில்லை என மக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து விளக்கமளித்து அரசு கேபிள் டிவி நிர்வாகம், தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக சில கேபிள் டிவி செட்-டாப் பாக்ஸ்களின் ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில் தொழில்நுட்ப பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் […]
Tag: அரசு கேபிள் டிவி
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணம் இல்லாமல், பொதுமக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களைப் பொதுமக்களுக்கு ரூ.140+ஜிஎஸ்டி என்ற குறைவான மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. இது மற்ற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் மிகக் குறைவான கட்டணம் ஆகும். இதில் ஒருசில கேபிள் ஆப்பிரேட்டர்கள் தங்கள் சுய லாபத்திற்காக, அரசு செட்ஆப் பாக்ஸை வழங்காமல் தனியார் நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களைப் பொதுமக்களுக்கு வழங்கி அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்தவகையில் அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குநராக ஜெயசீலனை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்டுள்ளார். இவர் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஆவார்.