Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள்…. வலைதளத்தில் போலி வதந்திகள் பரவுவதாக பரபரப்பு புகார்…!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு காலியாக உள்ள அரசு உதவியாளர் பணியாளர் பணிகள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் காலி பணியிடங்கள் குறித்த சில தவறான பொய்யான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அமைச்சு பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, அரசு துறைகளில் கடந்த 10 வருடங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

உலகில் அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறை… ஸ்டேட்டிஸ்டா நிறுவனம் வெளியிட்ட விவரம்…!!!!!

உலகில் அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறை விவரம் ஒன்றை ஸ்டேட்டிஸ்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் அதிக ஊழியர்களைக் கொண்ட துறையாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறைகள் பற்றிய விவரத்தை ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டேட்டிஸ்டா என்ற நிறுவனம் வருடம் தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 2022 ஆம் வருடத்திற்கான பட்டியல் படி உலகில் உள்ள நாடுகளில் அதிக ஊழியர்களைக் கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

அரசு துறையில் கொட்டி கிடக்கும் காலியிடங்கள்…. எவ்வளவு தெரியுமா?…. குற்றம் சாட்டிய காங்கிரஸ்…..!!!!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்று 8 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நாடு முழுதும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இவற்றையெல்லாம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள அந்த காலியிடப் பட்டியலில் முக்கியமாக மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

அரசுத் துறையில் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தாய் உயிரிழந்ததால் நாகராஜன் என்பவருக்கு வேலைவாய்ப்பு கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது. 1986-ஆம் ஆண்டில் பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் ஊழியராக நியமனம் செய்யப்பட்ட இவர், அதே துறையில் ஏற்கனவே இவருடைய சகோதரர் பணியாற்றி வருவதை மறைத்து விட்டதாக கூறி பொது சுகாதாரத்துறை 22 ஆண்டுகளுக்கு பின் அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கு நிலுவையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசில் 4.5 லட்சம் காலிப் பணியிடங்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அடுத்த மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் சென்னையில் நடைபெறும் 14 வது மாநில மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற்ற மாநில கோரிக்கை மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு ஊழிய கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றி தருவதாக இணைய வழியில் உறுதியளித்தார். அதன்படி அரசு […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

அரசுத்துறைகளில் தமிழர்கள் புறக்கணிப்பு…!!

தமிழ்நாட்டில் மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களே பணியமர்த்தப்பட்டு தமிழக  மக்கள் புறக்கணிக்க பட்டுள்ளதாகவும் இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் நீலகிரி ஆய்வக தொழிற்சாலைக்கு வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு பணி வழங்காமல் அவரை விட குறைவான மதிப்பெண்கள் பெற்ற ஆறு பேருக்கு பணி வழங்கப்பட்டது தொடர்பாக சரவணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தனி […]

Categories

Tech |