UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு நடத்தும் பல தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் குடிமையியல் தேர்வு மையத்தில் சேர்ந்து […]
Tag: அரசு தேர்வு
தமிழகத்தில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த மே 2 ம் தேதி தொடங்கி மே 13ஆம் தேதி முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் நடத்தப்பட்ட தேர்வில் சுமார் ஆறு லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என அரசு தேர்வுகள் இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதில் 12ஆம் […]
தமிழகத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான வார்டன் காலிப் பணியிடங்களும், ஆயிரக்கணக்கான சமையலர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமே மொத்தம் 1384 ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் இருக்கிறது. இதனால் உடனே இப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் காலியாகவுள்ள வார்டன் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆதிதிராவிடர் மற்றும் […]
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந் 20ம் தேதி வெளியானது. 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், மேலும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும். 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறும். 11ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 10ம் தேதி வரை […]
தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமக்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதில், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம். தற்போது நடைமுறையில் உள்ள பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொதுத்தமிழ் தாள் மட்டுமே மதிப்பீடு தேர்வாக அமைக்கப்படும். இந்த தமிழ்மொழி தாள் 10 ஆம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. […]
குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உட்பட 38 வகையான தேர்வை நடத்துவது பற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆலோசனை நடத்தி வருகிறது. அனைத்து தேர்விலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் என அரசு அறிவித்திருந்த நிலையில், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அலுவலகத்தில் தமிழ் பாடத்தாளை சேர்ப்பதற்கான நடைமுறைகள் பற்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன், செயலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்துகின்றனர்.
கர்நாடகத்தில் அரசுப் பணியாளர் தேர்வுக்கான வினாத் தாள் வெளியானதால் அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் இதுவரை 14 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடகத்தில் முதல் பிரிவு உதவியாளருக்கான அரசுப் பணியாளர் தேர்வு இன்று (ஜன. 24) நடைபெற இருந்தது. எனினும் தேர்வுக்கான வினாத்தாள் ஏற்கெனவே வெளியான தகவலை அறிந்து தேர்வுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது.