முதல்வர் ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நேற்று இரவு முதலே நான் மிகுந்த மகிழ்ச்சியின் இருந்தேன். ஏனென்றால் நான் படித்த பள்ளிக்கு போகப் போகிறேன் என்று. பள்ளிப் பருவம் என்பது யாருக்கும் மீண்டும் கிடைக்காத காலம். நான் இந்த பள்ளியில் சேர்வதற்காக தேர்வு எழுதினேன். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. இந்த பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த போது எனது […]
Tag: அரசு பள்ளி
சென்னை பலவந்தாங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில பெண்கள் கழிவறையில் எட்டிப் பார்த்து செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உள்ள கழிவறைக்கு மாணவிகள் சென்றபோது அப்போது அங்கு சிலர் மறைந்து கொண்டு வீடியோ எடுத்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு வட மாநில தொழிலாளர்களை பிடித்து போலீஸ் ஆர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்கள் கழிப்பறை பள்ளியின் […]
சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளிகளிலும் ஆங்கில மொழியை பயிற்றுவிப்பதற்கான பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்காக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது மாணவர்கள் இடையே ஆங்கிலம் பேசும் திறனை ஊக்குவிக்கும். அதன் பிறகு மாநில வரலாறு மற்றும் கலாச்சாரம் போன்ற தலைப்புகளில் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் ஒரு மாணவரை ஒருநாள் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர் ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் தருண் ஆனந்த் என்ற மாணவர் ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்டார். இந்த மாணவருக்கு தலைமை ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகள் குறித்த […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவபுரி என்ற மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது மற்றும் கறி விருந்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளியில் அந்த ஆசிரியர் குடித்துவிட்டு மது போதையில் இருந்ததாகவும் உள்ளூர் வாசிகளுடன் சண்டைக்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவர் மீது உடனே போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மாணவர்களுக்கு […]
அனைவருடைய வாழ்க்கையிலும் பொதுவாக பள்ளிப்பருவம் என்பது மறக்க முடியாத ஒன்றாக தான் இருக்கும். பள்ளியில் படிக்கும் அந்த அழகிய நாட்கள் மீண்டும் வாழ்க்கையில் திரும்ப கிடைக்குமா என்று பலரும் ஏங்குவர். சமீப காலமாகவே பல அரசு பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடி சந்திக்கும் அழகிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏலகிரி அரசு பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பழைய மாணவர்கள் ஒன்று கூடி பள்ளி […]
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு தமிழக சொசைட்டி நிறுவனம் சார்பிவ் முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இது குறித்து சத்துணவு பணியாளர்களும் விளக்கம் கேட்டனர். அப்போது பொன்னரகம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இத்தகைய முட்டைகளை விநியோகம் […]
அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2,3,4 வருடம் பயிலும் சுமார் 1.10 லட்சம் மாணவிகள் பயனடைந்து இருக்கின்றார்கள். இந்த சூழலில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை பெற இந்த திட்டத்திற்கு நவம்பர் ஒன்றாம் […]
நியூயார்க் நகரில் அடுத்த வருடம் தீபாவளிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என மேயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நியூயார்க் நகரில் அடுத்த வருடம் முதல் தீபாவளி திருநாள் அன்று அரசு பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் பேசும்போது தீபாவளி மற்றும் தீபத்திருவிழா என்றால் என்ன என்பதை பற்றி நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த நடவடிக்கை குழந்தைகள் தீபத் திருவிழாவை பற்றி அறிய ஊக்குவிக்கும் […]
உத்திரபிரதேச மாநிலம் குஷி நகரில் உள்ள அரசு பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் விலை உயர்ந்த மதுபானங்கள் அடங்கிய 51 அட்டை பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த அறைக்கு சென்றுள்ளனர். அங்கு மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். உடனே ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதனை அடுத்து இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அனைத்து மதுபானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதி […]
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உள்ளுறை பயிற்சி வரும் திங்கட்கிழமை தொடங்க இருக்கிறது. இது பற்றி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு திறன்களுக்கான பாடத்திட்டம் அது சார்ந்த பயிற்சிகள் […]
தேசிய கல்விக் கொள்கை கடந்த 1968 ஆம் ஆண்டு முதன் முதலில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 42வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின்படி 1976 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வி பொது பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு கல்விக் கொள்கையானது திருத்தப்பட்டது. இதனைடடுத்து 1992 ஆம் ஆண்டு கல்விக் கொள்கை மீண்டும் திருத்தப்பட்டாலும் சில மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழுவினால் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார் அப்போது அங்குள்ள தகைசால் பள்ளிகள் மாதிரி பள்ளிகளை பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்து இது போன்ற தமிழகத்திலும் பள்ளிகள் தொடங்கப்படும் என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த சட்டம் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகளை அதினவின தொழில்நுட்பத்தில் உருவாக்குவதற்காக […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்30ம் தேதி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற 30ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்க பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகின்றது. மேலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முதன்மை கருத்தாளர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பங்கேற்க […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடத்தை குரங்கு ஒன்று கவனித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த சம்பவம் எப்போது நடந்தது? என்பது குறித்து தகவல் வெளியாக இல்லை. அந்த குரங்கு மாணவர்களின் பின் வரிசையிள் சாதாரணமாக அமருகிறது. இது வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் அரசு பள்ளி மாணவர்களோடு காட்டு லங்கூர் பாடம் படிக்கிறார் என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் […]
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிறிஸ்துதாஸ். இவர் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி ஆபாசமான பாடங்கள் சிலவற்றை நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்துதாஸ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் ஆசிரியர் மீது தவறு இல்லை என்றும், அவர்மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவில் […]
இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு என்பது அவசியமானது. இந்த தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டங்களை தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் 12-ம் வகுப்பு அரசு பாடத்திட்டங்களை தேசிய அளவுக்கு உயர்த்துவதிலும் சிக்கல் உள்ளது. நீட் தேர்வினால் தமிழகத்தில் பல மரணங்கள் நடந்து வருகின்றது. ஏனைய மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது கனவாக இருக்கக் கூடாது என்று கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் […]
மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றலாம் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. நமது தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தற்போது மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தொழில் கல்விகளை படிக்க அதிக அளவில் சேர்கின்றனர். இதனால் 11-ஆம் வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை […]
தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் இடையே நல்ல மதிப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் +1, +2 வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 30க்கும் குறைவான, ஊரகப் பகுதிகளில் 15க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் 600க்கும் […]
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 23 முதல் 30 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு ஜூன் 20-ம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு ஜூன் 27ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டிற்கான நாள்காட்டியை பள்ளி திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் பள்ளி இயங்கும் […]
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களின் 35 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு மத்திய அரசால் நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முறை நீட் தேர்வுக்கு 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் 17 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுதப்பட்டது. தமிழில் […]
அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகம் செய்ய உள்ளதாக கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது புதுச்சேரி மாநிலத்தின் கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சில அறிவிப்புகளை வெளியிட்டார். புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 1044 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு வழங்கப்படாமல் இருக்கும் நிலுவைத் தொகை வழங்குவதற்கு […]
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழில்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பள்ளிகளில் தொழில்கல்வி பாடப்பிரிவுகளை மூட வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பிளஸ் ஒன் வகுப்புகளில் தொழில்கல்வி பாடப்பிரிவுகளை உடனடியாக மூட வேண்டும். ஏற்கனவே அப்பிரிவுகளில் மாணவர்களை சேர்த்திருந்தால் அந்த மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. […]
அரசு பள்ளியில் படித்து IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 6-12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம் போன்ற புகழ்பெற்ற உயர் நிறுவனங்களில் […]
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்குப்பின் நடைபாண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருக்கிறது. மேலும் மாணவர்களுக்கு கொரோனா இடைவெளியால் ஏற்பட்ட கற்றல் குறைவை சரி செய்யும் விதமாக பல புதிய கல்வி முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது இதன் மூலமாக மாணவர்கள் எளிதில் பாடங்களை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழக அரசு தற்காலிக […]
அரசு பள்ளி மாணவர்களின் பொது அறிவு மற்றும் ஆங்கில மொழி திறனை வளர்க்க வேண்டும் என்பதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஒரு சிறப்பான சேவை செய்துள்ளார். அதாவது 10 பள்ளிகளில் 10 பிரதிகளை விலை இன்றி வழங்கும் திட்டத்தினை அவர் தொடங்கி வைத்துள்ளார். இதனை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஆங்கில பத்திரிக்கை பிரதிகளை வழங்கி மாணவர் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசியவர் தற்போது […]
கோவை மாவட்டம் பேரூர் அருகில் மத்வராயபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் நேற்று 75-வது சுதந்திர தின விழா நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயந்தி தலைமைதாங்கினார். இவ்விழாவில் ஊராட்சி தலைவர் கிட்டு சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் குணா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் விஜய சேகர், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது அங்கு இருந்தவர்கள் ஊராட்சி தலைவர் தேசியக்கொடியை ஏற்றவேணடும் என கூறினர். இதற்கு தலைமை […]
தமிழகத்தில் அரசு பள்ளியில் உள்ள ஊழியர்கள் தங்கள் பணி காலத்தில் தங்களுக்கு தேவையான பலன்களை கோரிக்கையாக அரசிடம் வைத்து வருவார்கள். இதனையடுத்து அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் அரசு உடனடியாக ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும். ஆனால் ஊழியர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லாத பட்சத்தில் அவை நிராகரிக்கப்படும். இது போன்ற ஊழியர்களின் கோரிக்கை அரசு நிராகரிக்கும் போது அல்லது தாமதிக்கும் போது ஊழியர்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அதன் படி பல ஆண்டுகளாக அரசு பணியில் […]
கடந்த காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. ஏனென்றால் தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை பார்த்து பெற்றோர்கள் மாணவர்களை அங்கு சேர்க்கின்றனர். அதாவது தனியார் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், பூங்கா, கணினி, மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்கள் உள்ளிட்ட வசதிகளால் மாணவர்கள் ஆர்வத்தோடு செல்கின்றனர். எனவே தனியார் பள்ளிகள் போன்று அரசு பள்ளிகளையும் மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அனுப்பர்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கிக் கொண்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஒருவர் பணியின் போது மது அருந்திவிட்டு பாடம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மீது குற்றம் சாட்டினர். இதனையடுத்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து வட்டார கல்வி அதிகாரி சரவணன் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் அனுப்பர்பாளையம் தலைமை ஆசிரியர் சத்தியமங்கலம் அருகில் உள்ள கணபதி நகரிலுள்ள […]
பீகாரில் அரசு பள்ளி மாணவர்களை பகுதி நேரமாக கூலி வேலை செய்ய கட்டாயப்படுத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், ஜெகனாபாத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி மாணவர்களை பாதி நேரம் மண் தோண்டுதல், செங்கற்கள் எடுத்து வருதல், மரம் வெட்டுதல் போன்ற வேலைகளை செய்ய வைப்பதாக குற்றசாட்டு தொடர்ந்து எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகள் கூலி […]
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மத்திய மாநில அரசுகள் மதிய உணவு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன. அதில் சில மாநில அரசுகள் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து முறை முட்டைகள், பயிர்கள், பால், காய்கறி நிறைந்த சாதம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா, ஆந்திர போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு முறையான மற்றும் சத்தான உணவை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கேரள அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பால், முட்டை […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் புது உச்சிமேடு ஊராட்சிக்குட்பட்ட பட்டி கிராமத்தில் சென்ற 1982ம் வருடம் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் 35 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் உடைந்த ஓடுகள் வழியாகவும், தாழ்வான பகுதியில் பள்ளி அமைந்துள்ளதாலும் 2 வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்து குளம் போல் தேங்கிநின்றது. அதுமட்டுமின்றி பள்ளியிலிருந்த […]
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த தொற்றுப் பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்கள் வெளியில் சென்றால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், கூட்டமாக உள்ள இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. மேலும் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் முக கவசம் அணிய வேண்டும் . பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். அதன்படி அரசு பள்ளிகளில் […]
மாதந்தோறும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திரையிடல் திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான மாணவர்களுக்கு உருவாகி தரும் நோக்கத்துடன் பல்வேறு கலை செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதம் தோறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திரையிடல் திட்டம் ஒன்றை சிறார் திரைப்பட விழா என பெயரில் வகுத்து வழங்கி வருகின்றது. […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி செஸ் போட்டி நடத்துவதற்கு ஜூலை 2ல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டிகள் ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் பார்க்கவும், சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதி அழிக்கப்படுவார்கள். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு முடிவை வெளியிட்டார். 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் உயர்கல்வி ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் பட்டியல் ஓரிரு நாட்களில் […]
மாலை, மரியாதை சீர் வரிசையுடன் புதிய மாணவர்கள் பள்ளிக்கு வரவேற்கப்பட்டது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு தாமதமாக தொடங்கியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. பள்ளிகள் அனைத்தும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர் சேர்க்கையும் கூடவே நடந்து வருகிறது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் […]
விழுப்புரம் அருகே குறித்த நேரத்தில் தலைமை ஆசிரியர் பள்ளியை திறக்காததால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் அருகே பொய்யாபக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அருள் மலர் உள்ளிட்ட ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 109 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் பொய்யா பக்கத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க நிலை பள்ளியை திறப்பதில் காலதாமதம் […]
சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மேட்டூர் லட்சுமி நாயக்கன் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வெறும் 15 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியர் […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளில் முற்றிலும் Merit Based Admission என்ற அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேசிய வருவாய்வழி திறன் தேர்வு ,ஊரக திறனாய்வு தேர்வு மதிப்பெண்களும் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மாணவி ஒருவர் கைவிசிறி கொண்டு விசிறி விடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு சம்பரான் மாவட்டத்தின் பகாஹி புரைனா என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியை வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் போது தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மாணவி ஒருவர் விசிறி கொண்டிருக்கிறார். அதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து […]
தமிழகத்தில் பள்ளி கல்வி கற்காத மாணவர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வண்ணம் செயல்பட தொடக்கக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்களுடைய இடங்களுக்கே சென்று சேர்க்கை நடத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயக்குமார் ஞானராஜ் தன்னுடைய பள்ளியை […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் தமிழக அரசு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சார்பாக பிரசார வாகன தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதல்வர் முக ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச கிரையான் பென்சில், கணித உபகரணப்பெட்டி மிதிவண்டி, பெண் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததை அடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றது. அதிலும் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயின்ற 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. வரும் கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும் இந்த உதவித்தொகை வழங்கும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் […]
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு, கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கின. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்த முடிவு செய்தது. அதன்படி பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு, தற்போது 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி, இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து […]
குளித்தலையில் உள்ள அரசு பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மாணவ-மாணவிகள் தனியார் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவலநிலை ஏற்பட்டு இருக்கின்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்கின்றது. இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லை என கூறப்படுகின்றது. இதனால் மாணவ- மாணவிகள் திறந்தவெளியில் பள்ளி வராண்டாவில் அமர வைத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. […]
ஆந்திரமாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்துகொண்டிருந்தது. அப்போது பள்ளி வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி திடீரென்று கழன்று தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவியின் தலையில் விழுந்தது. இதன் காரணமாக மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டு வலியால் துடிதுடித்தார். இதையடுத்து மாணவியின் தலையில் மின்விசிறி விழுந்ததைக் பார்த்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் உடனடியாக தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவரை அழைத்து வந்து பள்ளியிலேயே மாணவிக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். […]
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் மேற்கூரை பூச்சு திடீரென்று பெயர்ந்து கீழே விழுந்தது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் வளநாடு செங்கப்படை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு செங்கப்படை, தெய்வதானம், இந்திராநகர், வளநாடு, சேமனூர், செபஸ்தியார்புரம் உட்பட பல கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்த போது தலைமை ஆசிரியர் அறையில் திடீரென்று மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்தது. […]