தனது சொந்த காசில் வகுப்பறைக்கு மாணவர்கள் பெயிண்ட் அடித்த சம்பவம் அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிரியரை மிரட்டுவது, வகுப்பறையில் நடனமாடுவது, மேசைகளை உடைப்பது, அடிதடியில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் பெரும் கண்டனத்தை எழுப்பியிருந்தது நிலையில் திருச்சி லால்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்த சம்பவம் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை […]
Tag: அரசு பள்ளி
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே 17 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 25ஆம் தேதி இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே ஜாதிவாரியாக கலர் கயிறு கட்டுவது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. அப்போது அங்கு பயிலும் செல்வ சூரியன் என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் தாக்கியுள்ளனர். இந்த சம்பவமானது அந்தப் பள்ளியில் பகல் நேரத்தில் அரங்கேறியுள்ளது. காயமடைந்த […]
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு பள்ளி மாணவர்களிடம் மத பிரச்சாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இங்கு தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை ஒருவர் இந்து மத மாணவர்களிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசிய தோடு கிறிஸ்துவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த […]
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க ஆசிரியர்கள் மறுப்பு தெரிவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் இயங்கிவரும் மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் சில குறிப்பிட்ட பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க ஆசிரியர்கள் மறுப்பு தெரிவிப்பதாக […]
ஒரு அரசு பள்ளியில் மாணவர்களை வைத்து, பள்ளி கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை என்ற ஊருக்கு அருகேயுள்ள முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றன. மேலும் இப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியை மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் ஒரு மாணவனும் மற்றும் ஒரு குழந்தையும் இணைந்து பள்ளி கழிவறையை சுத்தம் […]
மன்னார்குடியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அரசின் சட்ட விதிகளுக்கு முரணாக வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே பெற்றோர்கள் தனியார் பள்ளியை விட அரசு பள்ளிகளில் கல்வி சிறப்பாக செயல்படுவதாக நம்பி தங்களுடைய பிள்ளைகளை சேர்த்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து பெற்றோர்கள் […]
தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை, அதிகமான விலைக்கு ஒப்பந்தம் கோரப்படுவதால் மடிக்கணினி கொடுக்கப்படுவது தாமதமாகவதாக தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்நிலை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கடந்த 2011 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் வருடம் வரை சுமார் 44 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனினும், கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனிடையே கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் வீடுகளில் […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை-திருப்பூர் சாலையில் தாயம்மாள் என்ற பெண்மணி தனது கணவருடன் சேர்ந்து இளநீர் விற்பனை செய்து வருகிறார். இவர்களுடைய பிள்ளைகள் சின்னவீரம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு நாள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் அந்த பள்ளியில் நடந்துள்ளது. அப்போது ஆசிரியர்கள் வகுப்பறை கட்ட நிதி திரட்டுவதில் பெரும் சிக்கல் இருப்பதாக கூறியுள்ளனர். அதனைக் கேட்ட தாயம்மாளும் அவருடைய கணவரும் இளநீர் விற்று சேமித்த பணம் ரூ.1 […]
மருத்துவம் பயில ஒரே பள்ளியில் உள்ள 7 மாணவிகளுக்கு இடம் கிடைத்துள்ளது.மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பிளஸ்-12 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தனர். அதில் அரசின் 7.5 ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்காக 7 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கனிகா புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலும், தீபிகா மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், வாலண்டினா தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலும் ,சுவாதி சிவகங்கை […]
புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளியை பாதுகாக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவை நிறைவேற்ற இதுவரை என்னென்ன […]
ஒடிசா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த சம்பள உயர்வு ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அவர் அறிவித்து இருந்தார். அதன்படி வழக்கமாக உள்ள இளநிலை ஆசிரியர்களுக்கான சம்பளம் 9 ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 13 […]
தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பள்ளி மாணவ மாணவியர்களின் பாடப்புத்தகத்தில் பாலியல் தொடர்பான புகாரில் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் அடிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவியர்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல மாணவியர்கள் தற்கொலை என்ற தவறான முடிவை மேற்கொள்கின்றன. இதனை தடுக்க அரசு பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றது. மேலும் பாலியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள் புகார் அளிக்க முன்வர […]
தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு Raincoat மற்றும் Ankle Boots வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்களில், மலைப்பிரதேச மாவட்டங்களுக்கு வரும் கல்வியாண்டில் Raincoat வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி மைதானத்தை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது . நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதாகவும், விளையாட்டு அல்லாத நிகழ்வுகள் அங்கு நடைபெறுவதாகவும் கூறி வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு மைதானத்தை பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்தும் சொந்தமாக மைதானம் இல்லாத தனியார் பள்ளிகளுக்கு […]
பட்டபகலில் அரசு பள்ளி மைதானத்தில் 10 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியை ஒட்டிய பாச்சலூரை சேர்ந்த சத்யராஜ் என்பவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு பிரியதர்ஷினி, பிரித்திகா என்ற 2 மகள்களும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளார். மூன்று பேரும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பிரித்திகா ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “ஆசிரியர்கள் மாணவிகள் அத்துமீறுவது அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பது முன்பை விட […]
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு பிறகு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். இது நடப்பு மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, புதுப்பணியிடங்கள் கோரவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளதால் […]
கரூர் மாவட்டம், பாகநத்தம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆபாசமாக அறிவியல் பாடம் நடத்தியதாக ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இருபாலர் மாணவர்களிடம் ஆபாச வார்த்தையை பயன்படுத்தி பாடம் நடத்தியதாக மாணவர்கள் புகார் அளித்ததன் பேரில் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெற்றோர்கள் அரசுப் பள்ளி தானே என்று தாழ்வாக எண்ணிவிடக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளி என்பதே பெருமையின் அடையாளம் என்று மாற்றிக் காட்ட உழைத்து வருகிறோம். பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த முதலமைச்சர் வேகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்கு தனியாரின் பங்களிப்பு மிகவும் அவசியம். அரசு பள்ளி தானே என்று தவறாக எண்ணிவிடக் கூடாது. அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க […]
மாணவர்கள் இசை மற்றும் திரைப்பட தயாரிப்பு தொடர்பான விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு டெல்லி அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் பாடப் புத்தகங்களைத் தாண்டி சில திறன்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக டெல்லி அரசு பல வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. அதன்படி வருங்கால தலைமுறையினர் இசை தயாரிப்பு, திரைப்பட தயாரிப்பு, கிராபிக் டிசைனிங் உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு பேருந்து ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது இசை பேருந்து என்று […]
பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில், ‘நான் ஈ’, ‘புலி’ ‘முடிஞ்ச இவனப்புடி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது ‘விக்ராந்த் ரோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது, பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் உருவாகிறது. இதில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த வருட இறுதியில் படம் வெளியாகும் என்று தெரிகிறது. நடிகர் சுதீப், தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் […]
தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு, கணினி வகுப்பு, ஆங்கில பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்களும், காலணிகள், பைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் சேர்க்கையும் அரசு பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என குன்னூர் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் […]
அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பரிசு பொருட்களை வழங்கியுள்னர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளரிக்கரை மலைகிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்நிலையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் அங்கு இருந்து விலகி அரசு பள்ளியில் சேர்ந்து வருவதால் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் சார்பில் கவுரவிக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி தலைமையில், நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வகுப்புகளும் ஆல்பாஸ் செய்யப்பட்ட நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கத்தில் உள்ள கிராமம் ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் போதிய அளவு மாணவர்கள் இல்லாததால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதை […]
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கியுள்ளது தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பல மாவட்டங்களில் 2021- 22 ஆம் கல்வியாண்டுக்கான […]
தமிழக பள்ளிக்கல்வித் துறை ஜூன் 14ம் தேதி முதல், பள்ளிகளைத் திறந்து மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி, விலையில்லா பாடபுத்தகம் வழங்கல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை தலைமை ஆசிரியர்களைக் கொண்டு நடத்த உத்தரவிட்டது. இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி க.மகேஸ்வரி முன்னிலையில் இன்று தொடங்கியது. அப்போது, பள்ளியில் புதிதாக முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் […]
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியரான செல்வம் என்பவர் தொடர்ந்து அரசு பள்ளிகளில் பல புதுமைகளை படைத்து வருகிறார். அவர் அரசு பள்ளிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார். இவர் நேற்று முத்துப்பேட்டை, மருதங்காவெளி அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு வகுப்பறையின் தரைத்தளத்தில் புதிதாக டைல்ஸ் பதித்துள்ளார். இதற்கு அவரது நண்பர் செந்தில் என்பவர் 25 ஆயிரம் நிதி உதவி அளித்து உள்ளார். இதனை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இவரின் இந்த பரந்த மனப்பான்மை செயல் வெகுவாக […]
சென்னையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறித்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே கொரோனா காரணமாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பலரும் பொருளாதார ரீதியாக அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளனர். மீண்டு எழுந்துவரும் சூழ்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் […]
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் தொடர பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து […]
அரசு பள்ளியில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் சுமார் 2 மணி அளவில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது இச்சம்பவத்தன்று கோபி என்பவர் இரவு நேர காவலில் ஈடுபட்டார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் இவர் ரோந்து சென்ற போது மர்ம நபர்களால் தலைமைஆசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற கோபி […]
தமிழகத்திலேயே மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குறைந்த அளவு மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய தலைமை ஆசிரியர் பள்ளியின் கல்வித்தரம் மற்றும் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் இந்த பள்ளிக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளியில் 3 மாடிகள் […]
சேலத்தில் வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியையுடன் ஆசிரியர் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் இலந்தைவாரி கிராமத்திலுள்ள துவக்கப்பள்ளியில் தலைவாசல் மும்முடி பகுதியை சேர்ந்த 30 வயது பெண் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக அணைப்பட்டி பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் பணியாற்றி வருகிறார். பகுதிநேர ஆசிரியர் தினமும் தலைமை ஆசிரியையை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கம். இதையடுத்து, அவர்களுக்குள் நெருக்கம் […]
உலகத்தர கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் ஐஐடிக்களும் அடக்கம். இதில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் சேர வேண்டும் என்பதற்காக இணையவழி நுழைவுத் தேர்வு பயிற்சியை அரசு வழங்க உள்ளது. நீட் தேர்வை நடத்துகின்ற தேசிய தேர்வு முகமை தான் ஐஐடி சேர்க்கைக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வையும் நடத்துகிறது. இதற்கு தயாராக விரும்புவோர் வரும் 31-ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு புது டில்லியை சேர்ந்த “நெக்ஸ்ட் ஜென் வித்யா” […]
கொரோனாவால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 315 மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் […]
இலவச லேப்டாப் வழங்குவதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்று ஒரு இணையதள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியானது. கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இலவச லேப்டாப் வாங்குவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் என குறிப்பிட்டு ஒரு இணையதள முகவரி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. உங்கள் பகுதியில் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவி கிடைக்கட்டும், அதிகம் பகிரவும் […]
தமிழகத்தில் 2391 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் கழிப்பறை இருக்கிறதா என்று விவரங்களை சேகரித்து அனுப்புமாறு சில மாதங்களுக்கு முன்பு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு அரசுப்பள்ளிகளில் எத்தனை பள்ளிகளில் கழிப்பறை வசதி உள்ளது என்பதை என்ற விவரத்தை தற்போது முதன்மை கல்வி அலுவலர்கள் கல்வித் துறையிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். அதில் ஒரு அதிர்ச்சித் […]
தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” தனியார் பள்ளிள் ஆன்லைனில் […]
அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து தனியார் பள்ளியில் பாடம் எடுப்பதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அறியவும் சந்தேகங்களை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் 3 நாட்கள் நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில், […]
7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் 303 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கின்றது. அவர் விரைந்து ஒப்புதல் அழித்துவிட்டால் நடப்பாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக தமிழக அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் […]
புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு படி நேற்று வழங்கப்பட்டது. கொரோனா பொது முடக்கம் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப் பட்டதால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மதிய உணவுக்கு பதிலாக பணம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசியும், […]
அரசுப் பள்ளியில் ஏன் படிக்கவேண்டும் என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவன் கவின் கூறும் 10 காரணங்கள் அடங்கிய காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக.17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வேறு பள்ளிகளில் இருந்து மாறுதல் பெறும் மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 24-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரசுப் பள்ளிகளில் மாணவர் […]
சற்று முன் நடந்து முடிந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒப்புதலை தமிழக அமைச்சரவை வழங்கி இருக்கிறது. இது மிக முக்கியமான விஷயமாக பார்க்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை சந்திக்கும்போது அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு […]
ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி அரசு பள்ளியில் கைவரிசை காட்டிய திருடர்கள்…! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே P.புதுப்பட்டி என்ற ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் பள்ளி வளாகம் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பள்ளியில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க ஒரு கும்பல் அதற்காக திட்டத்தை தீட்டி இருக்கிறது. சில […]
சென்னை அருகே மேடவாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியை அடித்ததால் 8ம் வகுப்பு மாணவனின் பார்வை பறிபோயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர்கள் வேலு-ரேகா தம்பதியினர். வேலு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் முதல் மகனான கார்த்திக்(வயது 14), மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிக்குச் சென்ற கார்த்திக்கின் பின் மண்டையில் தமிழ் ஆசிரியரியாக பணிபுரியும் […]
டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட சென்ற மெலனியா ட்ரம்ப்பிற்கு ஆரத்தி எடுத்து பள்ளிக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு […]
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை, அரசுப்பள்ளிகள் அழிவின் விளிம்பில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்னர். ஆண்டிப்பட்டி அருகே 3 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சிங்கராஜ புரம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு ஆரம்ப பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்பது புகாராகும். இதனால் பள்ளியை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை தேனி, கம்பம் உள்ளிட்ட வெளியூர் […]