முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியுள்ளார். மாநிலத்தில் மூன்று முறை முதல் மந்திரியாகவும் இருந்த அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டுவந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி ஹரியானாவின் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கவலைக்கிடமான முறையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். முலாயமின் உயிரை காப்பதற்காக மருத்துவர்கள் கடுமையாக போராடினர் ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று […]
Tag: அரசு மரியாதை
சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான மிக்கைல் கோர்ப்பசேவ் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த 30ஆம் தேதி தனது 91 வது வயதில் காலமானார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இந்நிலையில் அவரது மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மிக்கைல் இறுதி சடங்கு இன்று மாஸ்கோவில் அரசு மரியாதையுடன் நடைபெறுகின்றது. இருப்பினும் இதில் அதிபர் புதன் […]
பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத். எல்லோராலும் கே.கே என்று அறியப்படுகிறார். டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடங்களைப் பாடியுள்ளார். அவருக்கு பல மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில், கொல்கத்தாவிலுள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும்போது அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவிலுள்ள சி.எம்.ஆர்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (வயது 52) மாரடைப்பால் காலமானார். இவர் தாய்லாந்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 90-களில் உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான […]
புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கன்னட திரையுலகினர் பவர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார். இவர் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து அவரது மகள் வருவதற்காக அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து அவர் பெங்களூர் வந்த பிறகு இறுதி சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்வர் […]
மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான பாட்னாவில் இன்று தகனம் செய்யப்பட்டது. மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் கட்சியின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.அதன் பிறகு அவரின் உடல் விமானம் மூலமாக அவரின் சொந்த மாநிலமான பிகாரில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாட்னாவில் இருக்கின்ற அவரின் வீட்டில் […]
ஒடிசாவில் கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பொதுமக்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களது உடலை அடக்கம் செய்தால் கொரோனா பாதிக்கும் என அச்சப்படும் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்த சம்பவர் அரங்கேறி வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தியாகிகளாக கருதி இறுதிச்சடங்கு நடத்தப்படும் என […]