சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் எலிகள் நடமாடும் வீடியோ பதிவு இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் சிலர் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கே 300க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர […]
Tag: அரசு மருத்துவமனை
பெங்களூரு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு குழந்தையின் தந்தையிடம் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய செவிலியரை ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் வாங்கி வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.அதனால் லஞ்சம் வாங்கும் செவிலியர்களை பிடிப்பதற்கு ஊழல் தடுப்பு படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு வடக்கு தாலுகாவை சேர்ந்த ஒரு நபரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக […]
மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணி புரிய வேண்டும் என்று உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர் படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை உள்ளது. இரண்டு ஆண்டுகள் பணி முடித்தால் மட்டுமே சான்றிதழ்கள் திரும்ப […]
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கால் வலிக்காக சென்ற பெண்ணை கொரோனா பரிசோதனை எடுக்காமலேயே தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேரும்படி வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே ஈச்சன்விலை பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் ஒருவர் கால் வலிக்காக தனது மகளுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். கால் வழியாக சென்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், […]
அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரிகள் கொடுத்த தொல்லையால் வேலையை விட்டு விட்டு தற்போது ஆட்டோ ஓட்டி பிழைத்து வருகிறார். கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் பிம்ஸ் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அம்மருத்துவமனையில் தாவணகெரே மாவட்டம் பாடல் கிராமத்தை சேர்ந்த டாக்டர் ரவீந்திரநாத் என்பவர் தடுப்பூசி நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். மருத்துவமனையில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதனால் டாக்டர் ரவீந்திரநாத்தை கொரோனா சிறப்பு வார்டில் தினந்தோறும் பணியாற்றும்படி அதிகாரிகள் […]
மதுரையில் அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் தொடர்ந்து ஐந்து மாதங்களாக பணியாற்றி வீடு திரும்பிய செவிலியருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். மதுரை ஆலங்குளம் ராமலிங்க நகரைச் சேர்ந்த திருமதி மீனா, அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 16 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் சேவையாற்றி வந்த மீனா பணி முடிந்து இன்று வீடு திரும்பினார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் […]
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. அதனால் பல்வேறு நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதல் படுக்கைகள் அமைப்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளி 5 மணி நேரம் ஆகியும் மருத்துவர்கள் வராததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் ராமானுஜம், ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் மூச்சுத்திணறல் காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேரத்திற்கும் மேலாகியும் எந்த மருத்துவரும் வந்து பார்க்காததால் கடும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு ராமானுஜம் பரிதாபமாக உயிர் இழந்தார், […]
சேலம் அரசு மருத்துவமனைக்கு முன்பு இரு நபர்கள் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் இருவர் சர்க்கரை நோய் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். சென்ற ஒரு மாதமாக வேலை இல்லாத காரணத்தால் இருவரும் மாநகரப் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்து உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை வளாகம் எதிரில் இருவரும் உயிர் இழந்து சடலமாக கிடந்தனர். இதுபற்றி […]
நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பித்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு மூதாட்டி ஒருவர் நடந்தே சென்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கு கடந்த ஜூலை 23ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மூதாட்டி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அம்மூதாட்டியை காணவில்லை […]
அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 120 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு, நோய் தொற்று உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இருக்கின்ற கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவுகளும் பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் இருந்து தயார் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு நேற்று இரவு வழங்கப்பட்ட உணவு […]
புதுக்கோட்டை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், உடம்பில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை கொள்ள நேரிடும் சூழ்நிலையில், மருத்துவமனையில் முதலில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, அதனுடைய முடிவு வெளியான பின்பு நோயாளிகளுக்கு சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் கடைபிடிக்கக் கூடிய ஒரு விஷயமாகும். அந்த […]
திருச்சி மணப்பாறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த அண்ணகிளி என்ற 17 வயது பொண்ணுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராம்கி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி நிலையில் மாணவி 6 மாத கர்ப்பமாகினார்.இந்த நிலையில் கல்யாணம் பண்ண சொல்லி பலமுறை வற்புறுத்தப்பட்டது. கல்யாணம் பண்ண ராம்கி மறுத்த நிலையில் அவர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் […]
சிவகங்கையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிவகங்கையில் நேற்றைய நிலவரப்படி 110 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 51 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் இதுவரை சிவகங்கையில் கொரோனோவால் பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் […]
வந்தவாசியில் 3 மருத்துவர்களுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 3 பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வந்தவாசி அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டடம் மூடப்பட்டதால் வளாகத்தில் உள்ள மரத்தடியில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நெல்லை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் நெல்லையில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 507 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 379 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் பாதித்த ஒருவர் உயிரிந்துள்ளார். தற்போது ஒரு மூதாட்டி பலியாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே […]
தூத்துக்குடி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் தலா 15 பேர் என மொத்தம் 30 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்து வீடு திரும்பிய 15 பேரையும் கடம்பூர் ராஜு மற்றும் மருத்துவர்கள் பழங்கள் கொடுத்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்துள்ளனர். தூத்துக்குடியில் நேற்று வரை 306 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 168 பேர் இதுவரை குணமடைந்து […]
சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 587 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகளில் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 , அரசு ராயபுரம் மருத்துவமனையில் 45 , கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 , […]
அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் தமிழக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தினமும் கணிசமாக அதிகரித்தே வருகிறது. தற்போது வரை கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 4,172 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி […]
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்பாக்கம் மற்றும் ஓமந்தூரார் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் இதுவரை 560 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா சென்னையில் வீரியம் எடுத்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மொத்தமாக 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 922 பேர் […]
சென்னையில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி […]
விழுப்புரத்தில் கொரோனா இரண்டாவது பரிசோதனை முடிவு வரும் முன்பே அலட்சியத்தால் 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 4 நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இருந்து கடநத 7 ஆம் தேதி தவறுதலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்த நிலையில் 2வது பரிசோதனை முடிவு வரும் முன்பே 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று வந்த இரண்டாவது ஆய்வு முடிவில் நால்வருக்கும் கொரோனா இருப்பது […]
இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்” என்று எம்பி கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துப் பொருள்களின் இருப்பு குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி இன்று ஆய்வுமேற்கொண்டார். இதையடுத்து எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது , “இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டேன். கொரோனா சிறப்புப் பிரிவில் […]
ராமநாதபுரத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழத்தில் இந்த வைரசால் 4 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் குணமாகியுள்ளார். இந்த வைரஸ் […]
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்கத்தில் இந்த வைரஸால் இதுவரை இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இன்று காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற காஞ்சிபுரம் பொறியாளர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் […]