Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அனாதையான நாய் குட்டிகள்…… தாயாக மாறிய கோழி…… நெகிழ வைக்கும் வீடியோ…..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு கோழி தாயாக மாறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் ஜெகன் என்பவரது வீட்டில் ஐந்து குட்டிகளை ஈன்ற நாய் பிரசவத்திற்கு பிறகு பத்து நாட்களில் இறந்துவிட்டது. கண்களை கூட திறக்காத நாய் குட்டிகளை அதே வீட்டில் இருக்கும் கோழி அரவணைத்து பாதுகாப்பதுடன் மற்ற விலங்குகள் நாய்க்குட்டிகளை நெருங்க விடாமல் விரட்டி அடிக்கின்றது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

பார்ப்பவரை ஆச்சர்ய பட வைக்கும் மூதாட்டியின் செயல்… என்ன செய்தார் தெரியுமா…??

நாய்களை அரவணைத்து ஒரு மூதாட்டி பிள்ளைகளைப் போல் கவனித்து வருவது கேரள மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் 70 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தெருவில் அலைந்து திரியும் நாய்களை பராமரித்து அரவணைத்து வருகிறார். அந்த வகையில் அந்த மூதாட்டி தற்பொழுது 60 நாய்களுக்கு தாயாக இருந்து பாதுகாப்பு அளித்து வருகிறார். தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை அரவணைத்து எடுத்து வந்த ருக்குமணியம்மா அதில் கால் ஊனமான காயம் அடைந்த […]

Categories

Tech |