கொரோனா பாதிப்பு தொடங்கிய போது 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் ஐந்து கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் 5 கிலோ புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை தடுக்க […]
Tag: அரிசி விலை
உடைந்த அரிசி ஏற்றுமதியை இந்திய அரசு இன்று முதல் தடை செய்துள்ளதால் இந்தியாவில் அரிசி விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. அதன் ஏற்றுமதியில் ஏதேனும் குறை ஏற்பட்டால் அது உணவு விலைகளில் உயர்வை உண்டாக்கி அழுத்தத்தை கொடுக்கும். ஏற்கனவே வறட்சி, வெப்ப அலைகள் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக நாட்டில் பல பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று இந்திய அரசு […]
மத்திய வேளாண் அமைச்சகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 247.30 லட்சம் ஹேக்டர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 314.14 லட்சம் ஹக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்தியா 21.2 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. அண்மை காலமாக வங்கதேசம், ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் […]
தமிழகத்தில் ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை, சிலிண்டர் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ஏற்றுமதி அதிகரிப்பு ஜிஎஸ்டி ஆகியவற்றால் தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முழுமையாக நடைமுறைக்கு வரும்போது அரிசி விலை மேலும் அதிகரிக்கும். மேலும் ரஷ்ய உக்கிரன் போரால் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால் அரிசி விலை […]
வங்கதேச அரசு அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்தியாவில் அரிசி விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி பாசுமதி அல்லாத அரிசியை ஜூன் 27ஆம் தேதி முதல் இறக்குமதி செய்வதற்கு வங்கதேசம் அனுமதி அளித்துள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் வங்கதேசம் மழை வெள்ளத்தால் உள்நாட்டு உற்பத்தி குறைந்ததால் முன்கூட்டியே அரிசி இறக்குமதி செய்கிறது. இதனால் வங்கதேசத்தை ஒட்டியுள்ள மேற்கு வங்கத்தில் அரிசியின் விலை 20 விழுக்காடும், பிற இடங்களில் 10 […]