சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் மூவர்ண நிறத்தில் கார் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம், ரிப்பன் மாளிகை கட்டிடம் உட்பட பல்வேறு அரச கட்டிடங்கள் மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்களில் மூவர்ண நிறத்தில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் […]
Tag: அரியலூர் மாவட்டம்
அரியலூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 28ம் தேதி, உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்வாய்ந்த கோயில்களில் ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழரின் பிறந்த நாளை […]
அரியலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் ஜெ குரு-வின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ குரு என்கின்ற குருநாதன் கடந்த 2018 மே 25 உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாமக சார்பில் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் ரூபாய் 2 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் […]
அரியலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திற்கு வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் கள்ளக்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என்று தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அரியலூர் மாவட்டத்திற்கு மட்டும் […]
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற ஏப்ரல் 18ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக எந்தவொரு திருவிழாக்களையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து, தமிழகத்தில் சித்திரை திருவிழா, புதுக்கோட்டை தேர் திருவிழா மற்றும் மீனாட்சி திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆகவே தமிழகஅரசு அனைத்து பகுதிகளிளும் கொண்டாடப்படும் […]
ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள்,டெங்கு பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 188 வேலை செய்கிறார்கள். இந்த பணியாளர்களுக்கும் நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த பணியாளர்கள் நேற்று நகராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பற்றி […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக முத்துகுமார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துகுமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற அரியலூர் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு […]
குடிநீர் கேட்டு குடங்களுடன் திடீரென்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வைப்பம் கிராமத்தில் சுமார் 2 – ஆண்டுகளுக்கும் மேலாகவே குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது சுண்டக்குடி செல்லும் சாலையில் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி இல்லை என […]
மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னநாகலூர் பகுதியில் பழனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கனிமொழி செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது பழனியாண்டி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அருகிலுள்ள இரும்பு கம்பியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் கனிமொழியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
பலத்த மழை பெய்ததால் மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்ந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த சூழ்நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வந்துள்ளது. இதனை அடுத்து கோட்டியால் கூழாட்டுகுப்பம் பகுதியில் முருங்கை மரம் முறிந்து மின்கம்பத்தின் மீது சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். இதனை அடுத்து ஆண்டிமடம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் […]
விவசாயியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் கிராமத்தில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுலோசனா என்ற மனைவியும், கவியரசன் மற்றும் அரவிந்த் என்ற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணனின் மகளை அதே பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளை உறவினர் ஒருவருக்கு திருமணம் […]
மனைவியை சூலுக்கியால் தாக்கிய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பரணம் கிராமத்தில் கண்ணன் – சல்பா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு பரத் என்ற மகனும், பிரியதர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிகள் இருவரும் வீட்டிலேயே ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதித்து கடன் பிரச்சினை ஏற்பட்டு ஹோட்டலை இழுத்து மூடியுள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவி […]
நிலப் பிரச்சனை காரணமாக அண்ணன் – தம்பி இருவருக்கும் இடையே தகராறு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மனைக்கட்டு பகுதியில் இருக்கும் அவர்களின் நிலத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை அடுத்து ஆரோக்கியசாமியின் தம்பியான ஜான்பால் அங்கு சென்றபோது இருவருக்குமிடையில் நிலம் தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்ணன் தம்பி […]
வீட்டில் வைத்து சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் கிராமத்தில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருக்கும் பின்புறத்தில் பூத்தொட்டி போல் அமைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீரமணியின் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கே கஞ்சா செடியானது 4 […]
பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏரியில் மீன்பிடித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட ஏரி ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏரியின் நீரானது விவசாயம் மற்றும் குடிநீர்காக பயன்பாட்டில் உள்ளது. தற்போது ஏரியில் உள்ள தண்ணீர் வற்றி குட்டை போல் மாறியுள்ளது. இந்த ஏரியில் தற்போது மீன் வரத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் அருகில் உள்ள கிராம மக்கள் மீன்களை பிடிப்பதற்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாகக் குவிந்துள்ளனர். இதனை அடுத்து […]
இருசக்கர வாகனத்தில் மீது லாரி மோதிய விபத்தில் சமையல்காரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் சமையல்காரராக வேலை செய்யும் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வேலையின் விஷயமாக இருகையூர் கிராமத்திற்கு சென்று வீடு திரும்பிய போது தா.பழூர் சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தின் மீது சிமெண்ட் ஏற்றி வந்த லோடு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜோதி சம்பவ இடத்திலேயே […]
மாமனார் தனது மகனுடன் இணைந்து மருமகனை மண்வெட்டியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாமங்கலம் கிராமத்தில் செல்வராஜ், மற்றும் ராஜேந்திரன் என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் கடந்த 9ஆம் தேதியன்று கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த செல்வராஜின் மருமகன் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரையும் தடுத்து […]
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் கடந்த 2 நாட்களாவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது. தற்போது இடி மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பெரிய கிருஷ்ணாபுரத்திற்கு செல்லும் வழியில் பலத்த காற்று வீசியதல் சாலையோரம் நின்று கொண்டிருந்த அரசமரம் சாய்ந்து விழுந்துள்ளது. […]
அரியலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 2 பேரை கைது செய்த போலீசார் 40 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள ராமதேவநல்லூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும், சுத்துக்குளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவரும் இணைந்து சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் ராமதேவநல்லூர் ஓடையில் சாராய ஊறல் வைத்துள்ளதாக காவல் துறையினருக்கு தகவல கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட மீன்சுருட்டி போலீஸ் […]
அரியலூர் மாவட்டத்தில் மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளருடன் தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதி வழியாக மொபட்டில் வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை(40), சிவா(20) மற்றும் கொளஞ்சி(30) ஆகிய 3 பேரிடம் சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மொபட்டில் அனுமதியின்றி மணல் […]
அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்பட்டதையடுத்து மாவட்ட கலெக்டர் நிதிஉதவி வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் காந்தி சிவகாமி என்ற கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு சார்பாக வட்டெறிதல் எப்-11 போட்டியில் பங்கேற்பதற்கு காந்தி சிவகாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வருகின்ற ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் டெல்லியில் இதற்கான […]
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு நேற்று 282 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நேற்று கணக்கெடுப்பின்படி கொரோனா நோய் தொற்றுக்கு புதிதாக 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,806 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய் தொற்றுக்கு தொடர்ந்து 2,320 பேர் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி […]
அரியலூர் மாவட்டத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 40,000 ரூபாயை திருடி சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்துள்ள நாயக்கர் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி சாந்தினி(38). தற்போது இவர்கள் குடும்பத்தோடு சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவதால் ஏதேனும் விசேஷங்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். இதனையடுத்து நாயக்கர் பாளையத்தில் இருக்கும் ஜெயராமனின் வீட்டை சாந்தினியின் தாயார் நீலாவதி(60) பராமரித்து வந்துள்ளார். […]
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காற்றுடன் பெய்த கனமழையால் 6 மின் கம்பங்கள் சரிந்து வயலில் விழுந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தான் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீபுரந்தான் மற்றும் அருள்மொழி கிராமத்திற்கு இடையே சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு நடவு பணி நடந்து வருகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் பெய்த கன மழையால் வயல்களில் அமைக்கப்பட்டிருந்த 6 மின்கம்பங்கள் […]
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 11,303 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,550 பேர் பூரண குணமடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு புதிதாக 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,303 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 2,612 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 8,550 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து […]
அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 47 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் கடந்த 22-ஆம் தேதி ஒரே நாளில் 47 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]
கடவுள் பேசுவது போல புதிதாக உருவாக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு நாடகம். அரியலூர் மாவட்டம் செந்துறை சேர்ந்த பள்ளி மாணவர்களான அண்ணன் தங்கையின் கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏழாம் வகுப்பு மாணவன் யோகீஸ்வரன் நான்காம் வகுப்பு மாணவி யோக ஸ்ரீ இருவரும் கடவுளும் பக்தனும் பேசுவதாக கொரோனா விழிப்புணர்வு நாடகத்தில் நடித்துள்ளனர். அதில் அரசு சொல்வதை கடைப்பிடித்தாலே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று கடவுளே சொல்வதுபோல் இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. […]
ஜெயங்கொண்டம் தொகுதியில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்கள் கட்டிடக்கலையின் பெருமையாக விளங்கும் பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு கட்டிடக்கலையின் சான்றாக விளங்குகிறது. நிலக்கரி படிமம் அதிக அளவில் கிடைக்கும் தொகுதியாகவும் இது உள்ளது. விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இப்பகுதியில் முந்திரி அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஜெயங்கொண்டான் சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக மற்றும் காங்கிரஸ் தலா 4 முறை வென்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர் மற்றும் பாமக தலா 1 […]
2001ஆம் ஆண்டு கலைஞரால் உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கலைக்கப்பட்டு மீண்டும் 2007 ஆம் ஆண்டு கலைஞரால் உருவாக்கப்பட்ட மாவட்டம் அரியலூர். கலியுக வரதராஜ பெருமாள் கோவில், திருமழபாடி வைத்தியநாதர் சுவாமி கோவில், வீரமா முனிவர் உருவாக்கிய அடைக்கலமாதா ஆலயம் ஆகியவற்றை புகழ் பெற்றவையாகும். கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்று தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞர் கைது செய்யப்பட்டு அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். விவசாயமும், பால் உற்பத்தியும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக உள்ளன. அரியலூர் சட்டமன்ற […]
லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் மதனத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்று வாலிபர் ஒருவர் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கோவில் சுவற்றின் மீது வேகமாக மோதியது. அதில் கோவில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் […]
விக்கிரமங்கலம் அருகே கல்லூரி மாணவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் மழவராயநல்லூர் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். செல்வகுமார் தனது இரண்டாம் ஆண்டு இளங்கலைப் படிப்பை குரும்பலூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற வாரம் செல்வகுமார் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியுள்ளார். இதனை அறிந்த […]
வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெண் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கோவிந்தபுத்தூர் பகுதியில் வசித்து வரும் பூங்கொடி என்ற பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்தப் பெண் வீட்டின் பின்புறத்தில் […]
சின்னமனூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூரில் உள்ள புலிக்குத்தி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். 27 வயதான இவர், 27.3.2016 அன்று பல்லவராயன் பட்டியில் குடி போதையில் நின்று கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் சின்னமனூர் வழியாக போடி நோக்கி சென்ற அரசு பேருந்தை செல்வராஜ் வழிமறித்து, பஸ்சை எடுக்கவிடாமல் தகராறு செய்தார். மேலும் பஸ் மீது […]
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் இளம்பருதி. இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்களால் இருவரும் ஏற்கனவே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் தனது மகனை பார்ப்பதற்கு இளம்பரிதி சென்றுள்ளார். அப்போது அவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த இளம்பருதி மனைவியை தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டார். இதைப் பற்றி தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம் பருத்தியை கைது செய்தனர். […]
அரியலூர் அருகே கொள்ளிட கரையில் ஊர்ந்து சென்ற மண்ணுளி பாம்பை பிடித்த இளைஞர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டம் திருமுனைப்பாடி கிராமத்தில் உள்ள கொள்ளிடக் கரையில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கரையில் இருந்து ஒரு உயிரினம் ஊர்ந்து செல்வதைக் கண்ட இளைஞர்கள் அதனைப் பிடித்து பார்த்தபோது மண்ணுளி பாம்பு தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையிடம் அப்பகுதி இளைஞர்கள் மண்ணுளி பாம்பை சாக்குப்பையில் கட்டி ஒப்படைத்தனர். இச்செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் மண்ணுளி […]
குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பருதி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் தனது மகனை பார்ப்பதற்காக இளம்பருதி மனைவி வீட்டிற்கு சென்றபோது, மனைவிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், இளம்பருதி தனது மனைவியை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பருதியை கைது செய்தனர். மேலும் அரியலூர் […]
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை விவசாய பணிகளுக்கு ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் இது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை இயக்குனர் திரு. தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காவல் துறையினர் போலி வழக்குகள் பதிவு செய்வதாக குற்றம் சாட்டிய மாட்டுவண்டி உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 4 மாட்டு வண்டிகளும், உதயனத்தம் கிராமத்தில் ஒரு மாட்டு வண்டியையும், காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் மணல் அல்ல பணம் பெற்றுக் கொண்டு போலி வழக்குகளை பதிவு செய்து மாட்டு […]
அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அரியலூரில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் கட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் பேசிய பொதுச் செயலாளர் சீனிவாசன் பாஜக ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு ஏராளமான நல்ல திட்டங்கள் […]
அரியலூரில் ஆபத்து காத்து விநாயகர் கோவில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ளது ஆபத்து காத்த விநாயகர் திருக்கோவில் இந்த கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கைப் பொருட்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் சுமார் 5000-ற்கும் மேற்பட்ட பணத்தை திருடி சென்றிருப்பது […]