சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொட்டவெளி பகுதியில் குருநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருநாதனின் வீட்டில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குருநாதன் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது விற்பனை செய்வதற்காக […]
Tag: அரியலூர்
அனுமதி இல்லாமல் மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடிய 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடக்கரை பகுதியிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரியான வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் கோடாலிகருப்பூர் பகுதியில் சோதனை ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு இரண்டு பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் மணல் […]
முதுகுத்தண்டு வலியினால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் பகுதியில் பெரிய தம்பி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 75 வயதுடைய சீனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு பன்னீர்செல்வம் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில மாதங்களாகவே சீனியம்மாள் முதுகுத்தண்டு வலியினால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சீனியம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வலி குறையாத காரணத்தினால் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். […]
முழு ஊரடங்கின் போது திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள முனியங்குறிச்சி பகுதியில் இரண்டு பெட்டி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த துணை தாசில்தார் இளவரசு மற்றும் காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட முதியவர் தைல மரக் காட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் பகுதியில் நெசவுத் தொழிலாளியான 60 வயதுடைய சாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாமிநாதனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆண்டிமடம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் போதிய அளவு […]
செம்மண் கடத்த முயன்ற 4 பேரை கைது செய்ததோடு பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது 4 பேர் மூன்று டிராக்டர்களில், பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளி கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய […]
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜியின் மூத்த மகனான ராகவன் தனது பாட்டி வீட்டிற்கு பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அதன்பின் விளையாடிக்கொண்டிருந்த ராகவன் நீண்ட […]
முழு ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றிக் திரிந்தவர்களிடம் 150 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் அவ்வாறு வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று […]
திருமானூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் மின்வாரியம் அமைந்துள்ளது. இந்த மின்வாரியத்திலிருந்து திருமானுர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர் மின்னழுத்த மின் பாதையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் முடிகொண்டான், திருமானூர், மஞ்சமேடு, திருவெங்கானூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் […]
ஆடுகளுக்கு தழை வெட்டியபோது கூலித்தொழிலாளி மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் பகுதியில் மனோரஞ்சிதம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித்தொழிலாளியான ரஜினி என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் சில ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் மனோரஞ்சிதம் தனது மகனான ரஜினியிடம் ஆட்டுக்குட்டிகளுக்கு போடுவதற்காக தழைகளை வெட்டிக் கொண்டு வரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து ரஜினி அப்பகுதியில் அமைந்துள்ள ஆலமரத்தில் ஏறி தலைகளை வெட்டி உள்ளார். அப்போது […]
மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டகோவில் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 27 வயதுடைய சத்தியசீலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியசீலன் சுண்டக்குடி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சத்தியசீலன் செல்லியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக சென்ற மினி பேருந்து எதிர்பாராத விதமாக இவரின் மோட்டார் சைக்கிளின் […]
தெருநாய்கள் விரட்டியதால் தப்பிக்க முயற்சி செய்த புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் தாமரைக் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் புள்ளிமான் ஒன்று இரவு நேரத்தில் இறையைத் தேடிக் அப்பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் புள்ளிமானை பார்த்ததும் அதனை துரத்தி சென்றுள்ளது. அப்போது தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்த அந்த புள்ளிமான் குளத்தில் குதித்து விட்டது. அதன்பின் அந்த குளத்தில் தாமரைகள் அதிகளவு […]
அரியலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் ஒரு புறம் கொரோனா பாதிப்பும், மறுபுறம் வெயிலின் தாக்கமும் மாறி மாறி பொதுமக்களை மிகவும் வாட்டி வதைக்கின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டிற்குள் இருக்க முடியாமலும், வெளியேயும் செல்ல முடியாமலும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் இரவு நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளின் ஓரங்களில் வெள்ளம் […]
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்களின் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியசாமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். […]
காதலித்து திருமணம் செய்த பெண் தனது கணவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமாநல்லூர் பகுதியில் தர்மதுரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 23 வயதுடைய பிரவீன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் மருதப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரவீனும், மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். […]
உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சேனாதிபதி பகுதியில் 70 வயதுடைய மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே மாணிக்கத்திற்கு உடல்நிலை சரி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மாணிக்கம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிக்சை பெற்று உள்ளார். ஆனாலும் இவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மிகுந்த மன வேதனையுடன் […]
அனுமதி இல்லாமல் மணல் கடத்திய மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொள்ளிட ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்துவதாக கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் அவரது உதவியாளருடன் அப்பகுதிக்கு சென்றார். அப்போது மாட்டு வண்டியில் மூன்று பேர் மணலை ஏற்றி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த 3 பேரும் அதிகாரிகள் […]
வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழமெக்கேல்பட்டி பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சுகந்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் சுகந்திக்கு வயிற்று வலி குறைந்தபாடில்லை. எனவே சுகந்தி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் […]
வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கூலித் தொழிலாளியான கலியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கலியன் தனது வீட்டில் இருந்து அப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதியிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த கலியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
கொரோனா பரவல் காரணமாக கிளைச் சிறையில் இருந்து 14 கைதிகள் திருச்சி மத்திய சிறை சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டான் பகுதியில் கிளை சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த கிளைச் சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சிறைச்சாலையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் அந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டசில கைதிகளை மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற […]
5 மாத கர்ப்பிணியான பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் பழனிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரேணுகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேணுகாவை குவாகம் பகுதியில் வசிக்கும் சுபாஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் ரேணுகா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் ரேணுகாவிற்கும் அவரது […]
கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்ற சிறுமி தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழுவூர் பகுதியில் பிச்சை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ராதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி உறவினர்களுடன் இணைந்து தனது ஆடுகளை அப்பகுதியில் மேய்க்கச் செல்வது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் ராதா ஆடுகளை மேய்க்கச் சென்ற போது அப்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து அவரது உறவினர் தண்ணீரை […]
கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் காற்றில் பறக்க விட்டு பொதுமக்கள் சுற்றி திரிகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காய்கறி, மளிகை போன்ற கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் […]
சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் அலை வேகமாக பரவத் வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பகல் 10 மணி வரை மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்படவும், மதியம் 2 மணி வரை வங்கிகள் செயல்படவும், அனுமதி அளித்துள்ளது. அதன் […]
அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கோரைக்குழி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் அம்பிகா என்பவரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்த போது வீட்டின் பின்புறத்தில் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அரசு […]
அரியலூர் மாவட்டத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாக் குறிச்சி பகுதியில் இருக்கின்ற ரயில்வே தண்டவாளத்தில் ஆண் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் விவரம் குறித்து அப்பகுதி மக்களிடையே காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் […]
கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி செயல்பட்டுக்கொண்டிருந்த 13 கடைகளுக்கு 6,500 ரூபாய் அபராதம் விதித்ததோடு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடும் முகாமை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையில் துணை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் குழுவினருடன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கொரோனா […]
முன்விரோதம் காரணமாக திருமண விழாவில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறவர் பகுதியில் கவிதா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரேம் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் சரண்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் பொய்யா நல்லூர் பகுதியில் வசிக்கும் மோகன்ராஜ்க்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரேம் என்பவருடைய திருமணமனது […]
அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்த நாளிலிருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இந்த வெயிலின் தாக்கத்தோடு அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியேயும் செல்ல முடியாமல், மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் அது சிறிது நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியைத் தருகின்றது. அதன் பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. இந்நிலையில் […]
முழு ஊரடங்கின் போது கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்ததால் அதிகாரிகள் ரூபாய் 15,200 அபராதம் வசூலித்ததோடு அவர்களை எச்சரித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி அதிகாரிகளுடன் முழு ஊரடங்கையும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா இல்லையா என்பதை கண்டறிய திடீரென ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் அரசு உத்தரவை மீறி இறைச்சி, மீன் […]
மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது சித்தியை வெட்டி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆங்கியனூர் பகுதியில் பழனிசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அமராவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார். அதே பகுதியில் பழனிசாமியின் அண்ணன் மகனான அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து […]
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கழுமங்கலம் பகுதியில் மணிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனும் அந்த சிறுமியும் நெருங்கிப் பழகியதால் அவர் 3 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இதனையடுத்து அந்த சிறுமி நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது […]
அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மாதவி என்ற பெண் மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த மது […]
சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் பகுதியில் அசோக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பா.ஜ.க. ஒன்றிய பொது செயலாளராக இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த சிறுமியை அசோக்குமார் தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை சிறுமியிடம் காண்பித்து மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த […]
அரியலூரில் ஒரே பகுதியில் வசிக்கும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் கிராமங்கள்தோறும் நேரில் சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தேளூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி […]
கொரொனா தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சில மக்கள் உண்ண […]
அரசு உத்தரவை மீறி விற்பனை செய்துகொண்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்ததோடு மட்டுமில்லாமல் மூன்று கடைகளுக்கு ரூபாய் 15 அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. . […]
சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த சிறுமி தனது வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் அந்த சிறுமியை தன்னுடன் விளையாடுவதற்கு அழைத்தார். இதனையடுத்து அந்த சிறுமியும் அவருடன் விளையாட சென்றபோது அந்த சிறுவன் கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துயுள்ளான். அதன்பின் […]
ரேஷன் கடைக்கு சென்று கொண்டிருந்தவரை நிறுத்தி வாலிபர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கடுகூர் பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் ஓட்டுனராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். அங்கு ஊரடங்கு அறிவித்ததால் ராஜா தனது சொந்த ஊரான கடுகூருக்கு சென்றார். இந்நிலையில் ராஜா அப்பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் அதே பகுதியில் வசிக்கும் தமிழ் மாறன் என்பவர் நின்றுகொண்டிருந்தார். […]
கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மணல் கடத்த முயன்று தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடியில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சிலர் இரண்டு லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் வருவதை பார்த்த அவர்கள் […]
மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை காவல்துறையினர் மீட்டு அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி அங்கும், இங்குமாக சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது அந்த மூதாட்டி தஞ்சை மாவட்டம் கீழ கபிஸ்தலம் என்று மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாரே தவிர மற்றபடி எந்த விபரமும் சொல்லத் தெரியாமல் இருந்தார். இது குறித்து தகவலை […]
டிப்பர் லாரி, காரின் மீது மோதிய விபத்தில் பெண் மருத்துவர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சி புதூர் பகுதியில் வினா பிரியங்கா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபுரந்தான் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது பணிக்காக கும்பகோணம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா கும்பகோணத்திலிருந்து பணிக்காக தனது காரில் பாலம் வழியாக காரைக்குறிச்சி பகுதியில் சென்று […]
நவரை பட்டத்தில் 2,000 ஏக்கருக்கு நெற்பயிர் நாற்று நடும் பணி தற்போது நடைபெற்று வருவதால் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நவரை பட்ட நெற்பயிர் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த போது மழை பெய்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் […]
மணப்பெண் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு படித்து முடித்த நிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும், நிஷாந்தும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் […]
அக்கா வீட்டில் கோபித்துக்கொண்டு வழிதவறி வந்த சிறுவனை காவல்துறையினர் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரி விக்னேஷ் என்பவர் இரவு நேரத்தில் மீன்சுருட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக 14 வயதுடைய சிறுவன் ஒருவன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் காவல் அதிகாரி விக்னேஷ் உடனே அந்தச் சிறுவனை நிறுத்தி விசாரித்த போது அவன் வடலூர் பகுதியில் வசிக்கும் கொளஞ்சி என்பவருடைய […]
வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மலை தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 87 வயதுடைய பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பழனியம்மாள் தனது வயலில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு மரத்தில் இருந்து தேன் கூடு ஒன்று பழனியம்மாள் வேலை செய்து கொண்டு இருந்த இடத்தின் கீழே விழுந்தது. அந்த தேன் கூட்டிலிருந்து […]
அரியலூரில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்ததோடு 127 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் […]
முதலமைச்சர் அறிவிப்பின்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி தொகை 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திரு மு. க. ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் […]
கொரோனா தொற்றுக்கான சந்தேகங்களை 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் கொரொனா தொற்றுக்கான சந்தேகங்களை குறித்து 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியாளர் ரத்னா, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி ஆகியோர் இணைந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து […]
அரியலூரில் திடீரென இடியுடன் கூடிய பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதோடு அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியை தருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள […]