தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, அரியலூர், நாகை, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது […]
Tag: அரியலூர்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]
அரியலூர் மாவட்டத்தில் தனது மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லூர் என்ற கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் சக்தி ரூபா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் குடும்ப தகராறு காரணமாக மகள் சத்திய ரூபா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனால் தனது மகள் இறந்த துக்கத்தில் இருந்து […]
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர் போராட்டம். கடலூர், நாகை மாவட்டங்களில் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் ஆதிக்க சாதியினர் செயல்படவிடாமல் அவமதிப்பதாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் இறுதியூர் ஊராட்சி தலைவர் தக்ஷிணாமூர்த்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் ஊராட்சிமன்றத் துணைத் தலைவரும் உறுப்பினர்களும் தன்னை செயல்பட விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டி ஒன்றிய அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் வட்டார வளர்ச்சி […]
அரியலூரில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் காலனி தெருவை சேர்ந்த வெள்ளையன் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். மேலும் அதே பகுதியில் மளிகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகள் முறை உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை வீட்டை […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் உள்ள 4 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்கு பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மணிகண்டனால் பாதிக்கப்பட்ட சிறுமி […]
இந்தி தெரியாத காரணத்தால் கடன் வழங்க முடியாது என்று ஜெயம்கொண்டான் வங்கி மேலாளர் கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். டாக்டர் ராமதாஸ் தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிக்கு ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவர் கடன் வாங்க வந்த பொழுது வட இந்தியாவை சேர்ந்த வங்கி மேலாளர் இந்தி தெரியவில்லை என்றால் கடன் கிடையாது என கூறியுள்ளார், இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு […]
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலம் லைன் மேடு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே […]
அரியலூரில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ள சாத்தாம்பாடி கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கூறியும் அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்துப் […]
அரியலூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அரியலூர் மாவட்டம் தாபலுர் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேல தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட தெருக்களிலிருந்து வடிகாலாக மழை நீர், வாய்க்கால் மூலம் வடக்கு தெருவில் உள்ள சிவன் கோவில் குளத்தில் வடிகாலாவது வழக்கம். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படமால் உள்ளது. இதுகுறித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் […]
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே 100 ரூபாய் பணத்திற்காக 80 வயது மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். குவலம் காலனி தெருவை சேர்ந்த 80 வயது மூதாட்டி சிவகாமி என்பவர், முதியோர் ஓய்வூதியத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். கடந்த 31ஆம் தேதி காலையில் அவரது பேத்தி கலையரசி என்பவர் வீட்டில் வந்து பார்த்தபோது மூதாட்டி கட்டிலில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து […]
அரியலூர் அருகே வயல்வெளிகளுக்கு வழிதவறி வந்த நட்சத்திர ஆமை விவசாயி பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். நட்சத்திர ஆமை பிடித்த ஜோதிவேல் அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். விளாங்குடியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். ஜோதிவேல் அவரது நிலத்திற்கு விவசாய சென்றுள்ளார். அப்போது கரும்பு வயலுக்கு செல்லக்கூடிய வாய்க்காலில் விசித்திரமாக ஒரு உயிரினம் ஊர்ந்து போவதை பார்த்த ஜோதிவேல் அருகில் இருந்த குச்சியை எடுத்துத் தூக்கிப் பார்த்தபோது அது நட்சத்திர ஆமை என தெரியவந்தது. சுமார் 300 கிராம் […]
அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்குவதற்கான பணி விரைவாக நடைபெற்று வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமை தாங்கினார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை மூச்சுத்திணறல் தான். அதனை சமாளிப்பதற்கு கண்டிப்பாக வெண்டிலேட்டர் தேவைப்படும். இவை குறிப்பிட்ட அளவிலான ஆக்சிஜனை நோயாளிகளுக்கு சப்ளை செய்து அவர்களை மூச்சுவிடும் சிரமத்தில் […]
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனோ தொற்று உள்ளதால் அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தொடர்ந்து அம்மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் கூட்டுறவுத்துறை பணியாளர் பழனிச்சாமி என்ற நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிச்செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட்ட அனைத்து பணியாளர்களும் வெளியேற்றப்பட்டு அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் நகராட்சி சார்பில் ஆட்சியர் […]
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததால் இன்று முதல் 7 நாட்களுக்கு கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் வேகமெடுத்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனால் அரியலூர் நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு நேற்று கோட்டாட்சியர் […]
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 38 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டத. இதனையடுத்து அரியலூர் நகரிலிருந்து கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுவதால், தற்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் […]
பூக்கடை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்ததன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. அரியலூர் நகரின் பிரதான கடை வீதியாக மாங்காய் பிள்ளையார் கோயில் தெரு இருக்கிறது.. இந்த தெருவில் ஒரு பூக்கடையை வைத்து வியாபாரம் செய்து வந்தவர் தான் முருகன். இவருக்கு 3 நாட்களுக்கு முன் காய்ச்சல் இருந்ததால், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று காலை […]
ஆண்டிமடம் அருகே கல்யாணம் செய்து வைக்காத ஒரே காரணத்தால் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொங்குநாட்டர் குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி.. இவருக்கு வயது 70 ஆகிறது.. விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர்.. இதில் மூத்த மகன் ஒருவருக்கும், 2 மகளுக்கும் சக்கரவர்த்தி கல்யாணம் செய்து வைத்து விட்டார்.. இந்நிலையில் மீதமுள்ள 2 மகன்களுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை, மேலும் 34 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – 2,167, மதுரை – 303, செங்கல்பட்டு – […]
ஜெயங்கொண்டம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 32 வயதுடைய பெண் ஒருவரை, அப்பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் 12ஆம் தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு […]
குடிபோதையில் தகராறு செய்த கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இலையூர் மேலவெளி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர், ஓட்டுநராக இருந்து வரும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் . தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பும் மது போதையில் இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது. வழக்கம்போல் நேற்று மது அருந்திவிட்டு வந்த ராஜசேகர் தனது மனைவி, […]
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை. சென்னை – 1,267, செங்கல்பட்டு – 162, […]
திருமானூர் அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் பெரியசாமி.. 28 வயதான இவர் தப்பாட்ட கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தன்னுடைய பைக்கில் அன்னிமங்கலத்திலிருந்து திருமானூர் நோக்கி சென்றார். அப்போது திருமானூர் அருகே சென்றபோது, எதிர் திசையில் அதே அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் கிருபாகரன்(வயது 27), தங்கவேல்(வயது […]
அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் தமிழக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தினமும் கணிசமாக அதிகரித்தே வருகிறது. தற்போது வரை கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 4,172 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி […]
அரியலூரில் கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்த நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரியலூரில் 275 […]
தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு இல்லை என அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்ட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தன. கொரோனா […]
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக அரியலூர் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியது. கோயம்பேட்டிலிருந்து சென்றவர்களின் காரணமாக அங்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது வந்த நிலையில் இன்றைக்கு மட்டும் அரியலூர் மாவட்டத்தில் 168 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை வாயிலாக அரியலூர், விழுப்புரம் கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல […]
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 34 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், புதிதாக 168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டுள்ள 168 பேரில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் மூலம் தொற்றுக்கு ஆளானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி பரிசோதனை மையத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா […]
அரியலூர் மாவட்டத்தில் 4 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உட்பட 24 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அரியலூர் மாவட்டத்தில் சுமார் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரில் சென்னை பீனிக்ஸ் மாலில் இருந்து திரும்பிய பெண் ஒருவர், மருந்தக உரிமையாளர் ஒருவர் மற்றும் அவரது கடை ஊழியர்கள் இருவர் ஆகியோருக்கு கொரோனா பரவியது. அந்தப் பெண்கள் மூலம், […]
கொரோனவை கட்டுப்படுத்த நாளை ஒரு நாள் மட்டும் கடலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக […]
கொரோனா பாதித்த 7 மாவட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு ஆரஞ்சு பகுதிக்கு மாறியுள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்து […]
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ள நிலையில் 6 மாவட்டங்கள் நாளை மட்டும் ழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு […]
அரியலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரை சேர்ந்த நாராயணசாமி என்பவர் கடந்த 6ம் தேதி கேரளாவில் இருந்து நடந்தே தமிழகம் வந்து சேர்ந்துள்ளார். பின்னர் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அரியலூர் தலைமை மருத்துவமனையில் 6ம் தேதி அன்றே சேர்ந்துள்ளார். பின்னர் அவருக்கு மறுநாள், அதாவது 7ம் தேதி ரத்த மாதிரிகள் எடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை முடிவுகள் வெளியாகாத நிலையில் அவர் காத்திருப்பு […]
நெல் அறுவடை இயந்திரத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா எதிரொலியாக அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள ஆயிர கணக்கான விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தாஃபே நிறுவனத்துடன் இணைந்து வேளாண்மை இயந்திரங்களை சிறு குறு விவசாயிகளுக்கு 90 நாட்கள் வாடகை இன்றி பயன்படுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அடுத்து உழவன் செயலி மூலம் பயனடையலாம். விவசாயிகள் தங்களுக்குத் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என்ற நல்ல தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் காரணமாக உள்ளது. அரியலூரில் 144 தடை உத்தரவை மீறி வெளியே திரிந்ததாக 2,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான […]
144 தடை உத்தரவை மீறி பைக்கில் சுற்றி திரிந்த 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதை தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி […]