ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வந்தது. இதனால் கபினை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு உபரி நீர் அதிகரித்து வந்தது. அதில் அதிகபட்சமாக 2.46 லட்சம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகள் அனைத்தும் மூழ்கி சேதமடைந்தது. இதனையடுத்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதும் […]
Tag: அருவி
திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஆராய்ச்சி ஊராட்சி சக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கந்தசாமி-ஜோதி தம்பதியினர். இவர்களின் மகன் முத்து என்ற மோகன்ராஜ் (24). பட்டதாரி வாலிபரான இவர் துறையூரிலுள்ள ஒரு பேக்கரில் கூலிவேலை செய்து வந்தார். நேற்று மாலை மோகன்ராஜ் சகதொழிலாளர்களுடன் புளியஞ்சோலை அருவிக்கு சென்றுள்ளார். அங்கு புளியஞ்சோலை நாட்டாமடு பகுதியிலுள்ள அருவியில் மோகன்ராஜ் சக தொழிலாளர்களுடன் குளித்தார். அண்மையில் பெய்த மழையால் அருவியில் தண்ணீர் அதிகளவில் வந்தது. இந்நிலையில் அபாயம் என வாசகம் எழுதப்பட்ட […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக நீரோடைகள், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்லாவெளி அருவிக்கு பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டிய என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அஜய் பாண்டியன் புல்லாவெளி அருவியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். கொடைக்கானல் புல்லாவெளி அருவியில் போட்டோ எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் மாயம் ⚠️ பதைபதைக்கும் காட்சிகள் […]
ஈரோடு மாவட்டம் கடத்தூர் கோபி அருகில் உள்ள கொடிவேரி தடுப்பு அணைக்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். அது மட்டுமில்லாமல் தங்கள் கொண்டு வரும் உணவுகளையும், அங்கு விற்கப்படும் மீன் வருவல்களையும் ருசித்து உற்சாகம் அடைவார்கள். அதனைத் தொடர்ந்து கொடிவேரி அணையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்து வருவதால் கடந்த 1ஆம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. […]
வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஓகேனக்கலுக்கு தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் நேற்று காலை 24 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்தது. இதனையடுத்து மாலை 1 வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் மெயின் அருவி, சீனிபாலஸ், ஐந்தருவி […]
புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மலை கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் இயற்கை எழில் கொஞ்சும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வருகின்றனர். இதனையடுத்து தண்ணீர் இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து […]
திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி விளங்குகிறது. இங்கு தினம்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் அங்கு “குளு குளு” சீசன் நிலவுகிறது. இதனால் நேற்று தீற்பரப்பு அருவிக்கு கன்னியாகுமரி மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனையடுத்து […]
வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாயத்திற்காக பாசன கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு மறுகால் மதகுகள் மூடப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளபெருக்கு தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் திற்பரப்பு அணையில் குளிப்பதற்கு சில நாட்களுக்கு பிறகு அனுமதித்துள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் […]
மேகமலை பகுதியில் அமைந்துள்ள சின்ன சுருளி அருவியில் குளிப்பதற்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அந்த அந்தப் பகுதியில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சின்ன சுருளி அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து சின்ன சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என வனத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மது […]
எட்டு மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 8 மாதங்களாக குமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட கலெக்டர் அரவின் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று அருவியில் குளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பாசி பிடித்த இடங்கள் மற்றும் சுற்றுப்புற […]
குற்றாலத்தில் இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான மிகவும் பிரபலமான குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். மேலும் தென்காசி பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் ஏராளமான பகுதிகளின் சுற்றுலா வருவாய் ஆதாரமாகவும் குற்றாலம் விளங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இந்த மாதம் […]
பொதுமக்களுக்கு இடையூறாக அருவியில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலைப்பாதையில் ஆங்காங்கே திடீரென அருவிகள் தோன்றியது. அந்த பகுதியில் உள்ள சிறு அருவிகளில் ஒரு சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 3-வது கொண்டை ஊசி வளைவு அருகில் அரை நிர்வாணமாக 5 பேர் குளித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடத்தில் இதுபோன்று […]
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. ஒவ்வொரு மாதமும் ஆடி முதல் தேதி மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் இந்த ஆற்றில் நீராடி அருள்மிகு அறப்பளீஸ்வரர் வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வால் இ-பாஸ் இல்லாமல் சுற்றுலா பயணிகள் கொல்லிமலை சென்று வரலாம் என்று அரசு அனுமதி […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கும் காரணமாக கொரோனா சற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில்மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை ,குண்டாறு பகுதிகளில் தனியார் நீர்வீழ்ச்சிகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தனியார் நீர்வீழ்ச்சிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் விதிகளை மீறி சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் தனியார் நீர்வீழ்ச்சிகளை ஆய்வு […]
தமிழ் சினிமாவில் வெளியான அருவி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிதி பாலன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் அருவி. இப்படம் சர்வதேச அளவில் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. அதன்பின் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் அருவி படத்தில் தங்கல் படத்தின் […]