Categories
அரசியல் உலக செய்திகள்

கால்பந்து அரையிறுதி போட்டி…. தோல்வியடைந்த மொராக்கோ அணி…. வெடித்த கலவரம்….!!!

கால்பந்தின் அரையிறுதியில் மொரோக்கா அணி தோல்வியடைந்ததால், கோபடைந்த ரசிகர்கள் கலவரத்தை உண்டாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை கால்பந்தின் அரை இறுதிப் போட்டியானது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் மொராகோ அணியானது, பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால், மொராக்கோ ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள். மேலும் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் கலவரத்தை உண்டாக்கினர். காவல்துறையினர் மீதும் கற்களை தூக்கி எறிந்தார்கள். மேலும் பெல்ஜியத்தில் காவல்துறையினர் மீது மொராக்கா ரசிகர்கள், பட்டாசுகளை கொளுத்தி போட்டனர். […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடர்…. ஆண்கள் அரையிறுதி சுற்று…. இந்திய வீரர் பிரனோய் தோல்வி…!!!

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பெண்கள் சுற்றின் கால் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து நேற்று தோல்வியை தழுவினார். இந்நிலையில் ஆண்களுக்கான அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த தொடரில் ஹாங்காங் வீரர் லாங் அங்குஸ் மற்றும் இந்திய வீரர் பிரனோய் ஆகியோர் மோதினார். இந்த தொடரில் பிரனோய் 17-21, 21-9 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். மேலும் லாங் அங்குஸ் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்….. சானியா மிர்சா ஜோடி தோல்வி…. வருத்தத்தில் ரசிகர்கள்….!!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அறை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சானியா மிர்சா – மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக்- நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போது சானியா மிர்சா- மேட்பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்….. ஹாலெப், ரிபாகினா அரையிறுதிக்கு முனேற்றம்….!!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலிறுதி சுற்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். அப்போது ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்டுகளில் வென்று அரையிறுதிக்கு சென்றுள்ளார். மற்றொரு போட்டியில் கஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று தகுதி பெற்றுள்ளார்.

Categories

Tech |