சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி இன்பரா நிறுவனம், அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் அளித்த புகார் தொடர்பான தகவல்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த பதிவுகள் குறித்து அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி.இன்பரா நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் சத்திய […]
Tag: அறப்போர் இயக்கம்
தமிழ்நாட்டில் கடந்த 2019 -2021 ஆம் வருடங்களுக்கு இடையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் நல்ல நிலையிலுள்ள சாலைகளை மீண்டும் போட்டதன் வாயிலாக ரூபாய் 692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சமூகஊடகங்களில் அறப்போர் இயக்கம் தரப்பில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டது. இவ்விவகாரம் குறித்து அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி சமூகவலைதளங்களிலும் அறப்போர் இயக்கம் செய்திகளை வெளியிட்டு வந்தது. இதையடுத்து அறப்போர் இயக்கம் என்ற அமைப்புக்கு […]
அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு குறித்து எதிர்மறை பரப்புரை செய்யக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை மீறி அறப்போர் இயக்கத்தினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அமைச்சர் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அரசியல் உள்நோக்கத்துடன் அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக நீதிபதிகள் […]