இன்றைய காலகட்டத்தில் பயணர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்வேறு சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து திருடப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் பொதுமக்களின் தொலைபேசி எண்களுக்கு அதிகமாக spam கால்கள் வருவதாக புகார்களும் எழுந்துள்ளது. Spamகால்களை எடுப்பதன் மூலம் நம்முடைய மொபைல் ஹேக் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக உலகின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான கூகுள் செயல்பட இருப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் Google voiceசெயலியில் வரும் இன்கம்மிங் கால்களுக்கான […]
Tag: அறிமுகம்
மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆண்கள் யாராவது தவறான கண்ணோட்டத்தில் பெண்கள் மீது உரசினால் பேருந்தில் உள்ள அவசர பொத்தானை அழுத்தி புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருதி சென்னையில் இயங்கும் சுமார் 1200 மாநகர பேருந்துகளில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் போது ஆண்கள் தங்களை உரசினால் அல்லது பாலியல் தொல்லை கொடுத்தால் இந்த அவசர பொத்தானை பெண்கள் அழுத்தலாம். […]
LPG எரிவாயுவை பயன்படுத்துவதற்கு மாற்றாக “சூர்ய நூதன்” எனும் சூரிய ஒளியால் இயங்கும் அடுப்பை இந்திய ஆயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கு எரிவாயு அமைச்சகம் வடிவமைத்து உள்ளது. சூர்ய நூதன் ரீசார்ஜ் செய்யக்கூடிய வீட்டின் உட் புறத்தில் பயன்படுத்தக்கூடிய சூரிய ஒளி சமையல் அடுப்பு ஆகும். இது பரிதாபாத்திலுள்ள இந்தியன் ஆயிலின் ஆர்&டி மையத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அத்துடன் இதற்கு காப்புரிமையும் பெறப்பட்டது. இந்த சூர்ய நூதன் அடுப்பு 3 வித மாடல்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது. பேஸிக் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவித அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது. அதனால் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் குறித்து புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் விதிகளை யாராவது மீறினால் அது தொடர்பாக சக பயனர்களை புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் […]
ஆதார் கார்டை போன்று விரைவில் மக்கள் ஐடி அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஆதார் கார்டு எப்படியோ அதுபோல தமிழகத்தில் வசித்து வரும் மக்களுக்கு தற்போது மக்கள் ஐடி எனும் ஒரு கார்டை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருவாய் கல்வி, முதல்வர் காப்பீட்டு திட்டம், பொது விநியோகம், கருவூலம், சுகாதாரம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு துறைகளிடம் உள்ள தகவல்களை வைத்து இந்த […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் தினம் தோறும் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருவதால் whatsapp பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது பயனர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புதிய அம்சம் வெளியாக உள்ளது. அதன்படி டெக்ஸ்டாப் பீட்டா பயனர்கள் மற்றவர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு புதிய ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. ஸ்டேட்டஸ் வழக்கம் போல் end to […]
இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றத்திற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் இருப்பதால் அதிலுள்ள பண பரிமாற்ற செயலிகள் மூலமாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே மற்றவருக்கு எளிதாக பணத்தை மாற்றலாம். தற்போது பல பணம் பரிமாற்ற செயலிகள் மக்களுக்கு உதவும் விதமாக நடைமுறையில் உள்ளன. அதிலும் குறிப்பாக போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்றவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த செயலிகள் மூலமாக […]
2022 -ஆம் ஆண்டு இந்திய வாகன சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. கார், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் என அனைத்து ரக வாகனங்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இருசக்கர வாகர தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் வருகிற 2023 -ஆம் ஆண்டு ஏராளமான புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமாக உள்ளது. பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். […]
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் ரகசிய தகவல்கள், புகார்கள் தெரிவிக்க பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி http://complaints.tnidols.com என்ற பிரத்யேக இணையதளத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பிளாக் செயின் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலுள்ள தரவுகளை ரகசியமாக சேமிக்கவும், கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் சரியான தகவலை அனுப்பும் பொதுமக்களுக்கு டிஜிட்டல் […]
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில்களையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனென்றால் ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், டிக்கெட் செலவு குறைவாகவும் இருப்பதால் அனைவரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மேலும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இருக்கிறது. ரயிலில் டிக்கெட் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் அல்லது ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து பயணம் செய்கின்றனர். அதற்காக ஐ.ஆர்.சி.டி.சி ஆப் உள்ளது. அதேபோல் டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கல், பிரிமியம் தட்கல் என அதிகம் செலவு செய்தாவது டிக்கெட் புக்கிங் […]
விமான நிலையங்களில் கம்ப்யூட்டர் டோமோகிராபி அடிப்படையிலான ஸ்கேனர்களை பயன்படுத்த வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் மின்சாதன பொருட்களை வெளியில் எடுக்க வேண்டியது இல்லை. அவை சூட்கேஸ் அல்லது கைப்பையில் இருந்தவாறு இந்த கருவி ஸ்கேன் செய்து விடும். இதனால் பயணிகளின் நேரம் மற்றும் சிரமம் குறையும் என தெரிவித்துள்ளது. எனவே இனி அனைத்து விமான நிலையங்களிலும் கம்ப்யூட்டர் டெமோகிராபி அடிப்படையிலான ஸ்கேனர் […]
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீண்டும் திரும்ப பெரும் வசதியானது வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் ஆக்சிடென்ட்டல் டெலிட் என்ற பெயரில் ஸ்டேபிள் வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களிலும் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் உள்ள delete for […]
உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் youtube சேனல் தொடங்கலாம் என்ற நிலை வந்து விட்டது. இந்நிலையில் கூகுளின் யூடியூப் நிறுவனம் தற்போது கல்வி துறையிலும் அடி எடுத்து வைக்கிறது. Youtube லேர்னிங் என்ற […]
உலகம் முழுவதும் சுமார் 20 கோடி பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலி தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலி ஆகிவிட்டது. தனது பயனர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள மெட்டா நிறுவனம் அடிக்கடி மேம்பட்ட, புதிய நவீன தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்காக தனி R&D குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது மற்றொரு புதிய அம்சத்தை whatsapp செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பை பொறுத்தவரை வியூ ஒன்ஸ் எனப்படும் தகவல்களை ஒரு முறை மட்டுமே […]
வாட்ஸ் அப் நிறுவனம் நடப்பு ஆண்டு பல புது வசதிகளை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் ஆகியவற்றில் இருப்பதை போன்று தற்போது இப்போது வாட்ஸ்அப்பிலும் அவதார் அம்சம் கிடைக்கிறது. வாட்ஸ் அப் பயனாளர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி தங்களுக்கு பிடித்தமான அவதாரை உருவாக்கி அதை ஸ்டிக்கர்களாகவும் அனுப்பி கொள்ளலாம் (அ) ப்ரொபைல் பிக்சராகவும் பயன்படுத்தலாம். இதையடுத்து உங்களது வாட்ஸ்அப் எண்ணில் இருந்து உங்களுக்கே நீங்கள் மெசேஜ் செய்துக்கொள்ளும் வசதி வாட்ஸ்அப்-ல் கிடைக்கிறது. […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் 1024 பேர் இணையும் அளவுக்கு வாட்ஸ் அப் குரூப் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அவதார் ஸ்டிக்கர் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த அம்சம் facebook மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் இருக்கும் பட்சத்தில் தற்போது வாட்ஸ் அப் செயலிலும் அவதார அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலமாக […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அவ்வகையில் அரசு அதிகாரி அல்லது வங்கி அதிகாரி போல பொது மக்களிடம் தொடர்பு கொண்டு தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடி வருகின்றனர். அதனால் வங்கி கணக்கில் இருக்கும் தொகை முழுவதும் அப்படியே திருடப்படுகிறது. இந்நிலையில் இந்த முறைகேடுகளை தடுக்கும் விதமாக truecaller செயலியில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி truecaller செயலியில் டிஜிட்டல் அரசாங்க டைரக்ட்ரி ஒன்றைஇணைத்துள்ளதாகவும் […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் எஸ்பிஐ வங்கி தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொண்டு வந்துள்ளது. வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற தொந்தரவே இல்லாமல் ஆன்லைன் மூலமாக வீட்டுக் […]
திருப்பூர் மாவட்டத்தில் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்து ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல்நாத் என்ற 33 வயது மிக்க நபர் பேருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு என்ற சிஎன்ஜியை எரிபொருளாக வைத்து இயங்கும் பேருந்தை திருப்பூர் -புளியம்பட்டி வழித்தடத்தில் அறிமுகம் செய்துள்ளார். டீசல் விலை தற்போது அதிகமாக உள்ளதால், பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் லாபம் அதிகமாக கிடைக்கவில்லை. அதனால் தமிழகத்தில் முதல் முறையாக சிஎன்ஜி […]
நாடு முழுவதும் உள்ள அனைத்து துறைகளும் தற்போது டிஜிட்டல் வயமாகப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் பணத்தை பெறுவது போல தங்க நாணயங்களை பெற முடியும். நாட்டின் முதல் தங்க ஏடிஎம் இயந்திரம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட்டில் நிறுவப்பட்டுள்ளது. இந்த முதல் தங்கை ஏடிஎம் பேகம்பேட்டில் உள்ள அசோக் ரகுபதி சேம்பர்சில் கோல்ட் சிக்கா என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம் மூலம் தங்களின் […]
Galaxy, M04 போனை வரும் வாரம் நம் நாட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன் விலையானது ரூபாய்.8,999 முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. RAM Plus வசதி வாயிலாக பயனாளர்கள் Samsung M04ல் 8GB RAM வரையிலும் ரேம் சேமிப்பை நீட்டிக்கலாம். இது ரூபாய்.10,000 வகை செல்போன்களில் தனித்துவமானது ஆகும். இந்த செல்போனில் 5000 mAh பேட்டரி சக்தி உள்ளதாக தகவல் கூறுகிறது. இது உண்மை எனில், இந்த செல்போனை ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்தவும் […]
பயனர்களின் கோரிக்கை படி வாட்ஸ்அப் நிறுவனமானது புது அம்சங்களை அன்றாடம் முயற்சி செய்து வருகிறது. தற்போது மற்றொரு அம்சமும் வாட்ஸ்அப்-ல் சேர்க்கப்பட இருக்கிறது. அதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. இந்த புது அம்சமானது பயனர்கள் தங்களது கணக்குகளை அண்ட்ராய்டு டேப்லெட்கள் உள்ளிட்ட 2ஆம் நிலை சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கும். இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு ஆணையத்தின் தகவலின் அடிப்படையில், புது அம்சம் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கை ஸ்மார்ட் போனிலிருந்து ஆண்ட்ராய்டு […]
உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகிறது. அதனால் பல நாடுகளும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் இந்தியாவும் விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி கூறிவந்த நிலையில் அதற்கான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெல்லி உட்பட நான்கு முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, Yes Bank, ITFC, FIRST […]
லாவா தன் புது ஸ்மார்ட் போனை ரூபாய்.10,000 குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன் கேமரா ஐபோன்-14 ப்ரோ போல் உள்ளது. Lava Blaze NXT என பெயரிடப்பட்டிருக்கும் இப்போனை இந்தியசந்தையில் நிறுவனம் ரகசியமாக அறிமுகப்படுத்தி உள்ளது. அமேசானில் போனின் அம்சங்கள் மற்றும் விபரக் குறிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்போன் சென்ற மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Lava Blaze (4G)-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். Lava Blaze NXT விலை (இந்தியாவில் Lava Blaze NXT விலை) மற்றும் […]
இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் இறுதிக்குள் வழங்கினால் மட்டுமே எவ்வித தடையும் இல்லாமல் பென்ஷன் வந்து சேரும். தற்போது வங்கி, தபால் அலுவலகம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களின் வீடுகளை சென்று சான்றிதழை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிகளுக்குஅலையாமல் வீட்டிலிருந்து சமர்ப்பிக்க மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சேவையை அரசு அறிமுகம் செய்துள்ளது. அவ்வகையில் […]
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை பார்க்க செல்பவர்கள் பதிவு செய்வதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை தலைமைச் செயலகத்தில் வைத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த புதிய செயலியால் தவறான ஏஜென்சி மூலம் வெளிநாடு சென்று பலர் சிக்கிக் கொள்வதிலிருந்து காத்துக் கொள்ள முடியும். இந்த செயலி வெளிநாடுகளுக்கு செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த செயலியில் பதிவு […]
நெட்பிளிக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அக்கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயம் ஆகும். இந்த அடிப்படையில் ஒரு கனெக்ஷன் வாயிலாக பல பேர் புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கிறோம். சில நேரம் கணக்கின் பாஸ்வேர்டு நண்பர்களிடம் மட்டுமின்றி நண்பர்களின் நண்பர்கள் வரைகூட செல்வது உண்டு. ஒருமுறை பாஸ்வர்ட் கிடைத்துவிட்டால் சந்தா பெற்ற நபர், பாஸ்வர்டை […]
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அந்நிறுவனம் தொடர்பான தகவல்கள் வைரலாகி வருகிறது. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்களில் பல ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இது தவிர்த்து டுவிட்டர் புளூ சந்தா, புளூடிக் விவகாரம் என பெரும்பாலான புது மாற்றங்கள் டுவிட்டரில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சத்தில் புதியதாக பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டுவிட்டர் டிரைக்ட் மெசேஜஸ்-ல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியானது கூடியவிரைவில் வழங்கப்படவுள்ளதாக […]
நாடு முழுவதும் பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்தில் ஒருமுறை தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அவ்வாறு சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ச்சியாக வந்து சேரும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் முடிக்க வேண்டும். மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலமாக அவர்களின் வீட்டிற்க்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவையை இந்திய அஞ்சல் […]
இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை,ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இவற்றைப் போலவே பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம் தான். வருமான வரி தொடர்பான வேலை தவிர வங்கி தொடர்பான பணிகளுக்கும் பான் கார்டு கட்டாயம் தேவை. ஒருவேளை உங்களிடம் பான் கார்டு இல்லை என்றால் அதனை வாங்குவது மிகவும் சுலபம்தான். வீட்டிலிருந்தபடியே பான் கார்டு வாங்கிவிடலாம். இதற்கு ஆன்லைன் மூலம் இறுதியில் விண்ணப்பிக்கலாம். […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கோகுல் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பயனர்களுக்கு தேவையான மின்னஞ்சல்,ட்ரான்ஸ்லேட்டர் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இங்கு உள்ளது. அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூகுள் நிறுவனம் அவ்வப்போது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. வகையில் தற்போது கூகுள் workspace ஸ்டோரேஜ் உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து கூகுள் க்ரோமில் மெமரி சேவர் மற்றும் எனர்ஜி சேவர் போன்ற அம்சங்களை கொண்டு வர உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் […]
ஒன்பிளஸ் நிறுவனமானது சென்ற வருடம் ஜூலை மாதம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிளாக்ஷிப் தர ட்ரூவயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இப்போது இம்மாடலின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுவாக்கில் ஒன்பிளஸ் நிறுவனமானது புது பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த இயர்பட்ஸ் உற்பத்தி நிலையை […]
இந்தியாவில் கொரோனா காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ரயில் பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ரயில் பயணிகள் வீட்டிலிருந்தபடியே எளிதாக டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக பயணிகள் எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய ரயில்வே UTS என்ற செயலி மூலமாக டிக்கெட் பெறலாம் என அறிவித்துள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஸ்மார்ட் […]
நாடு முழுவதும் சமீபத்தில் 70-க்கும் மேற்பட்ட மின்வாரியங்களுக்கு மின் கட்டணம் செலுத்தும் சேவை 123PAY இல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக மின்கட்டணம் செலுத்தும் சேவை எளிதாகும். இந்த அம்சம் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலமாக இயக்கப்படுகின்றது. இந்த கட்டண செயல்முறை காகித சரிபார்ப்பு அல்லது பயன்பாட்டு அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டிய தேவையை நீக்கும். இந்த சேவை ஃபீச்சர் போன் மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் போன் பே-ல் இனி வங்கி […]
அசுஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய லேப்டாப்-ஜென்புக் 17 போல்டு நம் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கிறது. முன்பாக இந்த லேப்டாப்பிற்கான முன் பதிவு சென்ற மாதம் தொடங்கி நடந்து வந்தது. இது உலகின் முதலாவது 17.3 இன்ச் மடிக்கக்கூடிய OLEDலேப்டாப். புது போல்டபில் லேப்டாப்-ஐ உருவாக்க பிஒஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்ததாக அசுஸ் தெரிவித்துள்ளது. இவற்றில் 17 இன்ச் 2.5K ஸ்கிரீன் இருக்கிறது. இதை மடிக்கும்போது 12.5 இன்ச் லேப்டாப் போல் பயன்படுத்தலாம். அசுஸ் எர்கோசென்ஸ் […]
எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனமானது உலகின் முதல் 12 இன்ச் Stretchable டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்திருக்கிறது. பிரீ-பார்ம் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இந்த Stretchable டிஸ்ப்ளே ஹை-ரெசல்யூஷன் வசதி கொண்டு உள்ளது. இதனால் டிஸ்ப்ளேவை நீட்டிக்கவோ, மடிக்கவோ (அ) சுருக்கவோ இயலும். அவ்வாறு செய்யும்போது டிஸ்ப்ளேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சந்தையில் 20% வரை Stretchable திறனுடைய உலகின் முதல் தொழில்நுட்பம் இது ஆகும். இவற்றில் 100ppi ரெசல்யூஷன், புல் கலர் RGB இருக்கிறது. அதிகளவு தரம் கொண்டிருப்பதால், […]
சமூக வலைதளத்தில் பலகாரம் அதிகம் விரும்பப்படும் whatsapp தனது பயணங்களில் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் அவ்வபோது புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் இனி புதிய கம்யூனிட்டிஸ் வசதி கொண்டிருக்கும். இதனை உலக அளவில் வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னால் Beta சோதனையில் இருந்த இந்த வசதி தற்போது அனைவருக்கும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இனி குழுவாக 1024 பேர் மற்றும் 32 கொண்ட குரூப் வீடியோ காலிங் பேசலாம். […]
மிதிவண்டியில் சவப்பெட்டியை கொண்டு செல்லும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இசபெல் ப்ளூமேரா. இவர் ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். அதாவது அந் நாட்டில் மிதிவண்டி சவப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாம். இதன் மூலம் சவப்பெட்டியை இனி கையில் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இந்த மிதிவண்டி சவப்பெட்டியில் சவத்தை வைத்துவிட்டு சைக்கிள் ஓட்டுவது போன்ற ஓட்டினால் சுலபமான முறையில் சவத்தை சுடுகாட்டுக்கு கொண்டு சேர்க்க முடியுமாம். மேலும் இந்த முறை டென்மார்க் மற்றும் ஸ்விட்சர்லாந்து […]
ஸ்வாட் ஏர்லிட் 004 ட்ரூ வயர்லெஸ் இயர் பட்ஸ் வெளியீட்டை அடுத்து புதியதாக நெக்பேண்ட் ரக இயர்போனை ஸ்வாட் நிறுவனமானது அறிமுகம் செய்துள்ளது. புது நெக்பேண்ட் இயர்போன் ஸ்வாட் நெக்கான் 101 என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.599 ஆகும். இந்த நெக்பேண்ட் இயர்போன் ஊதா, கறுப்பு ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்போன் ஹெச்டி ஸ்டீரியோ சவுண்ட் அளிக்கிறது. இவற்றில் உள்ள மென்மையான சிலிகான் காதுகளில் எந்த வித எரிச்சலையும் ஏற்படுத்தாது என்பது கவனிக்கத்தக்கது. […]
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.இது வெறும் மெசேஜ் செயலியாக மட்டுமல்லாமல் பல நிறுவனங்களில் whatsapp இல்லாமல் வேலையே முடங்கிவிடும் என்ற நிலை வந்து விட்டது.நமது முக்கியமான ஆவணங்களை வாட்ஸப்பில் எப்போது வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து பயன்படுத்தும் வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா?.அதாவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிலாக்கர் என்ற வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக மக்கள் தங்களின் ஆதார் கார்டு, பான் கார்டு, அடையாள அட்டை, மதிப்பெண் சான்றிதழ், […]
மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் டிலைட் எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மில்லி லிட்டர் பாக்கெட் களில் தயார் செய்யப்படுகிறது குளிர்சாதன பெட்டி வசதி இல்லாமல் 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் 500 மில்லி லிட்டர் […]
ஒரு காலக்கட்டத்தில் நோக்கியா இல்லாத கைகளே இல்லை என்று சொல்லலாம். மொபைல் போன்களில் நோக்கியா மிகப் பெரிய புரட்சி செய்தது என்றே கூறலாம். எனினும் காலப் போக்கில் ஆண்ட்ராய்டு போன் வருகையால் நோக்கியா பின்தங்கியது. இருப்பினும் தற்போது ஸ்மார்ட்போன் யுகத்தில் நோக்கியாவும் களமிறங்கி வருகிறது. அந்த அடிப்படையில் அந்நிறுவனம் சார்பாக G60 5Gஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்ற செப்டம்பர்மாதம் சர்வதேச அளவில் அறிமுகமான இந்த மொபைலின் முக்கியமான ஸ்பெஷாலிட்டி மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் வாயிலாக தயாரிக்கப்பட்டு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாராவில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனத்தின் 5g வசதி அடங்கிய பொது Wifi அறிமுகம் செய்துள்ளது.இந்திய பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். அன்று முதல் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியா முழுவதும் 5ஜி சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் 5G Wifi மூலம் 1 GB நொடி அளவில் முடிவில்லாத […]
ரிலையன்ஸ் jio இன்போகாம் லிமிடெட் இன்று JioTrue 5G நெட்வொர்க்கில் இயங்கும் Wi-Fi சேவைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கல்விநிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் வணிகமையங்கள் ஆகிய இடங்களில் இச்சேவை வழங்கப்படும். ராஜஸ்தானிலுள்ள நாத்து வாராவிலிருந்து JioTrue 5G வாயிலாக இயங்கக்கூடிய Wi-Fi இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. JIOவெல்கம் ஆஃபர் காலக்கட்டத்தில் பயனாளர்கள் இந்த புது Wi-Fi சேவையை இலவசமாகப் பெறுவர். மற்ற நெட்வொர்குகளைப் பயன்படுத்துவோரும் jio5ஜி இயங்கும் வைபையை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்த […]
உலக அளவில் பல கோடிக்கணக்கான மக்களால் சமூக வலைதளமான whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் கூடுதல் வாட்ஸ் அப் குழு, ஸ்க்ரீன் ஷாட் வசதி, ஒரு ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய புகைப்படம் மற்றும் வீடியோ, ஆவணங்களை பகிர்தல், வாட்ஸ் அப் ப்ரீமியம், ஆவணங்களை பகிர்தல் போன்ற வசதிகள் இடம்பெறுகிறது. அதன்பிறகு whatsapp பயனர்கள் ஒரு மெசேஜ் அனுப்பியவுடன் அதை எடிட் […]
ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு சமூக வலைதளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இந்த இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் ரீல்ஸ் உருவாக்குகிறார்கள். தற்போது இந்த செயலி புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் புதிய வசதிகள் மற்றும் மேம்பாட்டுகளை கொண்டு உள்ளது. இந்த புதிய அப்டேட் மேம்படுத்தப்பட்ட ரீமிக்ஸ் வசதி, புதிய template, ஆட்டோ வீடியோ post to real மாற்றும் வசதி, ரீல் பூஸ்ட் வசதி போன்றவை இடம்பெற்றுள்ளது. அதன்படி […]
ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் அரசு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இருந்தாலும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் விரைவாக தெரிவிப்பதற்கு வழிகள் எதுவும் இல்லை.இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு புதிய வசதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஓய்வூதியதாரர்கள் இனி முதன்மை கணக்கு அலுவலகத்தில் பென்ஷன் தொடர்பான குறைகளை தெரிவிக்க முடியும். அது மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களுக்கு இலவச டோல் ஃப்ரீ எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை 1800-2200-14 என்ற டோல் […]
வருகிற 24-ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது அடுத்த எலக்ட்ரிக் பைக்கை Ola நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்கூட்டர் 110 சிசி கொண்டது என்றும் டிஸ்ப்ளே மோடுகள் அனைத்தும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஒரு முறை பேட்டரியை ஜார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.1 வேரியண்ட் என்று இந்த பைக்குக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பைக்கில் நார்மல், […]