Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக இலவச நேரம் ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. திருப்பதி அலிப்பிரியல் பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம் போன்ற  இடங்களில் இலவச தரிசன நேரம் ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கபடுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்… அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை தமிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தீயணைப்பு துறை புதிய டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும், காவல்துறை பொது பிரிவு ஐஜியாக செந்தில்குமாரும், கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜியாக கயல்விழியும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக காவல்துறையின் தலைமை ஏடிஜிபி வெங்கட்ராமன் இனி கூடுதல் பொறுப்பாக […]

Categories
உலக செய்திகள்

சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்… இங்கிலாந்து அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ்  பிஎஃப் 7  தீவிரமடைந்து வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் சீனாவில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகளை விதிப்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசும் இந்த நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்து வருகிறது. இதன்படி சீனாவில் இருந்து வரும் பயணிகள் கொரோனா நெகடிவ்  சான்றிதழை கொண்டு வர வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் தற்காலிக செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவத்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக நியமிக்கப்பட்டவர்கள். இந்நிலையில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. ஆறு மாத காலத்திற்கு பணியமனம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. ரேஷன் அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன…? இதோ முழு விவரம்….!!!!!!

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையாக தலா ஒரு  கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி  9-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல்  பரிசினை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் நியாய விலை கடைகளுக்கு ஜனவரி 13-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் வட்டி விகிதம் உயர்வு…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் செல்வமகள் […]

Categories
மாநில செய்திகள்

தொலைதூர கல்வியில் சேர ஜனவரி 2 முதல் விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான யுஜிசி- யால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை,முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் மாணவர்கள் நேரிலும் அல்லது http://online.ideunom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. நாளை (ஜனவரி 1) முதல் எல்லாமே மாறப்போகுது….. புதிய மாற்றங்கள் என்னென்ன?…. இதோ முழு விவரம்…..!!!!

2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளன. ஜனவரி மாதம் முதல் அரசு மற்றும் பிற துறைகளில் உள்ள செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்துமே மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் அதிரடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்து இதில் பார்க்கலாம். கிரெடிட் கார்டு: கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் தங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் 2 நாள் இலவச தரிசன டிக்கெட் ரத்து…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் இன்றும் ஜனவரி 1ஆம் தேதியான நாளையும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 45 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கு மொத்தம் நாலு புள்ளி 50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதற்காக ஜனவரி 1ஆம் தேதி முதல் மதியம் 2 மணி முதல் திருப்பதியில் 9 இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க ….!!!!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை இன்று  டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி படித்தால் அவர்களுக்கு தமிழக தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து பட்டப் படிப்பிற்காக பத்தாயிரம் ரூபாய் மற்றும் டிப்ளமோ படிப்பிற்காக ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வருடத்திற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்று முதன்மை கல்வி அலுவலகங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கணினி தமிழ் விருது…. ரூ.2 லட்சம் பரிசு….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முதலமைச்சர் கணினி தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2021 -22 ஆம் ஆண்டிற்கான கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுபவருக்கு விருதுத் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. மிக குறைந்த விலையில் சிலிண்டர் வாங்க சூப்பர் சான்ஸ்…. இன்று ஒரு நாள் மட்டுமே……!!!!

பேடிஎம் மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் குறைந்த விலையில் சமையல் சிலிண்டர் வாங்கலாம். சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. தற்போது மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன்பதிவு செய்கின்றனர். அதில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பேடிஎம் ஆப்மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்தால் 500 ரூபாய் வரையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. பொங்கல் பரிசில் குளறுபடியா…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க..?. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் பிறகு பொங்கல் பரிசுக்கான டோக்கன் ஜனவரி 3-ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இதனையடுத்து பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ரேஷன் கடைகளில் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

“சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு”… முன்பதிவு தொடக்கம்… தேவசம்போர்டு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ள மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் போன்றவை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 1:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை […]

Categories
மாநில செய்திகள்

எம்.ஜி.ஆரின் கனவு திட்டம் பாழாகும் நிலை… “அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம்”… இ.பி.எஸ் பேச்சு…!!!!

பொங்கலுக்கு வேஷ்டி சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கலுக்கு வழங்க வேண்டிய விலையில்லா வேஷ்டி, சேலை நெய்யும் பணி முடங்கி போய் இருப்பதாக நெசவாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். ஜூலை […]

Categories
மாநில செய்திகள்

இக்னோ பல்கலையில் சேர ஜனவரி 31 வரை விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை தொலைநிலைப் படிப்புகளாக 220க்கும் மேற்பட்ட படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. தற்போது சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயம், பட்டம் மேற்படிப்புகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி எஸ்டி விண்ணப்பதாரர் கல்வி கட்டணம் பெறுவதற்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.ignou.ac.in.என்ற இணையதள பக்கத்தை அணுகவும். இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு…. 2023 ஜனவரி 6ஆம் தேதி இலக்கிய திருவிழா…. உடனே பதிவு செய்யுங்கள்….!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் தமிழறிவு வளர்க்கும் விதமாக திறனறிவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் புதிய முயற்சியாக வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொது […]

Categories
தேசிய செய்திகள்

விழா மேடையில் முதல் மந்திரி அதிரடி அறிவிப்பு… அதிர்ச்சியில் கலெக்டர்… பெரும் பரபரப்பு…!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரி மாவட்ட கலெக்டராக தருண் பட்நாகர் என்பவர் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, புகாருக்கு ஆளான தாசில்தார் சந்திப் சர்மாவையும், மாவட்ட கலெக்டர் தருண் பட்நாகரையும் […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களே…. கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால் கால் டாக்ஸி வசதி…. சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக இருக்கும் என்பதால் காவல்துறை பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது புத்தாண்டில் அளவுக்கு அதிகமாக போதையில் மிதக்கும் மது பிரியர்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்து நேரிடும். இதனால் போலீசாரின் அபராத நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதனைத் தவிர்க்க சென்னையில் நட்சத்திர விடுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் க்யூ ஆர் கோடு ஒட்டப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 27ஆம் தேதி அஞ்சல் குறைகேட்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அஞ்சல் சரகத்தின் சார்பாக வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் உள்ள முதன்மை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெறும். மக்கள் தங்கள் குறைகளை அஞ்சல் குறை கேட்டு மன்றத்தின் தலைவரான, தமிழ்நாடு சரக முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரியிடம் நேரடியாக அல்லது எம் விஜயலட்சுமி, உதவி இயக்குனர், முதன்மை தலைமை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல் -பிலாஸ்பூர் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து பிலாஸ்பூர் வரை செல்லும் வாராந்திர ரயில் தற்காலிகமாக நாக்பூர் சந்திப்பில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே செல்லும் வாராந்திர அதிவிரைவு ரயில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஜனவரி 8ஆம் தேதி முதல் நின்று செல்லும் எனவும் பிலாஸ்பூரில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாக்பூருக்கு மாலை 3.24 மணிக்கு சென்றடையும். பின்னர் மறு மார்க்கமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி…. 600 சிறப்பு பேருந்துகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்களின் விடுமுறையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் சென்றுள்ளனர். இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைவதால் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 6ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான மூன்றாம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கல்விச்சான்றிதழ் மற்றும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இங்கெல்லாம் புத்தாண்டு கொண்டாட தடை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகள், ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு வழிமுறைகள்…. யுஜிசி புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்கள் அமர்த்த வேண்டும். உடல் மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள தொடர்பு எண் கொண்ட கையேடு வழங்க வேண்டும்.  24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை […]

Categories
தேசிய செய்திகள்

CBSE மாணவர்கள் கவனத்திற்கு….. 10th, 12th தேர்வு தேதி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாவது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொது தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்க உள்ளன. வெவ்வேறு பாடங்களை எழுதும் மாணவர்களுக்கு ஒரே நாளில் தேர்வு வராத வண்ணம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜன. 1 முதல் கொரோனா பரிசோதனை கட்டாயம்…. மத்திய அரசு வெளியிட்ட புதிய அதிரடி உத்தரவு….!!!!

உலக அளவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உட்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய பி.எப்7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அதன்பிறகு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு  கொரோனா கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி […]

Categories
தேசிய செய்திகள்

யூ.ஜி.சி நெட் தேர்வு…. எப்போது நடைபெறும் தெரியுமா?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பல்கலைக்கழகம் மானியக் குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வு ஆகும். இவற்றில் தேர்ச்சி பெறுவதன் வாயிலாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அந்த அடிப்படையில் 2023 ஆம் வருடத்துக்கான நெட் தேர்வு வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் மமிடலா ஜகதீஷ் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
பல்சுவை

மக்களே இனி வீடு தேடி வரும்…. ஒரு மணி நேரத்திற்குள் பார்சல் டெலிவரி…. அசத்தும் அமேசான்…..!!!!

பொதுவாக ட்ரோன்கள் பல இடங்களில் அவசர மருந்துகளை வழங்குவதையும் வயல்களில் உரங்களை தெளிப்பதையும் பலரும் பார்த்திருப்போம். தற்போது பார்சல்களை வழங்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமேசான் நிறுவனம் சமீபத்தில் கலிபோர்னியாவின் லாக்போர்ட் மற்றும் டெக்ஸாஸின் கல்லூரி நிலையம் ஆகியவற்றில் ட்ரோன் டெலிவரி சேவைகளை அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பிறகு ஒரு மணி நேரத்திற்குள் வாடிக்கையாளரின் வீடுகளுக்கு பொருள்களை டெலிவரி செய்யும் நோக்கத்தில் அமேசான் இந்த சேவையை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ட்ரோன் மூலம் அதிகமான மக்கள் விரைவில் […]

Categories
தேசிய செய்திகள்

2023 ஜனவரி 1 முதல் RTPCR கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

யுஜிசி நெட் தேர்வுக்கு ஜனவரி 17 வரை விண்ணப்பிக்கலாம்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

தேசிய தேர்வு முகமையால் ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக மானிய குழுவின் நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அதன்படி வருகின்ற 2023 ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஜனவரி 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 10 -ஆம் தேதிக்குள்… “போட்டி தேர்வு பயிற்சியாளர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு”… வெளியான தகவல்…!!!!!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ. வீரராகவ் புதன்கிழமை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி, ஐ.பி.பி.எஸ், டி.ஆர்.பி, டி.என்.பி.எஸ்.சி டி.என்.யு.எஸ், ஆர்.பி போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பயிற்சி வகுப்புகள் மூலமாக பயிற்சி பெற்று […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: புதிய கட்டுப்பாடுகள் அமல்…. சற்றுமுன் தமிழகத்தில் வெளியான புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஜனவரி 8-ம் தேதி முதல்… மீண்டும் பாஸ்போர்ட் வழங்கும் பணி தொடக்கம்… வெளியான அறிவிப்பு…!!!!!

சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி எனும் பெயரில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு விட்டது. மேலும் வருகிற 8-ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. கடந்த 2020 -ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சீனாவில் கொரோனா தொற்றால் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி முதல் பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சீன […]

Categories
மாநில செய்திகள்

13 நாட்கள் காசி, கயாவுக்கு யாத்திரை ரயில்…. சுற்றுலா போக நீங்க ரெடியா?…. உடனே இதை பண்ணுங்க….!!!

தை அமாவாசை முன்னிட்டு காசி மற்றும் கயாவுக்கு யாத்திரையில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாரத் கெளரவு ரயில் திட்டம் தனியார் பங்களிப்புடன் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி தமிழகத்திலிருந்து காசி, கயா, காமாக்யா உள்ளிட்ட தளங்களை காணும் விதமாக யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரையில் இருந்து புறப்படும் யாத்திரையில் திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை,காட்பாடி மற்றும் சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படும். மேலும் உத்தரப்பிரதேச […]

Categories
மாநில செய்திகள்

தென்னை மர தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. காப்பீடு திட்டத்தில் சேர வேளாண்துறை அழைப்பு….!!!!

தமிழகத்தில் தென்னை மர தொழிலாளர்நலனை பாதுகாக்க தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தென்னை மரம் ஏறும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அல்லது உடல் ஊனமடைந்தால் அவரின் வாரிசுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம், தற்காலிக முழு உடல் ஊனத்திற்கு 18000 ரூபாய், உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் செலவுக்கு 3000 ரூபாய், இறுதி சடங்கு செலவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்…. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலரும் ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகின்றது. இந்த ஓய்வூதிய தொகைக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சதவீதம் வட்டியை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி இனி அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான […]

Categories
மாநில செய்திகள்

15 டிசைன்களில் சேலை, 5 டிசைன்கள் வேட்டி…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட அரசு தரப்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் எனவும் ஆயிரம் ரூபாய் ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாமல் இதனுடன் சேர்த்து கரும்பு வழங்கப்படும் எனவும் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு….. உடனே முந்துங்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை,நாகர்கோவில் மற்றும் கேரளாவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

குடிமை பணிக்கான மாதிரி ஆளுமை தேர்வு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க……!!!

அகில இந்திய குடிமை பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய குடிமை தேர்வு பயிற்சி மையத்தில் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஆளுமை தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் கலந்து கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியானவர்கள் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா

விஜயகாந்தை நேரில் சந்திக்க நீங்க ரெடியா?…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் இவர் வீட்டிலேயே உள்ளார். அதிகமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. இதனால் அவரின் ரசிகர்கள் அவரை சந்திக்க முடியாமல் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். தற்போது அவர்களுக்கு உற்சாகமூட்டும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விஜயகாந்தை புத்தாண்டு தினத்தில் தொண்டர்கள் சந்திக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?…. சிறப்பு ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்… வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் வேகமாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவைப் பொறுத்தவரை பிஎஃப் 7 ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வழங்கி உள்ளது. இந்நிலையில்  திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். திருப்பதி […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 15-ஆம் தேதி வரை… வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிப்பு…!!!!!!!

சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டட  மாமன்ற கூட்டரங்கில், சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், நிதி குழு தலைவர்கள், முதன்மை செயலாளர் சுகன்சிங் பேடி, மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு 2023 -ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜனவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வருகிற ஜனவரி 5-ஆம் தேதி இதன் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜனவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். அதன்படி ஜனவரி 5-ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 25-ஆம் தேதி வேலை நாள் எனவும் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு டோக்கன்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரும்பு […]

Categories
உலக செய்திகள்

தைவானில் கட்டாய ராணுவ சேவை ஒரு ஆண்டாக நீட்டிப்பு… ஜனவரி 1 முதல் அமல்…!!!!!!

தைவானில் கட்டாய ராணுவ சேவை ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக மாறியது. ஆனால் தற்போது சீனா தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி  தைவானை ஆக்கிரமிப்பதற்காக படைப்பலத்தை பயன்படுத்த தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சீன ராணுவம் அடிக்கடி தைவனை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதனால் சீனாவிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக தைவான் […]

Categories

Tech |