163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1,20,000 இடங்களில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான தரவரிசை பட்டியலை அந்தந்த கல்லூரிகள் தங்களுடைய இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் இருக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு, கிட்டதட்ட 4 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். […]
Tag: அறிவியல் கல்லூரி
சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை […]
தமிழகத்தில் 2022 – 23 கல்வியாண்டு முதல் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் குறைவாகவே உள்ளது. இதனால் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மேலும் சில அரசு கல்லூரிகளை உருவாக்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் 2022 – 23 கல்வியாண்டு முதல் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு […]
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை நிறைவு பெற்றதால் அக்டோபர் 4ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தொளிப் பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. […]
கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடித்தவுடன் ஒரே நேரத்தில் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். கலை, அறிவியல் கல்லூரிகளில் 735 வகுப்பறைகளை கட்டுவதற்கு ரூ. 150 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார். கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்டும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டவுடன் காலை, மாலை என நடக்கும் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 114 அரசுக் கல்லூரிகள் செயல்பட்டு […]