கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு அரசு மேனிலைப் பள்ளியில் 177-வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக டி.ஜி.பி சைலேந்திரபாபு பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு நிகழ்ச்சியில் பேசியதாவது, “உலகில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கல்வி எனும் ஆயுதத்தை மாணவர்கள் கையில் எடுக்க வேண்டும். நெல்சன் மண்டேலா கூறியது போன்று உலகிலேயே சிறந்த ஆயுதம் கல்வி தான். அதனை மாணவர்கள் கையில் எடுங்கள். அதன்பின் உங்களை வளர்த்த தாய்க்கு நன்றி சொல்லுங்கள். […]
Tag: அறிவுரை
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமையை செல்ல பிராணி நாய் ஒன்று சிறுமியின் தந்தை வருகையை கண்டு படிக்கும்படி அறிவுறுத்திய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. யோக் என்னும் பெயரில் பார்ட்னர்ஸ் இன் க்ரைம் என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் ஒரு வீட்டில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் முன் சிறுமி கையில் ரிமோட்டுடன் அமர்ந்தபடி இருக்கிறார். இந்நிலையில் கீழே தரையில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் […]
பெண்கள் ஆசைகளை புறந்தள்ளி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என ஆட்சியர் உரையாற்றியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இனிய குற்றங்களை தடுப்பது பற்றி விழிப்புணர்வு கூட்டம் டி.கே.எம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த குற்றங்கள் யார் மூலம் நடைபெறுகின்றது என்பது நமக்கு […]
மின்னல் வருவதை முன்கூட்டியே அறிய புதிய செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தொடர் மழை காலங்களில் குடிசை வீடுகள், இடியும் நிலையில் இருக்கும் வீடுகள், தாழ்வான பகுதிகளில் இருக்கும் இருக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். பழுதடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உள்ளிட்டவற்றை சரி செய்யும் போது வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக […]
தமிழகத்தில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகளின் தொடர் வருகைகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. அதன் பிறகு தற்போது பிளவுபட்டு கிடக்கும் அதிமுகவில் டெல்லி மேலிடத்தின் உத்தரவு தான் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெல்லியின் உத்தரவை பொருத்து தான் அதிமுக யார் வசம் செல்லும் என்பது தெரியவரும். இந்நிலையில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கு சில முக்கியமான […]
ஊழல் விழிப்புணர்வு வாரத்தையொட்டி சிவிசி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது, ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு பொறுப்பேற்க வைக்கும் அடிப்படையில் சமுதாயம் செயல்பட வேண்டும். இதற்குரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஊழல்வாதிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் எழுவதை பார்க்கிறோம். இதனிடையில் தங்களை நேர்மையானவர்கள் என அழைத்து கொள்பவர்கள், ஊழல்வாதிகளை சென்றுபார்ப்பதும், அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கும் வெட்கப்படுவது கிடையாது. இந்நிலை இந்திய சமுதாயத்திற்கு நல்லதல்ல. ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக பேசும் சிலபேர், அவர்களுக்கு விருது தரவேண்டும் […]
தென் இந்திய திரைப்படங்களிலும், இந்தி திரையுலகிலும் புகழ்பெற்ற கதாநாயகியாக விளங்கிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் வெற்றியடைந்த ஹெலன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து பாராட்டு பெற்றார். தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆன குட்லக் ஜெர்ரி படத்திலும் அவர் நடித்துள்ளார். அவரது தந்தை போனிகபூர் தமிழில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தயாரித்துள்ளார். […]
பிரபல நாட்டில் வாடிக்கையாளர்கள் வாங்கிய ஒரு உணவு பொருளை திரும்ப செலுத்த வேண்டும் என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் முழுவதும் புகையூட்டப்பட்ட சால்மன் மீன்கள் திரும்ப பெறப்படுகின்றது. அந்த உணவு வைக்கப்பட்டுள்ள உறையில் காலாவதி தேதி தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக அந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் carrefour பல்பொருள் அங்காடி தெரிவித்துள்ளது. மேலும் delpeyrat பிராண்ட் scottish smoked salmon என்னும் அந்த தயாரிப்பின் விவரங்கள் பின்வருமாறு. Barcode: 3067163649634 Batch number: F2570028 பயன்படுத்த உகந்த […]
தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் காபி வித் கரண் எனும் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திரைபிரபலங்களிடம் விவாதிக்ககூடிய நகைச்சுவை கலந்த இந்நிகழ்ச்சியை இயக்குனர், நடிகர் உட்பட பன்முக தன்மைகளை கொண்ட கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் வர இருக்கும் எபிசோடில் நடிகர் ஷாருக் கானின் மனைவி கவுரி கான் பங்கேற்ககூடிய நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் “பாலிவுட் திரை நட்சத்திரங்களின் மனைவிகளின் உயர்தர வாழ்க்கை” என்ற நிகழ்வில் ஒன்றாக நடித்துள்ள கவுரி […]
இந்தியாவில் அரசு கல்லூரிகளில் மருத்துவம் பயில்வதற்கு தொடக்கத்தில் அதிகமான மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட்டது. அதேபோன்று தனியார் கல்லூரிகளில் மருத்துவம் பயில அதிக செலவாகிறது. இந்நிலையில் மத்திய அரசு நீட் எனும் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இதற்கிடையில் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக சீனா,உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த சமயத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்று காரணமாக இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திருச்சி ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டிய ஒன்று. பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி. இல்லாதவருக்கு ஒரு கல்வி என்று இருக்கக் கூடாது. எல்லோருக்கும் சமத்துவமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். நீட் தேர்வு வேண்டாம் என சட்ட போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும், நீட் […]
மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்விற்கு மதுரை மாணவர்கள் லட்சத்தீவில் தேர்வு மையம் கொடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உயர்கல்வி செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30ஆம் தேதி 2022 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பது ஒரு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில். அதற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வந்திருக்கிறது. இந்த நிலையில் அவர் […]
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 2 டோஸ் தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு கடந்த ஜூலை 14ஆம் தேதி நிலவரப்படி 64, 89, 99, 721 பேர் தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் அவர்களின் 8% பேர்தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலியின் பேட்டிங் பார்ம் இப்போது அதிகளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் சென்ற 2019 ஆம் வருடம் வங்கதேச அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின்போது சதமடித்த விராட்கோலி, கடந்த 3 வருடங்களாகவே சதம் அடிக்காமல் திணறிவருகிறார். மேலும் அண்மையில் நடந்துமுடிந்த இங்கிலாந்து தொடர் அவருக்கு மறக்கக்கூடிய ஒரு தொடராக மாறி இருக்கிறது. இத்தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய அவர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த தொடர் முடிந்ததும் அவர் மீது […]
மாநில அரசுகள் கடன் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளின் கடன்சுமையும், நிதி பற்றாக்குறையையும் அதிகரிப்பதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாநில அரசுகள் இலவசங்கள் வழங்கும் போக்கை மாநில அரசுகள் அதிகரித்துக் கொண்டே இருப்பது கண்டனத்திற்குரியது என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் வங்கி கணக்கு முதல் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வைத்து பலரும் ஆன்லைன் வழியாக மோசடியில் ஈடுபடுகின்றனர். ஆதார் கார்டில் உள்ள 12 இலக்க ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அவசியமில்லாமல் […]
“மனைவியின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்” என்று நெட்டிசன்களுக்கு புனே போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கியுள்ளார். புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா சமீப காலத்தில் பொதுமக்களுடன் உரையாடுகின்ற வகையில் டுவிட்டரில் லவ்வித்சிபி புனேசிட்டி என்கின்ற ஹாஷ் டாக்கை ஆரம்பித்தார். இதன் மூலம் அவர் சமீபகாலத்தில் ட்விட்டரில் நெட்டிசன்கள் உடன் உரையாடி வந்துள்ளார். அப்போது அவர் பலரின் கேள்விகளுக்கு தகுந்த பதில்களை அளித்து உள்ளார். அதில் நெட்டிசன் ஒருவர் நான் மும்பையிலிருந்து பெங்களூருக்கு மாறலாம் என்று நினைக்கின்றேன். […]
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் முதலீட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கிவிட்டார். இந்நிலையில் தன் ட்விட்டர் பதிவின் மூலமாக முதலீட்டாளர்களின் நெடுநாள் கேள்விக்கு பதில் தெரிவித்திருக்கிறார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இது குறித்த கேள்வி என்னிடம் பலமுறை கேட்கப்படுகின்றன. Since I’ve been asked a lot: Buy stock in several companies that make products […]
கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களின் நடவடிக்கை மோசமாக இருப்பதாக பல இடங்களில் ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது இருந்த மதிப்பும், அச்சமும் சிறிதும் இல்லாத அளவுக்கு மாணவர்களின் நிலை உள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றன. அதன்தொடர்ச்சியாக சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]
சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இவர் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்சமயம் பல பட வாய்ப்புகளை கையில் வைத்திருப்பதால் சமந்தா பிஸியான நடிகையாக இருக்கிறார். அடுத்ததாக இவர் விஜய்சேதுபதியுடன் நடித்த காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சமந்தாவுடன் நயன்தாராவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் சமூக […]
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. அதில் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இதையடுத்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளும், அதன் பிரதிநிதிகள் ஆகிய நீங்களும் மக்களாட்சியின் மகத்துவமான நம்பிக்கை. நீங்கள் முறையாக செயல்பட்டால் மக்களாட்சியின் தத்துவம் மகத்தான வளர்ச்சி பெறும். எனவே இதை பதவியாக நினைக்காமல் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கு தாமதமாக திறக்கப்பட்டன. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளது. இருந்தாலும் பொது தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அதே சமயம் கால அவகாசம் குறைவாக இருப்பதால் நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்வு குறித்து மாணவர்கள் பயப்படவேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]
நாடு முழுவதும் தேர்வுக்கு தயாராகி வருகின்ற மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கும் விதமாக தேர்வை எதிர்கொள்வதில் ஏற்படும் அச்சம் நீங்க டெல்லியில் உள்ள டாகடோரா ஸ்டேடியத்தில் இருந்து பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அதில் அவர் பேசுகையில், தேர்வை எதிர் கொள்கின்ற மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வின்போது அச்ச சூழலில் இருந்து தங்களை விலகி இருக்க வேண்டும். நண்பர்களை காசை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முழு நம்பிக்கையுடன் நீங்கள் என்ன செய்யப் […]
சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி மருத்துவர்கள் கூறியுள்ளனர். கோடை காலம் நெருங்கி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த கடுமையான வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதாவது பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் இதன்மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு […]
மாணவர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட்டு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள் வைத்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டு உயிரை இழந்துள்ளனர். பெற்றோர் உங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களின் சொத்து. தற்கொலை எண்ணம் தோன்றினால் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இவரிடம் போன் வாயிலாக ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் 1098 மற்றும் தற்கொலை தடுப்பு உதவி மையத்தை 9152987821 என்ற […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்ட பள்ளிகள் கடந்த மாதம் மீண்டும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நேற்று முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா சூழலுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 1-12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் […]
நடிகர் சிம்பு விவாகரத்து வேண்டாமென்று தனுஷுக்கு அறிவுரை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு மற்றும் தனுஷுக்கு இடையில் கடும் போட்டி நிலவினாலும், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று தெரிவித்தனர். சமீபத்தில் நடிகர் தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்தது, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் மீண்டும் இருவரும் இணைய வேண்டும் என்று கூறிவருகிறார்கள். குடும்பத்தினரும் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]
பிக்பாஸ் சீசன் 5-ன் வெற்றியாளரான ராஜுவிற்கு ரசிகர்கள் 3 அறிவுரைகளை கூறியுள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிந்தது. இதில் போட்டியாளராக பங்கேற்ற சின்னத்திரை நடிகர் ராஜு வெற்றி பெற்று 50 லட்சம் பரிசுத் தொகையை வென்றார். இவர், திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில், ரசிகர்கள் அவருக்கு 3 அறிவுரைகள் கூறியிருக்கிறார்கள். அதாவது, பட […]
தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. அதனால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மற்ற அண்டை மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள்ளன. ,இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். […]
இந்தியாவில் 100 வருடங்களுக்கு முன் ஸ்பானிஷ் ப்ளு பரவலுக்கும் இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே அப்போது நடந்தது போலவே இப்போது ஒமைக்ரான் பரவல் மூலம் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உலக நாடு முழுவதும் 1928 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளு வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது. அதனைப் போலவே தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 கோடி பேரின் […]
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப்பை தவிர பிற மாநிலங்களில் தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. இதனால் பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கவும், மற்ற மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பாஜக வெற்றி பெற மோடி சில அறிவுரைகளை வழங்கினார். தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் வெற்றி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.இந்நிலையில் பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மின் கம்பிகளில் துணிகளை காய வைக்கக் கூடாது. மின் கம்பங்கள் மற்றும் வேலிகள் அருகில் நிற்பது […]
உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவு சந்தித்ததை தொடர்ந்து தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் நேரிலும். வெளியே உள்ள உறுப்பினர்கள் காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தொண்டர்கள் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் வெற்றி பெறுவோம் என்று மாநில பாஜக தலைவர்கள் நம்பிக்கையுடன் […]
வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது குறித்த செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சேலம் தாத்தையாம்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை வீடில்லா ஏழைகளுக்கு மனையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழகத்தில் வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான விரிவான திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும் […]
புதுச்சேரியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்றுவதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநி சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.. அந்த வகையில் ஊர்ஊராக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியாங்குப்பம் தொகுதி ஆர்.கே நகரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்தார். இதற்கு முன்னதாக […]
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் எது சிறந்த ரூட் என்ற போட்டி எழுந்தது. இதனால் மாணவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து பச்சையப்பன் சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். இந்த ஊர்வலத்தில் 200 பேர் கலந்து கொண்டனர். இந்த 200 பேர் மீதும் கொரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. யாரிடமும் அனுமதி வாங்காமல் […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் தற்போது நிரம்பி வருகின்றன. இதனால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பக்கத்தில் உள்ள ஆறு, குளம் ஏரிகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம் என்று காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளுக்கு குளிக்க செல்லும்போது ஆழம் தெரியாமலோ அல்லது விளையாடுவதனாலோ தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள நேரிடலாம் .அதனால் பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் குளித்த […]
ஐதராபாத்தில் உள்ள சர்தார் சல்லபாய் பட்டேல் தேசிய காவலர் அகாடமியில் பயிற்சி பெற்ற 144 இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் தேசத்தின் நலனை மனதில் வைத்து எடுக்க வேண்டும். நாடே முதன்மை, எப்போதும் முதன்மை என்பதன் அடிப்படையில் உங்களது நடவடிக்கைகள் இருக்க வேண்டும். சட்ட […]
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உரிய தகுதிகள் மற்றும் தகுந்த பயிற்சிகள் பெற்றுள்ள இந்துக்களில் அனைத்து ஜாதியினரையும் ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது . இதையடுத்து தமிழக அரசு கடந்த 2002ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையும், அரசு தலைமை வழக்கறிஞர்களின் கருத்துக்களையும் பரிந்துரை செய்து உரிய பயிற்சிகள் பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட ஜாதியினரை தவிர மற்றவர்கள் […]
நாம் தூங்குவதற்கு ஏற்ற காலம் என்பது இரவு மட்டும் தான். பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறிய பிறகு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும். அதுதான் நாம் தூங்குவதற்கு ஏற்ற பொழுது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும் என்பது முந்தைய காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வந்த ஒரு பழக்கம். ஆனால் எப்படி தூங்க வேண்டும் என்பது குறித்து சித்தர்கள் கூறுகின்றனர். அதைப்பற்றி இதில் பார்ப்போம். கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு […]
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டமன்ற அரங்கில் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்பட அமைச்சர்களும், உதயநிதி ஸ்டாலின் […]
ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 383 பேர் மீது வழக்கு பதிந்து, 86 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை உள்ள ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]
சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் அலை வேகமாக பரவத் வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பகல் 10 மணி வரை மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்படவும், மதியம் 2 மணி வரை வங்கிகள் செயல்படவும், அனுமதி அளித்துள்ளது. அதன் […]
பிரபல நடிகை அனுஷ்கா கொரோனா குறித்த அறிவுரைகளை கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளையும் அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும் பல திரை பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் கொரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு வீடியோ மற்றும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அனுஷ்கா கொரோனாவை எதிர்கொள்ள சில அறிவுரைகளை கூறியுள்ளார். […]
காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு நடிகர் அஜித் அறிவுரை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதேபோல் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. நடிகர் யோகிபாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் பற்றி கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “நடிகர் அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் நடித்துள்ளேன். தற்போது நான்காவது முறையாக அவருடன் இணைந்து வலிமை […]
கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாமல், கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று அரவிந்த கெர்ஜிவால் வலியுறுத்தியுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பி விட்டோம் என்று எண்ணுகையில் கொரோனாவின் 2-வது அலை இரண்டு மடங்காக அதிகரித்து மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. கொரோனாவின் முதல் அலையிலிருந்து சிக்கி தப்பிவந்த டெல்லி, இப்போது இரண்டாவது அலையில் சிக்கிக் கொண்டது. கொரோனாவின் பரவலை குறைக்க அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு […]
பிச்சைக்காரர்களை போல ஜீன்ஸ் அணியாதீர்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் அறிவுரை சொல்லியிருக்கிறார். பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வருகிறார்கள் என்று உத்ரகாண்ட் மாநில முதல்-மந்திரி வீரத்தின் தெரிவித்துள்ளார். மேலும் நான் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவரும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருந்தார். இப்படிப்பட்டவரால் எப்படி சமூகத்திற்கு நல்லது செய்ய முடியும் என்று கூறியுள்ளார். அவரது இந்த செய்தியை கேட்ட பல நடிகைகளும், இளம் […]
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மலையாள திரையுலகில் மிகவும் பிரபல நடிகரான மோகன்லால் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமணையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் […]
மாணவர்கள் அனைவரும் தேர்வை குறித்து கவலை கொள்ளாமல் சிரித்த முகத்துடன் சென்ற தேர்வு எழுத வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் போது திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பது நல்லது அல்ல என சென்னை ஐகோர்ட் அறிவுரை கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வர இருப்பதால், திரையரங்குகளில் 100 சதவீதம் […]