தமிழ்நாடு அரசு ஆவணங்கள் பதிவு செய்தல், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், நிறுவனங்கள், சீட்டு நிதி நிறுவனங்கள், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் ஆகிய பணிகளை செய்திட பதிவுத்துறை மூலம் மாநிலம் முழுவதும் பதிவு அலுவலகங்கள் அமைத்துள்ளது. தமிழக அரசு பதிவுத் துறை அலுவலகங்கள் மண்டல அலுவலகங்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதி மாதம் மார்ச் என்பதால் அடுத்த 2022- 2023ம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட […]
Tag: அலுவலகங்கள்
நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தில் ஆவணங்கள் பதிவு அதிகம் இருக்கும் என்பதால், சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்களில் தமிழ்நாடு பதிவுச்சட்ட விதி 4 “சிறப்பு அவசரநிலை” அடிப்படையில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமான ரூபாய் 200 மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணப்பதிவிற்கான டோக்கன் அனைத்து வேலை நாட்களிலும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களின் ஆவணப் பதிவை உரிய […]
இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் சில கட்டுப்பாடுகள் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. மேலும் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படும் என்று ஜனவரி 31-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு இந்த நடைமுறையை வருகின்ற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்த மாத தொடக்கத்தில் […]
சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில அலுவலகங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் பணிபுரியும் 39 வயது பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தான் பணியாற்றும் இடத்தில் தனக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் மதிய உணவின் போது அனைவருடனும் அமர்ந்து சாப்பிட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வேலை பார்க்கும் போது முழு நேரமும் FFP2 மாஸ்க் அணிந்தே வேலை பார்க்க வேண்டும் என்று நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் […]
நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை பொருத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மே மாதம் முதல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50% ஊழியர்களுடன் இயங்கி வந்தது. ஆனால் தற்போது அங்கு கொரோனா […]
கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகளால் பால்தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 300 வருமான வரித்துறை அதிகாரிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். அதாவது இயேசு அழைக்கிறார் அறக்கட்டளை, கோவையின் காருண்யா பல்கலைக்கழக நிறுவனரான பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஜெபக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகம் போன்ற அனைத்து பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் கோவையில் இருக்கும் பால் தினகரனின் வீடு மற்றும் அவரின் அலுவலகம் உட்பட […]
கொரோனா காலத்தில் தமிழகத்தில் உள்ள அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், கற்பிணிப் பெண்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். எச்சில் துப்புவது முற்றிலும் தடை செய்ய வேண்டும். பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் […]
அலுவலகங்களுக்கான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. […]