கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை உக்கடம் பகுதியில் 23.10.2022 அன்று நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு விசாரணை பற்றியும் பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றியும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை பற்றியும் கோவை […]
Tag: அலுவலர்
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற துறை தேர்வான சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு பாகம் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் முன் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனால் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை கூறி பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கின்றார். அந்த சுற்றறிக்கையில் […]
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமானோருக்கு கைரேகை பதிவாகாத காரணத்தினால் பொருட்கள் வழங்க முடியாது என ரேஷன் ஊழியர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆதாரில் கைரேகை பதிவு செய்ய சேவை மையங்களுக்கு படையெடுக்கின்றன. சிலசமயங்களில் அங்கும் கைரேகை பதிவாகாத காரணத்தினால் உணவுப் பொருட்கள் வழங்கல் அலுவலரிடம் மனு செய்து பெற்று வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் அலுவலகம் செல்லும் போதும் உடனடியாக வழங்காமல் அலைய […]
வேல்ஸ் நாட்டில் அரசு அலுவலகத்தில் பாதுகாவலராக இருக்கும் நபர் கண்காணிப்பு கேமராவில் ஒரு காட்சியை பார்த்து அதிர்ந்து போய்விட்டார். பிரிட்டனில் Turkey Al-Turkey என்ற 26 வயது இளைஞரும், பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவியும் டேட்டிங் சென்றுள்ளார்கள். அப்போது Turkey, அந்தப் பெண் அருந்திய குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து, சுய நினைவை இழக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சமயத்தில், அரசு அலுவலகத்தில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் அலுவலராக பணியாற்றிய Richard Arnold, கேமராவில் அதனை […]
ராணிப்பேட்டையில் இருமல், சளி இருக்கும் நபர்களை அவர்களுடைய வீட்டிற்கே சென்று மேற்பார்வையிட வேண்டும் என்று கண்காணிப்புகான அலுவலர் உத்தரவிட்டார். ராணிப்பேட்டையில் அமைந்திருக்கும் கலெக்டர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் கொரோனா பரவலை தடுப்பதற்கு பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. இதற்கு மாவட்டத்தினுடைய கலெக்டரான கிரான்ஸ்டன் முன்னிலை வகித்துள்ளார். மேலும் மாவட்டத்தினுடைய கண்காணிப்பு அலுவலரான லட்சுமி தலைமை தாங்கினார். மேலும் அவர் கூறியதாவது, சளி, இருமல்,காய்ச்சலிருக்கும் நபர்களை தினந்தோறும் அவர்களுடைய வீட்டிற்கே சென்று […]