நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இக்கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதையடுத்து கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தை வெளியிட விஷாலுக்கு தடை […]
Tag: அவகாசம்
2006 மற்றும் 2007ல் தேர்வு செய்யப்பட்ட 4500 தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பட்டியலை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு, சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு அளித்திருந்தது. இதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அவற்றை சரி செய்ய ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு […]
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு […]
2021-22 நிதி ஆண்டுக்கான வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றோடு (ஜூலை 31) முடிந்தது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தது . இனி தாக்கல் செய்பவர்கள் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும். இன்று முதல் ரூ.5 லட்சத்துக்கு கீழ் ஆண்டு […]
பொறியியல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 27ஆம் தேதி வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்சி மாணவர்களுக்கு இடம் இல்லை என எந்த தனியார் கல்லூரியும் கூறக்கூடாது எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காலை 10 மணியளவில் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என […]
CBSE தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்று நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 18ஆம் தேதி திறக்கப்படும் CBSE மாணவர்களுக்கு இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அதனால் CBSE தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்றும் மாணவர்களுக்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும் […]
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட 24 உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஜூன் 18 வரை தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஜூலை 4 ம் தேதி வரை நீட்டித்து தேர்வு முகமை இயக்கம் அறிவித்திருந்தது. இதனால் நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் […]
இந்தியா சாா்பாக ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான காலவரம்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா சாா்பாக ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக்டன் கோதுமை மற்றும் உயிா்காக்கும் மருந்துகளை அட்டாரி-வாகா எல்லையைக் கடந்து பாகிஸ்தான் வழியே அனுப்பிவைக்க கடந்த வருடம் நவம்பா்மாதம் அந்நாடு அனுமதி வழங்கி இருந்தது. அதாவது அசாதாரண சூழ்நிலை என்ற அடிப்படையில் இந்த மனிதாபிமான உதவிக்கு அந்த நாடு ஒப்புதல் வழங்கி இருந்தது. இந்த […]
சென்னை குடிநீர் வாரியமானது செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இருப்பதாவது குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை (இன்று) மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்த வசதியாக இன்று 200 வார்டில் உள்ள பணிமனை வசூல் மையங்கள், இரவு 8:00 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நுார்வோர் வரி மற்றும் கட்டணத்தை செலுத்தவேண்டி கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் […]
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் அரசு வேலைக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதேபோல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரு சில பணிக்கு பதிவு செய்துள்ளவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதனடிப்படையில் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் போன்றவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இருப்பினும் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் […]
2021-22 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முன்தினம் ( பிப்.14 ) முதல் திறக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கல்லூரி விடுதிகளில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மருத்துவக்கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கல்லூரி விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தவும், நூலகத்தில் கூட்டம் கூடவும் அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து மாணவர்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டும் […]
தமிழகத்தில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான அவகாசம் பிப்ரவரி 16-ல் இருந்து பிப்ரவரி 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதிக்குள் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வந்து தங்களுடைய சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹஜ் பயணம் செய்யும் பயணிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரை செல்வதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஹஜ் விண்ணப்பத்தை www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ஹஜ் செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம். இன்று கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம். இதுவரை 4.32 லட்சம் ரேஷன் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்றுடன் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் 3 நாட்களில் வாங்கிக் கொள்ளலாம். இதுவரை 4.32 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் […]
தமிழகத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கல்லூரி படிப்பை தொடர முடியாதவர்களுக்கு தேவையான கல்வி உதவி தொகையை பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவி திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 2021-2022 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பில் அல்லது இளங்கலை பட்டப்படிப்பில் கட்டாயமாக 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முதலாம் ஆண்டு பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9ஆம் ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது . அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பணியில் ஈடுபட்டுவருகின்றன. மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் தொடர்பாக எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதி மன்றத்தில் தேர்தலை விரைவாக நடத்தவதற்கு மனு தாக்கல் செய்யப்பட்டியிருந்தது. உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் காலம் வேண்டும் என்று மனு தாக்கல் […]
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம், ஆர்சி போன்றவற்றைப் புதுப்பிக்கும் கால அவகாசத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸை கருத்தில்கொண்டு ஓட்டுனர் உரிமம், ஆர் சி,பிட்ன்ஸ் சர்டிபிகேட் போன்ற வாகன ஆவணங்களை புதுப்பிக்கத் தேதியான கால அளவை கடந்த பிப்ரவரி மாதம் வரை தமிழக அரசு நீட்டித்து வந்தது. அதிலிருந்து தற்போது வரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டு இதன் காலக்கெடு கடந்த மாதம் 30 ஆம் தேதி […]
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன. அவை நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 11 ஆம் தேதி தேர்வு நடைபெறும் […]
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன. அவை நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 11 ஆம் தேதி தேர்வு நடைபெறும் […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என 150 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்தது. இந்நிலையில் ஆறுமுகத்திற்கு மேலும் […]
12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்து வதற்கு முன்பு மாணவர்கள் படிக்க நிச்சயம் போதிய அவகாசம் வழங்கப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு முன்பு படிப்பதற்கு நிச்சயம் கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறினார். தமிழகம் […]
வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வருமான வரி என்பது ஒருவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட அளவு பணத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் இந்த வரி ஒவ்வொரு வயதினருக்கும் தகுந்தாற்போல் மாறுபடும். இந்த கொரோனா காலத்தில் பலரும் தங்கள் வேலையை இழந்து உள்ள காரணத்தினால், மத்திய அரசு வரி செலுத்துவதற்கான காலத்தை நீட்டிட்டு இருந்தது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை வருமான வரி செலுத்தலாம் […]
பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது. இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் […]
நாடு முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருமானவரி தொடர்பாக நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் இழுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க 2020 மார்ச்சில் “விவத் சேவ் விஸ்வாஸ்” என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவத் தொடங்கியதால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டனர். அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கொரோனா காரணமாக இந்தத் திட்டத்திற்கான அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் […]
தமிழகத்தில் ஜனவரி 18 முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி மூன்றாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 18ஆம் தேதி முதல் ஜனவரி […]
பத்து வருடங்களுக்கு முன்பு உள்ள மாணவர்களும் தன்னாட்சிக் கல்லூரிகளில் அரியர் தேர்வுக்கான பணங்களை செலுத்தி வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு “ஆல் பாஸ்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியர் எழுதும் மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தாலே ஆல் பாஸ் செய்வதாக அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையை கருத்தில் கொண்டு தற்போது தன்னாட்சி பொறியியல் […]
ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கால நீட்டிப்பு கேட்டு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 8வது முறையாக கால நீட்டிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 7வது முறையாக வழங்கப்பட்ட கால நீட்டிப்பு 24ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என […]
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் மின்கட்டணம் கட்ட அடுத்த மாதம் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 15ம் தேதி வரை தாமதக்கட்டணம், மறு மின் இணைப்பு கட்டணம் இல்லாமல் மின் நுகர்வோர் செலுத்தலாம் என […]
வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து சில தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு 70 நாட்களை கடந்தும் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனிடையே தனி நபர்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் […]
தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி வரை தாமத கட்டணம், மறுமின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் […]