ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை ரத்து செய்ய கோரி மும்பையை சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் இன்றைய தினம் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, […]
Tag: அவசர சட்டம்
5 வருட சட்டப்படிப்புகளுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சர் அறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குரிய சேர்க்கை ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார். தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1,731 இடங்கள் உள்ளது. இந்நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார்1,300 இடங்கள் நிரம்பியுள்ளது. மீதமுள்ள இடங்கள் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும். […]
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் இயற்ற இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான பரிந்துரையை அரசுக்கு இன்னும் சற்று நேரத்தில் சமர்ப்பிக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு. பரிந்துரையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி தடை விதிக்க அவசர சட்டம் இயற்றப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆன்லைன் ரம்மியால் நம்மில் பலர் பணத்தை இழந்தது மட்டுமின்றி விலைமதிப்பற்ற உயிரையும் மாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும் […]
தமிழக அரசானது ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மென்பொருள் பொறியாளர் ஆவார். இவர் லட்சக்கணக்கில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது மிகவும் வேதனை அளிப்பதாகவும், மேலும் எனது ஆறுதலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தின் அப்பாவி இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடர்ந்து […]
இந்திய அதிகாரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு அனுமதியளிப்பது தொடர்பான மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய கப்பற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் கடந்த 2016 ஆம் ஆண்டில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இவரை கைது செய்தனர். இதனையடுத்து இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை அளிப்பதற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியா, பாகிஸ்தானிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் […]
தொற்றுநோய்கள் (திருத்த) கட்டளைச் சட்டத்தை அவரச சட்டமாக அறிவிக்க ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 2020ம் ஆண்டின் படி இந்த திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்களின் உயிரைக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது தாக்குதல் […]