உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 57 நாடுகளில் இந்த நோய் பாதிப்பு உண்டாகி உள்ளது.குரங்கு அம்மை நோய் சமூக பரவல் எதிரொலியாக அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக குரங்கு அம்மை நோய் தொற்று பரவ தொடர்பாக ஆலோசனை நடத்த உலக சுகாதார நிறுவனம் அவசர கூட்டத்தை கூட்டியது. அந்தக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குரங்கு […]
Tag: அவசர நிலை
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவசர நிலை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரானா வைரசால் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியுள்ள நிலையில் 9.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் […]
கனடாவில் லாரி டிரைவர்கள் போராட்டத்தால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலை பிரகடனத்தை பிறப்பித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கனடா நாட்டிலுள்ள லாரி டிரைவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி “சுதந்திர அணிவகுப்பு” என்கிற பெயரில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் கனடா நாட்டு அரசுக்கு பெரும் […]
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் உருவாகியிருப்பதால் பல்வேறு நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் பல நகரங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதில், முக்கியமாக பென்சில்வேனியா, வாஷிங்டன் மாகாணங்களில் பலமான காற்று வீசுவதோடு தொடர்ந்து பனி கொட்டிய வண்ணம் இருக்கிறது. இதில் மரங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகள் பனியில் மூழ்கியது போல் காணப்படுகிறது. இது மட்டுமல்லாமல், மேம்பாலங்கள், சாலைகளிலும் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கிறது. இதனால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கடலோரப் பகுதிகளில் […]
ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, நேற்று தான் அதிகமான தொற்று எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ராபர்ட் கோச் என்ற தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று 37,120 நபர்களுக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் அதிகமான தொற்று எண்ணிக்கையாக பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்று மட்டும் 39,676 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் இருக்கும் பல்வேறு […]
மியான்மர் நாட்டில் ஓர் ஆண்டுக்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் அந்த நாட்டினுடைய முக்கிய ஜனநாயக தலைவர்கள் மட்டுமல்லாமல் பிரதமர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த தகவலை அந்த கட்சியினுடைய செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது அந்த நாட்டின் ராணுவ ஆட்சி தொடங்கியிருப்பதை […]
சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கடும் கொரோனவைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளதால் சீன அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருவாகியுள்ள உருமாறிய […]
ஜப்பானில் பிரகடனப்படுத்தப்பட்ட நாடு தழுவிய சுகாதார அவசர நிலை நீக்கப்படுவதாக பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். ஜப்பானில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறைத்து வருவதை அடுத்து அவசர நிலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் காரணமாக ஜப்பானில் கடந்த மாதம் 7ம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் நோய்த்தொற்றின் தீவிரம் கணிசமான அளவு குறையத் துவங்கியவுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து […]