குரங்கம்மை வைரஸ் தொற்று பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்து வந்த நிலையில் தற்போது குரங்கமை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு உலகளாவிய நெருக்கடியை அறிவித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் 6000-க்கும் அதிகமானோர் குரங்கம்மை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதற்கும் அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குரங்கமை […]
Tag: அவசர நிலை பிரகடனம்
உலக நாடுகளில் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்கா பிரிட்டன், இந்தியா, போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி, ஆப்பிரிக்கா போன்ற 75 நாடுகளில் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அதிக அளவில் பரவுவது மிகுந்த கவலை அளிப்பதாக உலக சுகாதார மையத்தை சேர்ந்த மருத்துவர் பூனம் கெத்ரபால் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவுவதால் உலக சுகாதார மையம் அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் குரங்கம்மை […]
இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருப்பதால் பிரதமர் அவசரநிலை பிரகடனம் அறிவித்துள்ளார். இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாக அதிபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பி சென்றதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கொழும்பு நகரில் பிரதமர் அலுவலகம் இருக்கும் பகுதியில் அரசாங்கத்தை எதிர்த்து இன்றும் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, இதை கட்டுப்படுத்த 100க்கும் அதிகமான ராணுவ […]
முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை […]
எல் சால்வடார் நாட்டில் போதை பொருள் கடத்தல், பல கொலைகார கும்பல்கள் மிரட்டல் உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் படுகொலை சம்பவங்களும் அதிகரித்து காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் அதிபர் நயீப் புகெலெ நாட்டின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும், திட்டமிட்ட குற்ற செயல்களை ஒழிப்பேன் என்றும் உறுதியளித்திருந்தார். இருப்பினும் 2020-ல் கொரோனா காலகட்டத்தில் 50-க்கும் கூடுதலான மக்கள் 3 நாட்களில் கொல்லப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து 24/7 மணி […]
அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே இந்த மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெற்கு மாகாணமான லூசியானாவில் புயல் மற்றும் சூறாவளியின் காரணமாக தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் குயின்ஸ் ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் இருந்து மக்கள் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டு […]
அமெரிக்காவில் புயல் பாதிப்பு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் எல்சா புயல் நெருங்கி வருவதால் அந்நாட்டுப் கவர்னர் Ron DeSantis அவசரநிலைப் பிரகடனப்படுத்தி உள்ளார். இந்த எச்சா புயல் கரையைக் கடக்கும் போது கடும் மழை மற்றும் புயல் பாதிப்பு ஏற்படும் என்பதால் புளோரிடாவில் உள்ள 15 மாவட்டங்களுக்கு அவசரநிலையை அறிவித்துள்ளார். அத்துடன் மாகாணத்தின் தெற்குப் பகுதிகளில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அப்பகுதி மக்கள் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாகாணத்தின் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எப்போது மின்சாரம் மீண்டும் கிடைக்கும் என்பது தெரியவில்லை. மேலும் இந்த பனிப்பொழிவால் தடுப்பூசி செலுத்தும் பணிகளும், தடுப்பூசி சேமித்து வைக்கும் வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பனி பொழிவை அடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த […]