கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளிடம் தொடர்ந்து அடாவடியாக நடந்து வருவதாக சில புகார்கள் வந்தது. இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்த தம்பதி ஒருவர், அந்த அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது தம்பதியிடம் ரத்தத்தை கழிவறை சென்று சுத்தம் செய்து வந்தால் தான் சிகிச்சையளிப்பேன் என்று அரசு மருத்துவமனை ஊழியர் கூறியுள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். அக்காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. […]
Tag: அவலநிலை
விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை அனைத்து தரப்பு விளையாட்டு வீரர்களும் ஒரே மாதிரி தங்கள் வாழ்க்கையை நகர்த்துவது இல்லை. அதிலும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்களின் இலக்கை அடைவதற்கு செய்யக்கூடிய முயற்சி சற்று கடினமானதுதான். இதுகுறித்து மாற்றுத்திறனாளி விளையாட்டு சங்கத்தின் அலுவலகப் பொறுப்பாளர் கூறியதாவது, “எங்களின் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு சில அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கூட கடினமானதாக இருக்கிறது. தற்போது அவர்களுக்கு ‘ஷூ பேங்க்’ அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். […]
நாடு முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் திணிக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள […]