Categories
தேசிய செய்திகள்

“இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது” …. Hospital முதல் வீடு வரை….. வைரலாக பரவும் பரிதாப புகைப்படம்….!!!!!

உயிரிழந்த மகனின் சடலத்தை விவசாயி தோலில் சுமந்து செல்லும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள திகுவபுத்தூர் கிராமத்தில் விவசாயியான செஞ்சய்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3-ஆம்  வகுப்பு படிக்கும் பசவையா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை செஞ்சய்யா  தனது குடும்பத்தினருடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பசவையாவை பாம்பு கடித்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செஞ்சய்யா தனது மகனை  […]

Categories
தேசிய செய்திகள்

பலமுறை அழைத்தும் வராத ஆம்புலன்ஸ்…. பறிபோன உயிர்…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜலாலாபாத் பகுதியில் வசித்து வரும் தினேஷ் (45),இவரின் தாய்க்கு நேற்று அதிகாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரின் தந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ்காக பலமுறை தொலைபேசி மூலமாக முயற்சித்துள்ளார். இருந்தாலும் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை என்பதால் வீட்டில் இருந்த தள்ளு வண்டியில் தாயை அமர வைத்த மகன் அழைத்துச் சென்றார். நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு வண்டியிலேயே வைத்து அழைத்துச் சென்று ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களை பகுதிநேர கூலி தொழிலாளிகளாக்கிய அரசு பள்ளி….. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ….!!!!

பீகாரில் அரசு பள்ளி மாணவர்களை பகுதி நேரமாக கூலி வேலை செய்ய கட்டாயப்படுத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், ஜெகனாபாத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி மாணவர்களை பாதி நேரம் மண் தோண்டுதல், செங்கற்கள் எடுத்து வருதல், மரம் வெட்டுதல் போன்ற வேலைகளை செய்ய வைப்பதாக குற்றசாட்டு தொடர்ந்து எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகள் கூலி […]

Categories
மாநில செய்திகள்

அட கடவுளே இது என்ன கொடுமை!…. இப்படிப்பட்ட கட்டிடத்திலயா பசங்க படிக்கிறாங்க?…. இந்த அவலத்தை நீங்களே பாருங்க….!!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்குள்ள குளிப்பாட்டி வன குடியிருப்பில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்விக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. அதில் ஆரம்ப பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு பள்ளி கட்டிடம் வலுவிழந்து வகுப்பறையில் உள்ளே கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையில் தகனம்…. ராங்கியம் கிராமத்தில் நீடித்து வரும் அவலம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகிலுள்ள ராங்கியம் விடுதி கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசித்து வருபவர்களுக்கு ராங்கியம் விடுதி ஊராட்சியில் மயானம் இல்லை. அதனால் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் உள்ள குளத்தை பல ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த மயானத்திற்கு செல்ல பாதை வசதி ஏதும் இல்லாததால் பிணத்தை வயல்வெளி வழியாக தூக்கி அவலம் நிடித்து வருகிறது. மேலும் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை […]

Categories
மாநில செய்திகள்

‘பயிர் தான் விவசாயிகளின் உயிர்’ … முதல்வர் என்ன செய்கிறார்?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழையால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளில் நெல் முளைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் படாமல் குவியல் குவியலாக நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. தொடர் மழையால் நெல் அனைத்தும் முளைத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” விளைந்தும் விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் குப்பை வண்டியில் கொரோனா நோயாளிகள் ..!!

ஆந்திர மாநிலம் விஜய நகர மாவட்டத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளை குப்பை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அவலம் நேர்ந்துள்ளது. நெல்லிமர்ல மண்டலம் சராஜ்ஷாப்பு பேட்டா நகரத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் குப்பை ஏற்றிச் செல்லும் நகராட்சி வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். கொரோனாவில் இறந்தவர்களை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற ஆந்திர அரசு தற்போது கொரோனா நோயாளிகளையும் ஏற்றிச் செல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த மூதாட்டி உயிரிழப்பு …!!

திருத்தணியில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்தபோது உயிரிழந்த மூதாட்டியின் உடலை கொரோனா அச்சத்தால் யாரும் அகற்ற முன்வராததால் 5 மணி நேரம் வீட்டு வாசலில் உடல் கிடந்த அவலம் நிகழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை அடுத்து அவரது வீட்டை நகராட்சி ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீடாக கருதி யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்பு சுவர் வைத்து அடைத்தனர். […]

Categories

Tech |