கோழியை துரத்திச் சென்ற மாணவி தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் அடுத்துள்ள ராஜபாளையத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகள் பவதாரணி. இவர் அவிநாசியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் நேற்று கோழியை பிடிக்க முயன்றபோது கோழி சிக்காமல் ஓடி இருக்கின்றது. கோழியை துரத்திக்கொண்டே பவதாரணியும் பின்னாலேயே ஓடி உள்ளார். அந்தக் கோழி அங்குள்ள 40 அடி உள்ள தனியார் […]
Tag: அவிநாசி
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்கு, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறுவது குறித்த பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த பேனரில் முக்கிய அறிவிப்பு என்று குறிப்பிட்டு மணிகாரர் அம்மாவிடம் சென்று யாரும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம் (விலை பட்டியல் எனக் குறிப்பிட்டு பட்டா சிட்டா, இறப்புச் சான்றிதழ், அடங்கல், வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவதற்கு (ரூபாய் 72,000 எனக் குறிப்பிட்டு), திருமண […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சலுக்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி அருகே உள்ள பி.எஸ். சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். தனியார் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றிவரும் இவருக்கு பிரதீபா என்ற மனைவியும் 3 மகன்களும் இருந்தனர். இவரது மூத்த மகன் சஞ்சய் அவினாசி அடுத்த நாதம்பள்ளி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பருத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான அளவிற்கு பருத்தி உற்பத்தி செய்து கொண்டு வருகிறோம். ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. அரசு இதற்கு மானியம் வழங்க வேண்டும் இல்லையெனில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விவசாயிகளுக்கு போதிய விலை […]
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் முழுவதும் மாநில அரசின் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அத்திக்கடவு அவிநாசி நீரேற்றும் திட்ட பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ” ரூ. 1,652 கோடி மதிப்பில் அத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என […]