பிரிட்டன் இளவரசி Michael of Kent (76) அரிய வகை ரத்த கட்டிகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசி Michael of Kent, இந்த வருடத்தின் தொடக்கத்தில் அஸ்ட்ராஜனகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரத்த கட்டிகள் ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதமாக தன் குடியிருப்பிலேயே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இளவரசி தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் திடீரென்று உடல் நலம் பாதிப்படைந்த தால் உடனடியாக மருத்துவரை அணுகியுள்ளார்கள். தற்போது […]
Tag: அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி
பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி, இந்தியாவிற்கு தடுப்பூசி வழங்குவதற்காக நாட்டு தலைவர்களை வலியுறுத்தவுள்ளனர். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி இருவரும் Global Canada citizen அமைப்பு மற்றும் Selena Gomez என்ற பிரபலம் சேர்ந்து நடத்தும் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிலிருந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரை அனைத்து தலைவர்களிடமும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசிகளை பிற நாடுகளுடன், […]
ஸ்வீடனில் நாள்தோறும் கொரோனா தடுப்பூசிகள் நூற்றுக்கணக்கில் வீணாக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் மிக மூத்த மருத்துவர்களில் ஒருவர் Johan Styrud. இவர் ஸ்வீடனில் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் வீணாக்கப்படுவதாக ஒத்துக்கொண்டார். அதாவது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டான்டரிட் மருத்துவமனையின் ஆலோசகரான Johan Styrud பங்கேற்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் தடுப்பூசியால் ஏற்பட்ட விளைவுகளினால் மக்கள் பயத்தில், இறுதி நேரத்தில் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்துகொண்டதை ரத்து செய்து விட்டார்கள். மேலும் ஸ்வீடனில் 65 வயதிற்கு […]
டென்மார்க்கில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக அரசிடம் இழப்பீடு கோரியுள்ளனர். டென்மார்க்கில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சுமார் 37 நபர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் இழப்பீட்டு தொகை கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதில் அதிகமான வழக்குகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியினால் ஏற்பட்ட விளைவுகள் தான். இது தொடர்பாக சுமார் 29 பேர் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்திருக்கின்றனர். மேலும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 8 நபர்கள் இழப்பீடு கேட்டுள்ளனர். அதாவது டென்மார்க்கில் தடுப்பூசி செலுத்தி […]
பிரிட்டனில் 30 வயதிற்கும் குறைவானவர்களுக்கு ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என்று அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பிரிட்டனில் 70 ற்கும் அதிகமான நபர்கள் மற்றும் ஐரோப்பாவில் 120க்கும் அதிகமான நபர்களுக்கு ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திய பிறகு இரத்த உறைவு பிரச்சனைகள் போன்ற பக்க விளைவுகளால் பாதிப்படைந்துள்ளனர். இதனால் 30 வயதிற்கும் அதிகமாகவுள்ள நபர்களுக்கு வேறு நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த பிரிட்டன் அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் ஐரோப்பாவின் மருந்துகள் சீரமைப்பு நிறுவனமான European Medicines Ajency (EMA) பாதிப்படைந்தவர்களை […]
கனடா பாதுகாப்பை கருத்தில்கொண்டு அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை 55 வயதிற்கும் குறைவானவர்களுக்கு செலுத்த இடைக்கால தடை விதித்துள்ளது. கனடாவில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சினைகள் ஏற்பட்டதால் தேசிய ஆலோசனை குழுவான NACI தற்காலிகமாக தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அனுமதியளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட் கிழமையில் கனடாவில் உள்ள மாகாணங்கள் அஸ்ட்ராஜெனகாவிற்கு தற்காலிக தடை அறிவித்துள்ளன. இதுகுறித்து NACI தெரிவித்துள்ளதாவது, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி ஐரோப்பிய நாடுகளில் செலுத்தப்பட்ட போது அரிய வகையான இரத்த உறைவினால் சிலர் […]