அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாவட்ட செயலாளராக இருந்த கோவை செல்வராஜ் கடந்த 3-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் பாரதி மற்றும் மாநகர் மாவட்ட பொருளாளர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் கலந்து பேசி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணைந்து […]
Tag: அ.தி.மு.க.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகரில் அ.தி.மு.க சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குசாவடியில் நடந்த தகராறு காரணமாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.கவை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை […]
வேட்பாளர்களுக்கான செலவு வரம்பை அதிகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்கள் செலவு செய்வதற்கான வரம்பை இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் 10 சதவிகிதம் உயர்த்த பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் செலவு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் குழு ஒன்றை அமைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் பரிந்துரைகளின்படி தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற […]
காங்கிரஸ் கட்சியில் பொது செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளர் சஞ்சய்தத் செய்தியாளர்களிடம் அ.தி.மு.க. அரசை விமர்சித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளரான சஞ்சய்தத் செய்தியாளர்களிடம் கூறும் போது, தேர்தல் பரப்புரைக்காக பிப்ரவரி 27ஆம் தேதி ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ள இருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். அப்போது பல இடங்களில் தேர்தலுக்கான பிரச்சாரங்களையும் ராகுல்காந்தி மேற்கொள்ள இருக்கிறார் என அவர் கூறியுள்ளார் இதனையடுத்து பாண்டிச்சேரியின் முதலமைச்சரான நாராயணசாமியின் […]
அதிமுகவில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவில் ஆதிதிராவிடர்களுக்கு பிரதிநிதித்துவம் அழைக்காதது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு குறித்து விமர்சித்துள்ள அவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவின் வாக்கு வங்கியில் மிக முக்கியமான சமூகமாக ஆதிதிராவிடர் சமூகம் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் வழிகாட்டுதல் குழுவில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாதது ஏன் என்று ரவிக்குமார் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவிற்கு […]