சாலைகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் அகற்றியுள்ளனர். நெல்லையில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை டவுன் வடக்கு ராஜ வீதி, கீழ ராஜவீதி சாலையில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களையும் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளனர். இந்த பணிகள் மாநகர நகர்நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
Tag: ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நீர் ஆதாரத்தை மேம்படுத்த ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் மற்றும் 33 அணைக்கட்டுகள் உள்ளன. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும், அதேபோல் ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தலின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வேப்பந்தட்டை […]
சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அதிகாரிகள் அகற்றிவிட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள சர்வீஸ் சாலையில் உள்ள இடங்களை ஆக்கிரமித்து சிலர் கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் பால தங்கதுரை தலைமையில் அதிகாரிகள் எண்ணூர் விரைவு சாலை சுங்க சாவடி முதல் எல்லை அம்மன் கோவில் தெரு வரை உள்ள பகுதிகளை ஆய்வு செய்துள்ளனர். […]
அம்பையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம், முக்கூடல் வழியாக வரும் வாகனங்கள் அம்பை வடக்கு ரத வீதி வழியாக பேருந்து நிலையம் சென்று திரும்பும்படியாக ஒரு வழி பாதை உள்ளது. அந்த பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துறை கோட்ட […]
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த கட்டிடங்கள், கடைகள் போன்றவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சாந்தி உத்தரவின் படி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பிரதான சாலை மற்றும் திருவள்ளுவர் சாலை ஓரங்களில் இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து காந்தி பஜார் பகுதி முழுவதும் நகராட்சி ஆணையாளர் தலைமையில் சுகாதார துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் […]