ஊட்டியில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து நடத்தி வந்த கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் கிராமப்புறங்களில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சாலையில் இறங்கி நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கின்றது. இதுபோலவே அனுமதிக்க படாத இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போருக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின்றது. இது குறித்து பல […]
Tag: ஆக்கிரமிப்பு அகற்றம்
வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. வேலூர் மாநகராட்சியின் பிரதான சாலைகளில் ஒன்றாக ஆற்காடு சாலை இருக்கின்றது. இங்கே நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக தனியார் மருத்துவமனையின் அருகே இருக்கும் பகுதிகளில் நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகளில் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை காணப்பட்டது. மேலும் டீக்கடை, ஹோட்டல்கள், மருந்து கடைக்கு வரும் நபர்கள் தங்களின் இருச்சக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி […]
பெரியகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம், பெரியகுளம் பகுதியில் இருக்கும் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்துறையினர் ஆய்வு செய்தபோது நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானது. இதனை அடுத்து தாசில்தார் வெள்ளைசாமி தலைமையில் மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வருவாய் ஆய்வாளர்கள் பொதுப்பணி துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.
தேனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் தூர்வாரும் பணியானது தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டியிலிருந்து நேரு சிலை சிக்னல் வரை செல்லும் சாலையில் இருபுறமும் மழைநீர் வடிக்கால் அமைந்துள்ள நிலையில் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருக்கின்றது. இதனால் வடிக்கால் பகுதியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து இருக்கின்றது. இதன் விளைவாக மழை காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வாடிக்கையாளர் திட்டமிட்டதை தொடர்ந்து பொம்மையகவுண்டன்பட்டி […]
ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் இயந்திர ஆபரேட்டர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட நீர் நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில நாட்களாக 4 1/2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் 66 கடைகளை அகற்றும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று 3 நவீன […]
நீர்நிலையை ஆக்கிரமித்து இருக்கும் வீடுகளை அகற்றுவதாக அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தற்பொழுது தமிழகத்தில் நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் குமரி மாவட்டத்தில் இருக்கும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன்படி நாகர்கோவில் புத்தேரி குளத்தின் கரையில் மேல கலுங்கடி பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றது. இந்த வீடுகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் கட்டியிருப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு மூன்று நோட்டீஸ் […]
சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி பேருந்து நிலையம், அடிவாரம் ரோடு ஆகிய இடங்களில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனைதொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்துநிலையம், அடிவாரம் ரோடு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் திண்டுக்கல் சாலை, புதுதாராபுரம் […]
திருத்தணி முருகன் கோவிலில் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றியதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் வருகின்ற 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா நடைபெற இருப்பதால் ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை […]
திருவையாறு அருகே உள்ள கோவில் குளத்தின் கரையை ஆக்கிரமித்திருந்த குடியிருப்புகளை அதிகாரிகள் அகற்றினார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அடுத்திருக்கும் கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ளது. இந்த கோவில் குளத்தின் கரையை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி இருந்த நிலையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தஞ்சை ஆட்சியர் தினேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை நேற்று […]
ஆராஞ்சி ஏரியை ஆக்கிரமித்து 40 ஏக்கரில் நெல், கரும்பு சாகுபடிசெய்ததை அகற்றும் பணியானது நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் தாலுக்கா ஆராஞ்சி ஊராட்சியில் இருக்கும் ஏரி 97 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியானது ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அந்த ஏரியின் 40 ஏக்கர் பரப்பளவை அங்கு சுற்றி இருக்கும் மக்கள் ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி செய்து வந்தார்கள். இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் கீழ்பெண்ணாத்தூர் துணை […]