திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் சீனிவாசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால் சீனிவாசன் மீண்டும் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுப்பதற்கு அதிகாரிகள் […]
Tag: ஆக்கிரமிப்பு நிலங்கள்
சந்தையின் முன்பு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் காய்கறி சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு பின்னால் இருக்கும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சில வியாபாரிகள் கொட்டகை அமைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் சக்திவேல், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபால் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது கோபமடைந்த வியாபாரிகள் எம்.எல்.ஏ. பி. ஏ […]
தமிழகத்தில் ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு தண்ணீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பு கிடையாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தது.அதில் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டிட ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு ஆணையிட்டது. இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு, தலைமையில் மறுபடியும் விசாரணைக்கு வந்தபோது, பொதுப்பணித் துறை, […]