மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகிக்கு ஊழல் போன்ற பல வழக்குகளின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 7 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதி அன்று ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு, நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கியமான தலைவர்களை வீட்டு சிறையில் அடைத்தனர். ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டது, ஊழல் போன்ற பல வழக்குகளின் […]
Tag: ஆங் சான் சூகி
மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சுகிக்கு தேர்தல் முறை கேடு வழக்கில் மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி வெற்றியடைந்து ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் அந்நாட்டின் ராணுவம் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி, ஆட்சியை கைப்பற்றி விட்டது. மேலும் நாட்டின் தலைவரான ஆங் சான் சுகியை வீட்டு சிறையில் அடைத்தது. இது […]
மியான்மர் நாட்டில் சென்ற வருடம் பிப்ரவரி 1ம் தேதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அத்துடன் அந்நாட்டின் தலைவர் ஆங்சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக ஆங்சாங் சூகிக்கு 10 வருடங்களுக்கு மேல் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஆங்சான் சூகிக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஆங்சான் சூகி(77) நோபல் பரிசு பெற்றவர் […]
மியான்மர் நாட்டின் ஆங் சாங் சூகியினுடைய நெருங்கிய நண்பருக்கு 21 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று ராணுவம் ஆட்சியை கைப்பற்றி விட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் முக்கிய தலைவர்களை சிறை பிடித்தது. ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டது, ஊழல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஆங் சாங் சூகிக்கு பத்து வருடங்களுக்கு மேல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் […]
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் மியான்மர் ராணுவம், அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி,அதிபர் வின் மைண்ட் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் அந்நாட்டு […]
மியான்மரில் ராணுவ ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் உள்நாட்டுப்போர் வர வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் விவரிக்கின்றனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். இந்நாட்டு ராணுவத்தினர் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்து வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர் . […]
மியான்மர் நாட்டின் தலைவரான ஆங் சான் சூகி கட்சியில் உள்ள முன்னாள் எம்.பி ஷெயார்தாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத தடுப்புச் சட்ட அடிப்படையில் ஷெயார்தாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இருக்கும் இவர் தீவிரவாத குற்றங்களை செய்ததாக கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் கைதானார். மேலும் இவர் நடத்திய இசைக்குழுவில், ராணுவ ஆட்சியை எதிர்த்து பல பாடல்களை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. […]
ஆங் சான் சூகியின் வீட்டை ராணுவவீரர்கள் சோதனையிட்டதில், கடத்தல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம், முதல் தேதியன்று நாட்டின் ராணுவம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றி விட்டது. அதன்பிறகு நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்களை சிறை வைத்தது. அன்றிலிருந்து, ஆங் சான் சூகி வீட்டு சிறையில் தான் வைக்கப்பட்டிருக்கிறார். அப்போது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக வாங்கியதோடு, கொரோனா […]
மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி க்கு எதிரான புதிய வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதை நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை அன்று ஒத்திவைத்தது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மியான்மரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ராணுவம் கலைத்து ஆட்சியை ஆக்கிரமித்தது. இதில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக சொல்லி இந்த நடவடிக்கையை ராணுவம் செய்தது. இதனையடுத்து அரசின் தலைமை ஆலோசகரும், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவருமான ஆங் சான் சூகி மீது […]
மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பாங்காக்: மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது, வன்முறையை தூண்டியது போன்ற குற்றப் பிரிவுகளின் கீழ் ஆங் சான் சூகிக்கு எதிராக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில் வழக்கில் புதிய சாட்சியத்திட்டம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் […]
மியான்மர் நாட்டின் பெண் தலைவரான, ஆங்சான் சூகி மீதிருக்கும் ஊழல் வழக்குகள் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது. மியான்மரில், கடந்த வருட கடைசியில் நடைபெற்ற தேர்தலில், பெரும்பான்மையை பெற்று ஆட்சிக்கு வந்த ஆங்சான் சூகியின் அரசு, அந்நாட்டு இராணுவத்தால், கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று கவிழ்க்கப்பட்டது. அதன்பின்பு, ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினார்கள். எனவே, இராணுவ ஆட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை, இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில், தற்போது […]
மியான்மரில் போராட்டக்காரர்கள் அரசாங்க வலைதளங்களை ஹாக் செய்ததால் ராணுவம் இணைய சேவையை முடக்கியுள்ளது. மியான்மரில் தேர்தல் முறைகேடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மியான்மர் ராணுவம் செய்த இந்த செயலால் ஜனநாயக ஆட்சி கவிழ்ந்தது. இதனை எதிர்த்து கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் இரண்டு வாரங்களாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து தலைவர் […]
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடு மியான்மர் அரசு தலைவரான ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மியான்மரில் தேர்தல் முறைகேடு தொடர்பாக அரசுத்தலைவர் ஆங் சான் சூகி உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசு தலைவர்களை ராணுவம் சிறை பிடித்துள்ளது . ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் நாட்டின் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பு […]