சென்னை மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி ஆர்.சி உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சுபஸ்ரீ என்ற மாணவி 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றார். இதனையடுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவியை மாவட்ட ஆட்சியர் மோகன், […]
Tag: ஆசிரியர்கள் பாராட்டு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இளையோர் கோகோ போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இந்நிலையில் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், குமாரபாளையம் எஸ்டீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இறுதி போட்டியில் கலந்துகொண்டு விளையாடியுள்ளனர். இந்த போட்டியில் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். இந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், […]
அகில இந்திய சப்-ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மாணவியை அனைவரும் பாராட்டுகின்றனர். அகில இந்திய சப்-ஜூனியர் பாட்மிண்டன் போட்டி தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வண்ணாரப்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா கலந்து கொண்டார். இந்நிலையில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் ரேஷிகா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல் மற்றும் பிற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் த.பி சொக்கலால் மேல்நிலை பள்ளியில் கீழப்பாவூர் வட்டார பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சுரண்டை ஸ்ரீ ஜெயந்திரா பள்ளி மாணவிகள் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதன் மூலம் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிக்கு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தென்காசியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் ஸ்ரீஜெயந்திரா […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும், 17 வயதிற்குட்பட்ட பிரிவிலும் ஓசூர் காமராஜர் காலணியில் இருக்கும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதன் மூலம் மாணவிகள் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள மாநில […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடகத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 24 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் ஜூனியர் பிரிவு போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். இந்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் […]