நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்னதாக இருந்த டெல்டா வகை வைரஸை விட ஒமைக்ரான் வகை வைரஸ் அதிக வேகமாக பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர். இதன் காரணமாக மத்திய அரசானது அனைத்து மாநில மற்றும் யூனியன் அரசுகளையும் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பல மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. கேரளாவை பொறுத்தவரையிலும் […]
Tag: ஆசிரியர்கள்
தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வந்ததை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அரசின் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தீவிரமடைந்து வருவதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை வரும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பின் கல்லூரிகளுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, விடுமுறை நீட்டித்து தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் 10, 11 […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]
த்மிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் 10, 11, […]
கர்நாடக மாநிலத்தில்கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் பணிபுரியும் விருந்தினர் விரிவுரையாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வழங்கக் கோரி மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து ஆய்வு நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. தற்போது அந்த குழு ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை விருந்தினர் விரிவுரையாளர்களுக்கு UGC நிர்ணயித்த தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.13,000, UGC நிர்ணயித்த தகுதி […]
தமிழகத்தில் கடந்த 2019ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பதவி உயர்வு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் சில பேர் இடமாறுதல் செய்யப்பட்டனர், பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. அத்துடன் குற்ற வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையில் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்ட காலங்கள், […]
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வழி இடமாறுதல் கவுன்சிலிங் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர் நரேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆசிரியர் பயிற்றுனரில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆசிரியர்கள் பலர் நீதிமன்ற தீர்ப்பானை பெற்றுள்ளனர். இந்த ஆசிரியர்கள் மட்டும் இடமாறுதலில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணி வரை பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது. […]
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டிற்கான விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வரும் ஆசிரியர்கள் இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி […]
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டிற்கான விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வரும் ஆசிரியர்கள் வரும் 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது தேர்வு எழுதும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கற்றல் அடைவு வலுவூட்டல் பயிற்சி இன்று முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. கற்றல் […]
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கைது, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கட்டாய மாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாய்ந்தது. அதனால் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இச்சூழலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசுப் […]
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 4 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குரிய உத்தரவுகளை பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்து வருகிறது. இதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஓராண்டுக்கான பணியை முடித்து இருந்தால் இடம் மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். இத்தகைய விருப்ப இடம் மாறுதல் கவுன்சிலிங் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்விச் சூழல் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோன பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஆசிரியர் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை நடைபெற இருந்த ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்/ காப்பாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மீண்டும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக ஆதி திராவிட நலத்துறை அறிவித்துள்ளது. கொரோனா எதிரொலியாக ஜனவரி 10, 11, 12 போன்ற தேதிகளில் நடைபெற இருந்த […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜனவரி 19 முதல் பிப்ரவரி 18 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் என 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பொதுமாறுதல் […]
நாடு முழுவதிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடத்தில் ஆர்வமூட்டும் வகையில் அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் பயிற்சிகளை அளித்து வருகிறது. அந்த அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையிலும் கடந்த ஆண்டு 12 மாவட்டங்களில் நடைபெற்ற அறிவியல் பயிற்சி வகுப்புகள் இந்த வருடம் 18 மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து மாவட்ட வாரியாக இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு […]
தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு, நடப்பு கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங் தேதி பற்றிய கால அட்டவணை, கடந்தவாரம் அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு இடமாறுதல் கேட்கும் ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை கடந்த 31-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பதிவுக்கு இன்று […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் பொதுமாறுதல் மற்றும் விருப்ப மாறுதலுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜனவரி மாதம் அரசு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பில் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
ஒடிசா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த சம்பள உயர்வு ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அவர் அறிவித்து இருந்தார். அதன்படி வழக்கமாக உள்ள இளநிலை ஆசிரியர்களுக்கான சம்பளம் 9 ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 13 […]
ஒடிசா மாநிலத்தில் முதல் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இளம் ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்களின் ஊதியத்தை ஒடிசா மாநில அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இளம் ஆசிரியர்களுக்கு ரூ.9200 சம்பளம் […]
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு வருடமும் விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வி […]
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஜனவரி 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் வழியாக நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவு செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் முன்னுரிமைப்பட்டியல் ஜனவரி 10-ஆம் தேதி வெளியிடப்படும். மேலும் அந்தப் பட்டியலில் திருத்தம் இருப்பின் […]
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது. பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார்நிலை மற்றும் நிர்வாக வசதியைப் பொருத்து இந்த அறிவிப்பு மாறுதலுக்கு உட்பட்டது. இதுதொடர்பான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று காரணமாக பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இது தொடர்பாக நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பாடவேளைகள் உள்ளன. தற்போது பள்ளி மாணவர்களின் புத்தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் நூலக பாடவேளை கட்டாயம் உருவாக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தினசரி நாளிதழ் வாசிக்கவும் மாணவர்களுக்கு […]
கல்வி ஆண்டின் மத்தியில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சில ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் மத்தியில் பணி நிறைவு பெறுவார்கள். இந்நிலையில் பணிநிறைவு பெறுபவர்களுக்கு மறு நியமனம் கோரி ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இதனை தமிழக அரசு நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி குறிப்பிட்ட கல்வி ஆண்டு முடியும் […]
பள்ளியில் வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு பொருட்கள் மற்றும் இருப்பு உள்ள முட்டைகளையும் தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். […]
இந்தியாவின் தலைநகர் டில்லியில் அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டில்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் மக்களுக்கு நலன் அளிக்கும் அடிப்படையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டில்லி அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் சிறப்பு வருகை மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு […]
2021 – 22ம் ஆண்டிற்கான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிடமாறுதல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மாறுதல் ஒளிவுமறைவு எதுவும் இல்லாமல் 2021- 22 ஆம் கல்வியாண்டு முதல் நடத்துவதற்கு கொள்கை வகுக்கப்படும் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த கல்வியாண்டிற்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் செய்யப்படாத தேர்வர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் தனிப்பிரிவு பதில் ஒன்றை அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு TN TRB தேர்வு […]
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு அமைச்சர்களிடம் துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றது. அதற்கு உரிய பதிலை மத்திய அரசு கொடுத்து வருகிறது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பாக மதிமுக எம்.பி வைகோ கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதாவது மத்திய பல்கலைக்கழகங்களில் 6,535 முழு நேர ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. 20 ஐஐஎம்-களில் 403,23 ஐஐடி-களில் 3,876 […]
ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் ரகுபதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பள்ளிகளில் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தற்போதைய சூழலில் பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. […]
கோவையைச் சேர்ந்த ஜோசப் இருதயராஜ் என்பவர் 1984ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்தார். அதன்பிறகு 1991இல் பட்டப்படிப்பும், 93இல் பிஎட் பட்டமும் பெற்றார். பின்னர் கோவை ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இதில்தான் சிக்கல் ஆரம்பித்தது. ஜோசப் இருதயராஜின் கல்வித்தகுதி வரிசையாக இல்லை என்று கூறி ஆசிரியர் நியமனத்தை பள்ளிக்கல்வித்துறை நிராகரித்தது. இதனை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]
அரசு பள்ளிக்கூடத்தில் வில்லுப்பாட்டு உள்ளிட்ட புதிய முற்சியின் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 520 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டது. கடந்த 1 2/2 வருடங்களாக வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று […]
சென்னை கோடம்பாக்கம் கணபதி அரசு பள்ளியில் வைத்து தனியார் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 174 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதவித்தொகை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜெய் கருணாநிதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர், பாலியல் வன்முறைகள் குறித்து மாணவிகள் துணிந்து புகார் அளிக்க வேண்டும். பள்ளிகளில் கண் […]
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் வெளியாகும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி அவற்றை உரிய முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். போதுமான இடம் இல்லாமல் இயங்கி வரும் 746 தனியார் பள்ளிகள் நிபுணர் குழு அறிவுரையின்படி தொடர்ந்து […]
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு பிறகு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். இது நடப்பு மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, புதுப்பணியிடங்கள் கோரவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளதால் […]
கேரளா மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் நேற்றைய நிலவரப்படி 1707 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் இதுவரை தடுப்பூசியை போடவில்லை என்று தெரியவருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி கூறியது, அரசு பள்ளிகளில் 2,00,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும் […]
புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 6-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகளை திறக்க முடிவு செய்தபோது மழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது தினமும் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடக்கும் என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் நேரடி வகுப்புகளில் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல், […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அனைத்து பள்ளிகளும் படிப்படியாக திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருமாறிய கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வகையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகின் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அதனால் அனைத்து நாடுகளிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பள்ளி […]
தமிழகத்தில் அரசுத் துறைகளின் கீழ் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகவும் சீனியாரிட்டி அடிப்படையில் சிலர் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு பணிநியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு முதலில் தற்காலிக பணி நியமனம் மட்டுமே வழங்கப்படும். […]
மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு தற்போது தான் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன.. இந்த நிலையில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கக்கூடிய அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்த […]
கரூர் வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற விட்டு மாலை வீடு திரும்பிய மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மாணவியின் வீட்டில் சோதனையிட்டபோது மாணவி எழுதி வைத்திருந்த உருக்கமான […]
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள பொன்மலை பகுதி மக்களிடம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்த விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும். அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் சிறுபான்மையான பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்த நிலுவையில் உள்ள வழக்குகள் அதற்கு முடிவு எடுக்க முடியவில்லை. […]
தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கான பட்டியலை விரைந்து அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மொத்தமுள்ள வருடங்களை கணக்கீட்டு பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற அனைத்து வகை […]
தமிழகத்தில் கொரோணா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் இந்த வாரம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே பாடத்திட்டங்களை குறைந்துள்ள போதிலும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மீதமிருக்கும் நாட்களில் பாடம் நடத்தி […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி ஆகிய எட்டு பாடங்களை பகுதி நேரமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பகுதி […]
தமிழகம் முழுவதும் நேற்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக பாடங்கள் நடத்துவதை ஆசிரியர்கள் கைவிட வேண்டும் என்றும் மாணவர்கள் மகிழ்ச்சியாக,ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளில் ஆய்வு செய்ததில் மாணவர்கள் உற்சாகமாக இருப்பதை காண முடிந்தது. அதனைப்போலவே திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை ஊராட்சி […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,பணியாளர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் தங்கள் சொத்து விபரம் மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழல் கண்காணிப்பு துறை அறிவுறுத்தலின்படி சொத்து விவரங்களில் தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசுப் பணியாளா்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு ஏற்றவாறு மாதந்தோறும் போக்குவரத்துப்படி என தனியாக ஒரு தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி ஊழியர்களின் தனிப்பட்ட விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை பொறுத்து அதில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், பள்ளிகளில் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, முழு ஆண்டு தேர்வு மற்றும் ஏனைய அரசு விடுமுறை நாட்களுக்கு போக்குவரத்து படியில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படாத நிலையில் […]
ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை சிறப்பு நிகழ்வாக 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு, அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் வரை வெளியாகும் நேரடி பிரியமான அறிவிப்புகளுக்கு மட்டும் இந்த வயது வரம்பு பொருந்தும். பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 40லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.