இரண்டு ஆண்டுகள் பிஎஸ்சி கணிதம், மூன்றாம் ஆண்டு பி.ஏ வரலாறு படித்தவர்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனத்திற்கு தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு பட்டம் பெறுவதற்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளதா ? பல்கலைக்கழகம் வியாபார நோக்கில் செயல்படக் கூடாது எனக்கூறி ஆசிரியர் பணி நியமனம் வழங்கிய தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Tag: ஆசிரியர்கள்
டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் குழுமம் NCTE அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு 7 ஆண்டு மட்டுமே சான்றிதழ் செல்லும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஒருமுறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லும் என விதி திருத்தப்பட்டது. இந்த புதிய மாற்றத்தால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச் சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர். நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற வலியுறுத்தி, ‘நீட் தேர்வுக் கொடுமையால் மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக் கண்டித்து’ பணியிலிருந்து விலகிய ஆசிரியர் சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிகளின் நிர்வாகத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசை நிறுத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் […]
பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இரண்டு அரசு ஆசிரியைகள் மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்த சமூக இடைவெளியுடன் பாடங்கள் கற்பித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூட குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சிகள் மூலம் கல்வி வீடியோ பாடல்களை ஒளிபரப்பவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே புளியம்பேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து பெற்றோர் ஒதுக்கித் தரும் இடத்தில், […]
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, 2013ல் நடந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி தருவதைப் பற்றி ஆய்வு செய்த பிறகே முடிவு எடுக்கப்படும். தற்போதைய சூழலில் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு ஆய்வு நடத்தி தான் முடிவு எடுக்குமா ? அதுவும் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளார்கள் என்றால் தேர்வில் வெற்றி […]
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்ந்தியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெரும் வயதை 58லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருந்தது. கொரோனா நோய் பரவல் தடுப்பு பணி, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை, வாழ்வாதாரத்தை இழந்தோருக்கு நிவாரண உதவி அளிப்பது என, அரசுக்கு செலவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு போன்றவற்றை […]
வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.மேலும் பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு […]
12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 202 ஆக அதிகரித்துள்ளது.தனிமனித இடைவெளியுடன் விடைத்தாள்கள் திருத்தும் வகையில் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுதேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியதால் எஞ்சிய ஒரு தேர்வும், விடைத்தாள் திருத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 12ம் வகுப்புக்கான எஞ்சிய தேர்வு எழுதும் […]
அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21ம் தேதிக்குள் தற்போது பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” வெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 21ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் இருப்பிடத்தை உறுதி செய்யவேண்டும் என்பவை […]
50 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள ஆசிரியர்களை கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. பல ஆசிரியர்கள் தன்னார்வமாக பணியாற்ற விருப்பம் தெரிவிப்பதால் மருத்துவம் அல்லாத பணிகளுக்கு பயன்படுத்தலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று வரை, தமிழகத்தில் கொரோனாவால் […]