தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் 29 வயது பெண் ஒருவர் காவல்துறையினரின் உதவியுடன் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.திருப்பத்தூரில் ஏரிய அவர் பிரசவத்திற்காக அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டார். காத்திருப்பு அறையில் அவருக்கு பிரசவம் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு மருத்துவர்களை அழைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவர்கள் வருவதற்கு முன்பே பெண் காவலரின் கண்காணிப்பில் குழந்தை பிறந்தது. தாயும் […]
Tag: ஆச்சரியம்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மிக உயரமான கட்டிடத்தில் ஏறி சாதனை படைத்து பலரையும் ஆச்சரியத்தில் வாழ்த்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலாய்ன் ராபர்ட் என்ற நபர் பல கட்டிடங்களில் ஏறி முக்கிய பிரச்சனைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். அதனாலேயே இவர் மக்களால் பிரான்ஸ் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படுகிறார். என் நிலையில் நேற்று தனது அறுபதாவது பிறந்தநாளை கொண்டாடிய இவர் பிரான்ஸ் தலைநகரான […]
சவுதி அரேபியாவைச் சேர்ந்த அபு அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் 53 மனைவிகள் இருக்கின்றார்கள். இந்த அனுபவம் பற்றி சவுதிக்கு சொந்தமான எம்பிசி தொலைக்காட்சிக்கு அபு அப்துல்லா அளித்துள்ள பேட்டியில் பேசியபோது முதன் முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன் நாங்கள் இருவரும் நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கினோம். ஆனால் திடீரென எங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தொடர்ந்து தகராறு மன வருத்தம் போன்றவை இருந்தது. அதிலிருந்து விடுபடுவதற்காக நான் இரண்டாவது பெண்ணை திருமணம் […]
கென்யாவை சேர்ந்த நபர் ஒருவர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த டேவிட் சகாயோ கலுஹானா என்ற 61 வயது நிரம்பிய இந்த நபர் இதுவரை 15 பெண்களை திருமணம் செய்துள்ள நிலையில் அவர்கள் மூலம் இவருக்கு மகன் மற்றும் மகள் என மொத்தம் 107 பிள்ளைகள் உள்ளன. அதனால் அவரது குடும்பமே உட்டு கிராமம் போன்ற உள்ளது.இதையெல்லாம் விட மிகப் பெரிய […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நெல்சன் கூட்டணியில் ரஜினி நடிக்கும் ஜெய்லர் திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் நடிகர் ரஜினி நடிக்கும் ஆக்சன் படங்களை விரும்பும் ரசிகர்கள் அவருடைய காமெடி […]
ஜப்பானை சேர்ந்த ஷோஜி மோரிமோடோ (36) என்ற இளைஞர் சும்மா இருப்பதே ஒரு வேலையாக செய்து வருகிறார். எந்த வேலையும் செய்ய பிடிக்காது அவர் Do nothing என்ற twitter பேசை தொடங்கியுள்ளார்.தனியாக உணவகம் மற்றும் தியேட்டர் செல்ல வெட்கப்படுபவர்களுக்கு துணையாக சென்று வருவது, அவர்களது சுக துக்கங்களை காது கொடுத்து கேட்பது ஆகியவற்றை கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு வேலையாக செய்து வருகிறார். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.6,600 கட்டணமாக வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த […]
ரஷ்யா-உக்ரைன் மீது போரை தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா 3-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் ரஷ்யா போர் தொடங்கிய நாளிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியை குறைக்க தொடங்கியதால், பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதோடு உக்ரைனில் இருந்தும் தானிய ஏற்றுமதிகள் போன்றவைகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடு என்று அழைக்கப்படும் ஜெர்மனியில் […]
வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் கேஸ் சிலிண்டரின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர் . இந்நிலையில் உலகிலேயே தென் […]
ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள நரசாபுரம் என்ற பகுதியை சேர்ந்த குந்தவி -கோவிந்த் ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் திருமணமாக உள்ள தனது பேத்தி மற்றும் அவரின் வருங்கால கணவருக்காக சங்கராந்தியை முன்னிட்டு தாத்தா -பாட்டி இருவரும் சேர்ந்து தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்தனர். அந்த விருந்தில் 100 வகையான இனிப்புகள், 75 கார வகைகள், 15 ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் கேக்குகள் என மொத்தம் 365 வகையான உணவுகளை ஏற்பாடு செய்து பரிமாறினார். […]
விஜய் டிவி பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதன் மூலம் மக்களை அதிக அளவில் ஈர்த்தும் வருகிறது. அதில் பலரால் விரும்பிப் பார்க்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.முன்னதாக, இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ரோஷினிக்கு பல ரசிகர்கள் இருந்தனர். அதில் அவருடைய எதார்த்தமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் ரோஷினி சில காரணங்களால் பாரதிகண்ணம்மா சீரியல் விட்டு விலகுவதாக அறிவித்தார். மேலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்ததால்தான் சீரியலை தொடர […]
புதுச்சேரி ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர் பவன் குமார். இவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த பிரத்யுஷா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பிரத்யுஷாவின் தந்தை தனது மருமகனுக்கு வித்தியாசமாக ஆடி மாத சீர் கொடுத்த அசத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆடி சீர் கொடுத்துக் கொண்டாடுவதுபோல், தெலுங்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான ஆஷாதம் (ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்) ‘பொனாலு’ என்ற நாட்டுப்புற விழாவை கொண்டாடுகின்றனர். அந்த வகையில், தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக […]
சூரியன் உதிக்கும் நாள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. மனிதர்களின் மீது நண்பகலில் சூரிய ஒளி படும் போது மனிதர்களின் நிழல் தரையில் தெரிவது வழக்கம். ஆனால் தற்போது தமிழகத்தில் குறிப்பிட்ட நாட்களில் நிழல் இல்லா தினம் காணப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது. நிழலில்லா நாட்கள் என்பது நண்பகலில் சூரியன் நமது தலைக்கு மேல் உதிக்கும் அப்படி உதிக்கும்போது நமது நிழல் எந்தப் பக்கமும் சாயாமல் காலடிக்கு நேராக இருக்கும். […]
உலகிலேயே மிகப்பெரிய இதுவரை கண்டிராத 300 கிலோ எடையுள்ள பூட்டை ஒரு வயதான தம்பதியினர் தயாரித்துள்ளனர். எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் அதன் பாதுகாப்பிற்கு நாம் ஒரு சிறிய பூட்டை தான் போடுவோம். ஒரு இடத்தில் புதிதாக குடியேறுபவர்கள் முதற்கொண்டு புதிய வீடு கட்டுபவர்கள் வரை அனைவரும் பூட்டுக்கு தான் முக்கியத்துவம் தருவார்கள். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பழம்பெரும் பூட்டு தொழிலாளி ஒருவர் 300 கிலோ எடையுள்ள பூட்டை உருவாக்கியுள்ளார். மேலும் அவர் தனது மனைவியுடன் சேர்ந்து இதனை […]
பாகிஸ்தான் நாட்டில் திருமண தம்பதிக்கு ஒருவர் ஹெலிகாப்டரில் வந்து திருமண பரிசு கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் எல்லோருக்கும் திருமணம் என்றால் நினைவுக்கு வருவது சாப்பாடு, ஆசீர்வாதம், மலர் தூவுவது மற்றும் மொய் பணம் ஆகியவை தான் நினைவுக்கு வரும்.ஆனால் பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் மண்டி பகுவாஸ்டின் மாவட்டத்தில் ஒருவர் இளம் தம்பதிக்கு திருமண பரிசு கொடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த திருமணத்தில் மாப்பிள்ளையின் சகோதரர் தன் அண்ணனுக்கு சுவாரஸ்யமான பரிசை தரவேண்டும் என்று […]
ராஜஸ்தானில் மதுபான கடையை பெண் ஒருவர் 510 கோடிக்கு ஏலம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நோஹார் கிராமத்தில் உள்ள மதுக்கடையை மாநில அரசு ஆன்லைன் மூலம் இந்த ஆண்டு ஏல முறையில் கொடுக்க முடிவெடுத்தததுள்ளது. மதுக்கடையின் ஏலம் காலை சுமார் 11 மணி அளவில் ரூ .72 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கியது. அதன்பிறகு நீடித்துக் கொண்டே இருந்த ஏலம் ரூ 510 கோடி ரூபாய்க்கு இறுதியாக நள்ளிரவில் […]