Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. நாய் கடித்து 26 ஆடுகள் பலி…. பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?…. கதறி துடிக்கும் விவசாயி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் கிராமத்தில் ஆறுமுகம் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் தும்பரமேடு கிராமத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 நாய்கள் நேற்று ஆறுமுகத்தின் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்தது. அப்போது ஆட்டுப்பட்டியில்  அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை நாய் கடித்து குதறியதில்  20 குட்டிகள் உட்பட 24 ஆடுகள் இறந்து விட்டதாக தெரிகின்றது. இதுகுறித்து ஆறுமுகம் போலீசில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆடு, மாடு குறுக்கிட்டு மோதினால்…. உரிமையாளர்களுக்கு 6,000 அபராதம்: ரயில்வே எச்சரிக்கை…!!!!

ரயில் தண்டபாளங்களில் ஆடு, மாடுகள் திடீரென்று குறுக்கே சென்று மோதுவதால் விபத்து ஏற்படுகிறது. இதனால் ரயில் சேவைகள் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகும் அபாயமும் இருக்கிறது. ரயில் பாதையை ஒட்டி உள்ள பகுதிகளில் தடுப்பு சுவர்கள் அல்லது தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த வெலிகளை அமைப்பதில் கடும் சிக்கலும் இருக்கிறது. சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மீது கன்றுக்குட்டி ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

“என் ஆட்டை திருடியது நீதான்”…? ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது…!!!!

தன்னை ஆடு திருடன் என கூறிய காரணத்தினால் ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றார். இந்த சூழலில் நேற்று அவரது கடையில் இரண்டு ஆடுகள் வழிமாறி சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சின்ன சாமியிடம் அந்த பகுதியை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கியவருக்கு திருஷ்டி சுற்ற ஆட்டுக்குட்டியை கொண்டுவந்த உறவினர்கள்…. பின் நடந்த ஆச்சரிய சம்பவம்….!!!!

கிரிஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரும், இவரது சகோதரியும் சென்ற சில நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கீழே தவறிவிழுந்ததில் முருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் முருகனுக்கு பல பேரின் கண் திருஷ்டி இருந்ததே விபத்துக்கு காரணம் என உறவினர்கள் நம்பியதால் இதற்கு பரிகாரம் செய்ய யோசித்து உள்ளனர். இந்நிலையில் முருகன் திருமணமாகாதவர் என்பதால் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கிணற்றில் தவறி விழுந்த ஆடு”…. தீயணைப்பு நிலைய வீரர்களின் துரித செயல்….!!!!!

புகலூர் நாடார் தெரு பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவருக்கு சொந்தமான ஆடுகள் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தோட்டத்தின் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று அங்குள்ள 50 அடி ஆழம்  உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதை பார்த்த விஜயலட்சுமி அக்கம்பக்கத்தினரை அழைத்து ஆட்டை மீட்க சொல்லி கேட்டுள்ளார். இருப்பினும் மீட்க முடியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா…. 3000 ஆடுகள் பலியிட்டு வழிபாடு….!!!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கண்மாயின் கரையோரத்தில் கோட்டை கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதன்படி கருப்பண்ணசாமி கோவில் ஆடி மாத திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு இரவு 7 மணி முதல் கட்ட பூஜையுடன் திருவிழா தொடங்கியுள்ளது. அதன் பின் ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில்  பக்தர்கள் நேர்த்திக்கடனாக […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வாங்கிய விலையுயர்ந்த ஆடு…. மர்ம நபர்களின் கைவரிசை…. பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் வீட்டில் ரூபாய் 90,000 மதிப்பு உள்ள ஒரு ஆடு திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் அந்த நாட்டின் லாகூர் நகரில் வசித்துவருகிறார். பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள சூழ்நிலையில், 6 ஆடுகளை கம்ரான்அக்மல் வீட்டினர் வாங்கி உள்ளனர். இந்த ஆடுகளை வீட்டின் வெளியில் உள்ள தொழுவத்தில் வைத்து அதனை பாதுகாத்து பராமரிக்க ஒரு உதவியாளரையும் வைத்துள்ளனர். இந்த நிலையில் அவரது வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கி வைத்த […]

Categories
உலக செய்திகள்

அடடே ஆச்சரியம்…. பிறந்து 2 வாரங்களே ஆன ஆட்டுக்குட்டி… இவ்வளவு பெரிய காதா…? வினோத சம்பவம்…!!!!!!

பாகிஸ்தானில் பிறந்து இரண்டு வாரங்களே  ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 சென்டிமீட்டர் நீளம் வரை காது இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாகாணத்தில் முகமது ஹசன் நரிஜோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் அவரது ஆட்டுப்பண்ணையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஆடு ஓன்று  குட்டியை ஈன்று  உள்ளது. அந்த ஆட்டுக்குட்டியின் காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதை விட மிகவும் நீளமாக இருந்தது. இதனை […]

Categories
உலக செய்திகள்

“சேட்டைய பாத்தீங்களா” இந்த ஆட்டுக்கு…. வலைதளங்களில் வைரலாகும் வீடியோ….!!!

மலை இடுக்கில் சிக்கி தவித்த செம்மறி ஆட்டை விலங்குகள் நல ஆர்வலர்கள் இருவர் மீட்கும்  காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள வேல்ஸ் என்னும் நகரில் செங்குத்தான மலை ஒன்று அமைந்துள்ளது. இந்த மலையின் இடுக்கில் செம்மறி ஆடு ஒன்று சிக்கி தவித்துள்ளது. அந்த சமயத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள் இருவர்  அந்த ஆட்டை மீட்க முயன்றுள்ளனர். இதனை அடுத்து செம்மரி ஆட்டை காப்பாற்ற கயிறுகட்டி இறங்கியவரை அது கீழே இழுக்க முயன்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆடுகளைத் திருடி ஆடம்பர வாழ்க்கை….!! பலே திருடர்கள் சிக்கியது எப்படி…?

புதுச்சேரியில் ஆடு திருடிய 2 இளைஞர்கள் போலிஸ்ஸில் பிடிபட்டுள்ளனர். புதுசேரி திருவாண்டார்கோயில் பகுதி இந்திரா நகரில் வசித்து வருபவர் சற்குண பாண்டியன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் இவர் எப்போதும் ஆடுகளை திருவாண்டார்கோயில் ஏரிக்கரை பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம்.இதேபோல் சம்பவத்தன்று மாலை நேரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீடு திரும்பியபோது அதனை சரிபார்த்துள்ளார். அப்போது, சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான கலப்பின ரக ஆடு ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சற்குணப்பாண்டியன் திருபுவனை காவல்நிலையத்தில் […]

Categories
உலக செய்திகள்

வாவ்….! தடுப்பூசியை ஊக்குவிக்க புது முயற்சி…. ஆடுகளை வச்சு சூப்பரா யோசிச்ச பிரபல நாடு….!!

ஜெர்மனியில் தடுப்பூசிகளை ஊக்குவிப்பதற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் தடுப்பூசியின் உருவம் போல நிற்க வைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க் நகர்த்திற்கு தெற்கே உள்ள ஷ்னெவர்டிங்கனில் (Schneverdingen) உள்ள ஒரு வயலில் சுமார் 700 செம்மறி ஆடுகள் தடுப்பூசி வடிவில் நிற்க வைக்கப் பட்டுள்ளன. இதற்காக கிலோ கணக்கில் பாண் துண்டுகள் பயன்படுத்தப்பட்டு ஊசி வடிவில் அடுக்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செம்மறி ஆடுகள் அதை உண்ண வரும்போது அவை எதிர்பார்த்த வகையில் ஊசி வடிவில் நின்று பாண் துண்டுகளை சாப்பிட்டன. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொத்தடிமையா?… 11 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

சிறுவனை கொத்தடிமையாக வேலைக்கு வைத்து இருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பைங்காநாடு கிராமம் அருகே வயல்வெளியில் சிறுவன் ஒருவன் ஆடு மேய்ப்பதாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி கலெக்டர் அழகர்சாமி உத்தரவின்படி சைல்டு லைன் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11 வயது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர்ந்து ஊருக்குள் வருது…. விவசாயிகளின் சாலை மறியல்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

ஊருக்குள் புகுந்து 2 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பசுவபாளையம் கிராமத்தில் கலாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த தோட்டத்தை ஒட்டி வீடு உள்ளது. இங்கு உள்ள கொட்டகையில் கலாமணி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கலாமணி வழக்கம்போல் கொட்டகையில் ஆடுகளை கட்டி வைத்து விட்டு வீட்டுக்கு உறங்கச் சென்றார். இதனையடுத்து கலாமணி மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஒரு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செத்துக் கிடந்த ஆடு…. பதிவாகி இருந்த கால்தடங்கள்…. உறுதிப்படுத்திய வனத்துறையினர்….!!

சிறுத்தை தாக்கி ஆடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வரதம்பாளையம் மகா காளியம்மன் கோவில் தோட்டத்தில் விவசாயி ஞானசேகரன் வசித்து வருகிறார். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஞானசேகரன் ஆடுகளை பார்ப்பதற்காக அது கட்டப்பட்டு இருந்த இடத்திற்கு வந்தார். அங்கு ஒரு ஆடு கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இந்த சம்பவம் நடந்த இடத்தின் அருகில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனவர் பெர்னார்ட் வன ஊழியர்களுடன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வழக்கம்போல் நடைபெற்ற வாரச்சந்தை…. மொத்தம் 21 லட்சம் ரூபாய்…. விலைபேசிய விவசாயிகள்….!!

வழக்கம்போல் நடைபெற்ற பெருந்துறை வாரச்சந்தையில் 21 லட்ச ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை வாரச்சந்தை வழக்கம்போல் நடைபெற்றது. இந்த சந்தைக்கு பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரம், திருப்பூர் மாவட்டம் முத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வெள்ளாடு ஒன்று 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் செம்மறி ஆடு ஒன்று 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. கால்நடைகளுக்கு நேர்ந்த சோகம்…. கவலையில் விவசாயிகள்….!!

தொடர் மழையின் காரணமாக 4 பசுமாடுகள் மற்றும் 2 ஆடுகள் இறந்ததால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா, இடையிறுப்பு மற்றும் சங்கராம்பேட்டை கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அதாவது இடையிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன், கார்த்திக், சோமு ஆகியோருடைய பசுமாடுகள் தொடர்ந்து உயிரிழந்தது. இதனையடுத்து ஒன்பத்துவேலி ஊராட்சி, சங்கராம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சாவித்ரிசின்னப்பன் என்பவரது பசுமாடும் இறந்துவிட்டது. மேலும் அதே ஊரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்ப்பதில் தகராறா…? 2 பேருக்கு நடந்த கொடூரம்…. சேலத்தில் சோகம்….!!

ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குறும்பனூரில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆறுமுகம் வசித்து வருகின்றார். இவருடைய பக்கத்து வீட்டில் விவசாயி வீரப்பன் வசித்து வந்தார். இதில் ஆறுமுகம் அதே பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது வீரப்பனின் விவசாய நிலத்திற்கு பக்கத்தில் ஆறுமுகம் ஆடு மேய்த்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீரப்பன் ஆறுமுகத்திடம் தட்டிக் கேட்டதால் . இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அவரை பார்த்தா சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஆடு திருடிய வாலிபரை இறைச்சி கடை உரிமையாளர் துரத்தி சென்று கையும் களவுமாக பிடித்தார். ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் அழகாபுரியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நம்பியூர்-புளியம்பட்டி சாலையில் இறைச்சிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஆடுகளை வெட்டுவதற்காக சக்திவேல் அதை வாங்கி தன்னுடைய கடையின் பின் பகுதியில் கட்டி வைத்திருந்தார். இதனையடுத்து ஆட்டை கடைக்கு கொண்டுவர சக்திவேல் சென்றார். அப்போது அதில் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை என்று தெரிகிறது. இதனால்  தன்னுடைய நண்பர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்கச்சென்ற பெண்…. 2 பேரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் 32 வயது மகளுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. இதனால் தனது பெற்றோருடன் வசித்து வந்த அந்தப் பெண் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை வீட்டின் அருகில் உள்ள வடவாற்றின் கரையில் மேய்த்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படி வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற அந்த பெண் மீண்டும் வீடு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏன் ஆடு மேய்க்கவில்லை…? வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணலூரில் விவசாயி மாது வசித்து வருகின்றார். இவருக்கு குமார் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் மகன் குமாரை ஏன் ஆடு மேய்க்கவில்லை என்று தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த குமார் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மினி லாரியில் ஏற்றி வந்தோம்…. ஒரே நாளில் 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை….. திரண்டு வந்த வியாபாரிகள்….!!

தர்மபுரி வாரச்சந்தையில் ஒரே நாளன்று 50 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. அப்போது சோலைக்கொட்டாய், இண்டூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஆடுகளை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதனையடுத்து அதிகாலையில் இருந்து ஆடுகளை வாங்குவதற்காக பெரும்பாலான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தைக்கு திரண்டு வந்தனர். இதற்கிடையில் புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய ஆடுகள்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை உட்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடு மற்றும் நாய்ககளை வேட்டையாடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை சார்பாக கூண்டு வைத்தும் அது சிக்கவில்லை. இந்நிலையில் நெய்தாளபுரத்தை புரத்தைச் சேர்ந்த சாந்தப்பா என்பவர் தனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

‘நானும் ஸ்கூலுக்கு வர்ரேன்’… சிறுமியுடன் எட்டு வைத்த குறும்பு ஆடு… வைரலாகும் வீடியோ…!!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி பள்ளிக்குச் செல்லும் பொழுது அவருடன் ஆட்டுக்குட்டியும் பின்னாலே செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதியில் ஒரு சிறுமி பள்ளி சீருடையில் நடைபாதையில் நடந்து செல்கிறார். அந்த சிறுமியின் அருகில் ஒரு வெள்ளை ஆடானது சிறுமி நடையை வேகத்தினால் ஆடு பின்னாலேயே ஓடத் தொடங்குகிறது. எங்கு சென்றாலும் உன்னை பின் தொடர்வேன் என்று சொல்லும் படி அந்த ஆடானது சிறுமி கூடவே பயணம் செய்கின்றது. Two […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“முஸ்லீம் பண்டிகையை முன்னிட்டு” அடித்து பிடித்து வாங்கினர்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ஆடுகளை வியாபாரிகள் அடித்துப் பிடித்து வாங்கி சென்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்த சந்தையில் கருவாடும், ஆடுகளும் வியாபாரிகளுக்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றது. இதனால் சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் நேரில் வந்து பெரும்பாலான ஆடுகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முந்தைய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற சிறுவன்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காயல்நத்தம் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் கூலி தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு 16 வயதுள்ள பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவரது குடும்பத்தினர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். எனவே தற்போது பள்ளிகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பிரசாந்த் ஆடு மேய்க்க சென்று வந்துள்ளான். இதனால் பிரசாந்த் தினசரி காலையில்  காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு மீண்டும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் வைத்து திருட்டு…. வசமா சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு தப்பி ஓடிய ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் புழுதிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் ஒரு ஆட்டுக்குட்டியுடன் சென்றுள்ளனர். இதனையடுத்து சந்தேகத்தின் காவல்துறையினர் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியபோது திடீரென அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மற்ற 2 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது எப்படி நடந்திருக்கும்…? நள்ளிரவு 12 மணிக்கு மேல்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

ஆடு, கோழிகள் மற்றும் வாத்து போன்றவை திடீரென உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள சோழவரம் கிராமத்தில் செல்வகுமார் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடு, வாத்துகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றார். இவர் கடந்த 4-ஆம் தேதி தீவனம் போட சென்றபோது 11 கோழிகள், 4 வார்த்தைகள் கட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து செல்வகுமார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கேட்ட அலறல் சத்தம்….. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வேலூரில் சோகம்….!!

கனமழை காரணமாக மண் சுவர் இடிந்து விழுந்ததில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இந்த கன மழையினால் பத்தலப்பல்லி, மதினாப்பல்லி மலட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள மிட்டப்பள்ளி கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டு அருகில் மண் சுவரில் ஓலைக் கொட்டகை அமைத்து அதில் 25-க்கும் மேற்பட்ட ஆடுகளை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காரில் இருந்து வந்த சத்தம்…. கண்டுபிடித்த பொதுமக்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கார் டிக்கியில் மறைத்து வைத்து ஆடுகளை கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சோமசேகரபுரம் கிராமத்திற்கு மர்ம நபர்கள் சிலர் காரில் வந்து குபேந்திரன் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகளை யாருக்கும் தெரியாமல் கடத்தி அவர்கள் வந்த காரின் பின்பக்கம் உள்ள டிக்கியில் வைத்து அடைத்தனர். மேலும் அவர்கள் சில வீடுகளில் இருந்து 3 ஆடுகளை கடத்தி காரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது சத்தம் கேட்டு சந்தேகமடைந்த மக்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உணவில் கலந்ததால்…. செத்து குவிந்த ஆடுகள்…. அதிர்ச்சியில் விவசாயிகள்….!!

மர்ம நபர்கள் உணவில் கலந்து வைத்த விஷத்தை ஆடு தின்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காமராஜர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயி நிலப் பகுதியில் பல்வேறு ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் பல்வேறு பகுதிகளில் மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு விவசாயி அதிர்ச்சியடைந்தனர். இதனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவை ஒழித்துக்கட்ட…. ஆடுகளை வெட்டி சிறப்பு பூஜை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

வாணியம்பாடி அருகில் கொரோனாவை ஒழித்துக்கட்ட  கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆடுகளை வெட்டி சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் மாவட்ட நிர்வாகம் அதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கிராமத்து மக்கள் தங்கள் பாணியில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டியப்பனூர் ஊராட்சியில் உள்ள துறையேறி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அங்கு இருக்கக்கூடிய தேசத்து மாரியம்மன், […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த ஆடு எப்படி வந்துச்சு… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆடு திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுரண்டை பகுதியில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றி வருகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக இருவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டை ஏற்றிக் கொண்டு வேகமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பெத்த பிள்ளை மாதிரி வளர்த்தேன், எவனோ தூக்கிட்டான்”…. குமுறி அழுத விவசாயி…. மீட்டுக்கொடுத்த ராணிப்பேட்டை காவல்துறையினர்….!!

ராணிப்பேட்டையில் ஆட்டை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை செய்து வருவதோடு மட்டுமல்லாமல் ஆடு வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். இதனால் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை ஒன்றை அமைத்து அதில் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். மேலும் ஆடுகளை பகலில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விட்டு இரவில் கொட்டகைக்குள் பத்தி விடுவது வழக்கம். இந்நிலையில் கொட்டகையிலிருந்து மர்மநபர்கள் ஆடு  ஒன்றை திருடிச் […]

Categories
தேசிய செய்திகள்

ஆவின் நிறுவனம்…. ஆடு, மாடு, கோழி இலவச கொட்டகை… எப்படி பெறுவது?…!!!

ஆவின் துறை மூலமாக ஆடு,மாடு, கோழி வளர்ப்பவர்களுக்கு கொட்டகை அமைத்து தருவதற்கு பண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆவின் துறை மூலமாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பவர்களுக்கு கொட்டகை அமைத்துத் தர பணவுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு ரூ.85,000 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை பண உதவிகள் வழங்கப்படும். வைத்திருக்கும் கால்நடைகளுக்கேற்றார் போல் இந்த தொகையை வழங்குவார்கள். இதற்கான விண்ணப்பங்கள் கால்நடை மருந்தகங்கள் மற்றும் ஆவின் கிளை நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை வாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

 “அதிசயம்” பால் கொடுக்கும் ஆண் ஆடு….. இது தான் காரணம்….. மருத்துவர்கள் தகவல்…!!

ராஜஸ்தானில் ஆண் ஆடு ஒன்று நாள்தோறும் 250 மில்லி லிட்டர் பால் கொடுக்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. கருவில் இருக்கும்போது ஹார்மோன்களில் அல்லது உடலில் உள்ள ஏதேனும் செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது பிறப்பில் ஒரு வித்தியாசமான மாறுதல்களை உண்டாக்கும். உதாரணத்திற்கு இரட்டை தலையோடு விலங்குகள் பிறப்பது. இது விலங்குகளில் மட்டுமல்லாமல் மனிதர்களிடையேயும் இதே போன்ற மாற்றங்கள் கருவிலிருக்கும் போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நடக்கும். அதற்காக அவர்களை வித்தியாச பிறவியாக கருத கூடாது. அந்த வகையில், ராஜஸ்தான் […]

Categories
தேசிய செய்திகள்

ஆடுகளுக்கு கொரோனா…? மேற்க்கண்ட பரிசோதனையில் வெளியான உண்மை….!!

ஆட்டிறைச்சி மூலம் கொரோனா பரவுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அவர் வளர்த்து வந்த சில ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஆடுகளுக்கும் கொரோனா பரவி விட்டதாக அந்த ஊர் மக்கள் கூறிவந்த நிலையில், கால்நடை மருத்துவர்கள் உடனடியாக ஆடுகளை பரிசோதனை செய்தனர். அதில் ஆட்டிற்கு […]

Categories

Tech |