Categories
தேனி மாவட்ட செய்திகள்

இங்கேயெல்லாம் வரக்கூடாது…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. 3 பேர் அதிரடி கைது….!!

 ஆடு மேய்த்ததில் ஏற்பட்ட தகராறில் 2 ஆடுகளை வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சங்கராபுரத்தை சேர்ந்த முத்துகுமார்(26), ஜெயராம்(35), முத்துவேல் (44), முருகேஸ்வரன் (40) ஆகியோர் இணைந்து மரிமூர்புலத்தில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் ஆட்டுக்கிடை போட்டு சுமார் 600 ஆடுகளை மேய்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துகுமார் தென்னந்தோப்பிற்கு அருகே உள்ள நிலத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.  இதனையடுத்து போடிபுதூரை சேர்ந்த ரவிராஜா(29). பிச்சைமணி(35), முருகன்(50) […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அறுந்து கிடந்த மின்சார கம்பி… கொத்து கொத்தாக பலியான ஆடுகள்… கோரிக்கை விடுத்த விவசாயி…!!

அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து 16 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மணக்குளம் கிராமத்தில் இருளாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டு கிடை அமைப்பதற்காக இருளாண்டி தனது 40 ஆடுகளுடன் அச்சங்குளம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள வயல்வெளியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதனையடுத்து சில ஆடுகள் அங்கிருத்து ஓடிய போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து ஒன்றன்பின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்லை… திடீரென தாக்கிய மின்னல்… பரிதாபமாக இறந்த உயிர்கள்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே 5 ஆடுகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக செத்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் முப்பது ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இந்நிலையில் குன்னம் பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அசூர் கிராமத்தின் எல்லை பகுதியான சித்தளிக்கு செல்லும் சாலையில் ராமகிருஷ்ணன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அதில் தனியாக 5 ஆடுகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கார் மோதியதில்…. மேய்ச்சலுக்கு சென்ற 9 ஆடுகள் பலி…!!

மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகள் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மாவட்டம், பூந்தமல்லி மேல்மா நகர் பகுதியில் வசிப்பவர்கள் ராஜி மற்றும் ஜீவா. இவர்கள் இருவரும் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்துள்ளனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில்  மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும். இதையடுத்து அவை பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மேய்ந்து விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி விடுவது வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 30 ஆடுகள்… கடித்து குதறிய குரங்கு கூட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

30 ஆட்டுக்குட்டிகளை குரங்கு கூட்டம் கொடூரமாக கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் சூரியபெட் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அங்கு இருந்த குரங்கு கூட்டம் ஒன்று சுமார் 30 ஆட்டுக்குட்டிகளை கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றவர் 30 ஆட்டுக்குட்டிகளையும் கொட்டகையில் விட்டுவிட்டு திரும்பியுள்ளார். அச்சமயம் அப்பகுதிக்கு வந்த குரங்கு கூட்டம் ஆடுகளை விடப்பட்டிருந்த கொட்டகையை தாக்கத் தொடங்கியது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் குரங்குகளை விரட்ட முயற்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குதித்து ஓடிய மர்ம விலங்கு… அலறியபடி உயிரிழந்த ஆடுகள்…. அச்சத்தில் மக்கள்…!!

தாராபுரம் அருகே விவசாயி தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு கடித்து குதறியதால் 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள பொம்மநாயக்கன் தோட்டத்தை சேர்ந்தவர் பூவேந்திரன் இவர் தனது தோட்டத்தில் பட்டி அடைத்து வைத்து 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பூவேந்திரன் மாலையில் அங்குள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த […]

Categories

Tech |