ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு ஆடு, கோழி பலியிட ஆலோசனை கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வெட்டுவாணம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள எல்லையம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றது. இந்த கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமைகளில் இருந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தேர் திருவிழா, தெப்பதிருவிழா போன்ற விழாக்கள் நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆடி பெருவிழா நடத்துவதற்கு அரசு […]
Tag: ஆடு மாடு’
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகளை பொது இடங்களில் வெட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. முஸ்லிம் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாளை( புதன்கிழமை) கொண்டாடப்பட இருக்கின்றது. இதனால் குர்பானி எனப்படும் வழிபாட்டின்போது ஆடு, மாடு, ஒட்டகம் என்று தங்கள் வசதிக்கு ஏற்ப அவற்றை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். இந்த குர்பானி நிகழ்ச்சியில் பொது இடங்களில் ஆடு, மாடு, ஒட்டகத்தை வெட்ட கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை நாளில் […]
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு 10 ரூபாய் அபராதம் விதிக்கும்படி கமிஷனர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. எனவே சில சமயங்களில் வாகனங்கள் விபத்து ஏற்படுவதனால் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகளை பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும்படி கமிஷனர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். […]
சேதமடைந்துள்ள கால்நடை மருத்துவமனையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பெரும்பாலானோர் கால்நடை வளர்த்து வருகின்றனர். இந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சாத்தனூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது. மேலும் இந்த மருத்துவமனையில் சாத்தனூர், பழையனூர், காக்கையாடி, நாகங்குடி, வடபாதிமங்கலம், புனவாசல், கிளியனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் தாங்கள் வளர்த்து […]